நண்பர்களில் ஒரு சிலர் இப்படி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 30, 2017
பார்வையிட்டோர்: 6,439 
 

“இந்த உலகத்தில் யார் எப்படி பட்டவர்கள், அவர்கள் மனதில் என்ன உள்ளது என்பதை நம்மால் கண்டு பிடிக்கவே முடியாது”பாலு நண்பர்கள் குழுவிடம் வருத்தத்துடன் சொல்லிக்கொண்டிருந்தான்.

“ஒருத்தனை பார்த்தவுடன் அவன் எப்படிப்பட்டவன்னு சொல்லிடுவேன்” அப்படீன்னு சொல்றவங்களை என்ன சொல்லுவே? கிண்டலாய் ராஜேஸ்.

ஏண்டா அவனே மனசு நொந்து சொல்லிகிட்டிருக்கான், அதை ஆமா, இல்லை, அப்படீன்னு சொல்லிட்டு போவியா? அதை விட்டுட்டு, அலுத்துக்கொண்டான் தாமு.உங்களுக்கு எல்லாம் நான் சொல்றது விளையாட்டா தெரியுது, அவங்க அவங்களுக்கு
வந்தா தெரியும் தலைவலி, கொஞ்சம் கோபத்துடன் சொன்னான் பாலு.

பாலு மிகுந்த சங்கோஜி, யாரிடமும் அதிகமாக பழகமாட்டான்,அவன் எங்களுடன் நட்பு ஆனதே பொ¢ய கதை, எங்கள் காலனியில் அவனுண்டு அவன் படிப்புண்டு என்று இருந்தவனை மாலையில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாண்டு கொண்டிருந்த நாங்கள் பிடித்து இழுத்து ஒரு அணியில் சேர்த்துக்கொண்டோம்.முதலில் மறுத்தவன், பின் எங்களிடம் சேர்ந்துவிட்டான். எதற்கெடுத்தாலும் கோபித்துக்கொள்வான், அவனுடைய மன நிலையை சமாதானமாக்கி நல்ல நண்பனாக்குவதற்கே மிகுந்த கஷ்டப்பட்டோம்.

‘ரிலாக்ஸ்” இப்ப என்ன பிரச்சினை உனக்கு, முடிஞ்சால் நாங்க ஹெல்ப் பண்றோம் தாமு சொல்ல மெல்ல கதையை அவிழ்த்தான் பாலு.

இவன் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல உத்தியோகத்தில் உள்ளான்.தினமும் அவினாசி ரோடு வழியாகத்தான் வேலைக்கு செல்வான், இவன் செல்லும் நேரத்தில் பேருந்துக்காக ஒரு பெண் தினமும் நின்று கொண்டிருப்பதை பார்த்திருக்கிறான். அந்தப்பெண்ணை ஏனோ இவன் மனதுக்கு பிடித்து விட்டது. திருமணம் செய்தால் அந்த மாதிரிப்பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு கட்டிவிட்டான்.

ஆனால் அந்தப்பெண் யார்? அவள் முகவரி என்ன என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பது அவனுக்கு குழப்பமாக இருந்தது.ஒரு நாள் அந்தப்பெண் எந்த பேருந்தில் ஏறுகிறாள் என்பதை கவனிக்க ஆரம்பித்தான். அவள் ஒண்டிப்புதூர் செல்லும் பேருந்தில் ஏறியதை பார்த்தான்.அந்த பேருந்தை தொடரவும் பயம். பேசாமல் அன்று வேலைக்கு சென்றுவிட்டான்.

மறு நாள் அதே பேருந்தில் அந்தப்பெண் ஏறும் நிறுத்தத்தின் முன் உள்ள நிறுத்தத்தில் ஏறிக்கொண்டான். அடுத்த நிறுத்தம் வரும் வரை நெஞ்சம் பட படக்க வெளியே பார்த்துக்கொண்டே வந்தான். அந்தோ பா¢தாபம் அன்று அந்தப்பெண் அந்த நிறுத்தத்திலேயே இல்லை, இவனுக்கு பாத்திரத்தில் பால் பொங்கி அடங்கியது போல் படபடப்பு அடங்கியது. ஏமாற்றம் மனதை கவ்வ அடுத்த நிறுத்ததிலேயே இறங்கி விட்டான்.இப்படியாக அவனுக்கு போக்கு காட்டிய அந்தப்பெண் இவனுடைய இடைவிடாத முயற்சியினால் வேலை செய்யும் இடத்தை கண்டு பிடித்துவிட்டான். அடுத்ததாக அந்தப்பெண்ணை பற்றிய விவரங்களை அறிய வேண்டும் எப்படி முய்ற்சி செய்வது?அங்கேதான் சறுக்கிவிட்டான்.

சிறிது நாட்களாக அலுவலகத்தில் “மந்திரித்து விட்ட ஆடு போலே’ என்று சொல்வார்களே அது போல இருந்ததை அவனுடன் பணிபுரியும் நண்பன் ராஜா ராமன் பார்த்தான். அன்பொழுக நண்பா கொஞ்ச நாட்களாகவே நீ தடுமாறிக்கொண்டிருக்கிறாயே? என்ன பிரச்சினை?என்று பாலுவிடம் கேட்க, இல்லையே நான் நன்றாகத்தானே இருக்கிறேன், என்று இவன் மழுப்பலாக பதில் சொன்னான். அப்படியா, அப்படியானால் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?ஏன் காண்டீனில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன் என்றவனுக்கு, காலையில் மதியத்துக்கு சாப்பாடு கொண்டு வந்திருப்பதாக என்னிடம் காண்பித்தாயே, சொன்னவுடந்தான் ஞாபகம் வந்த்து அவன் அம்மா ஊரிலிருந்து வந்து, மதியம் சாப்பாடு கொடுத்துவிட்டது. சாரி..மறந்துட்டேன் என்று சமாளித்தான்.

சரி! நேற்று வண்டியை மறந்து பஸ் ஏற சென்றாயே? அது என்ன மறதி, என்று கேட்கவும் பாலு கொஞ்சம் நெளிந்தான். “எந்த உண்மையையும் நண்பனிடன் மறைக்கக்கூடாது” என்னிடம் சொல் என்று கேட்கவும் பாலு அந்தப்பெண்ணைப்பற்றி சொல்லி அவள் இருப்பிடம் தெரியாமல் விழிப்பதையும் சொன்னான்.

அவ்வளவுதானே இனிமேல் அந்தக் கவலையை என்னிடம் விட்டு விடு, உனக்கு தேவையான விவரங்களை இரண்டு நாட்களில் தருகிறேன். முதலில் அந்தப்பெண் யாரென எனக்கு காட்டு என்றான். மறு நாள் பாலு, ராஜாராமனை அழைத்துக்கொண்டு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அந்தப்பெண்ணை காட்டினான்.கொஞ்ச நேரம் அந்த பெண்ணையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த ராஜா ராமனை, பாலு மெல்ல தோளைத்தட்டி எப்படி இருக்கிறாள் என்று கேட்க அவன் மெல்ல இவன் கைகளை பிடித்து “இனிமேல் உன் கவலை என் கவலை போல” ஒரு வாரத்துக்குள் அனைத்து விவரங்களையும் உனக்கு சொல்லிவிடுகிறேன் என்றான். பாலுவுக்கு மனதில் பெரும் நிம்மதி வந்தது.

பொறுப்பை ராஜா ராமனிடம் விட்டு ஒரு நாள் கழிந்தது, நண்பா இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கேன், உனக்கு சீக்கிரம் சொல்லிடுறேன், சொன்னவனுக்கு மகிழ்ச்சியுடன் புன்னகைத்தான் பாலு. ஒரு வாரம் ஓடியது என்ன ஆச்சு என்று ராஜா ராமனிடம் கேட்கவும் தயக்கம், தினமும் அதே பெண்ணை பார்த்துக்கொண்டுதான் வேலைக்கு செல்கிறான் எப்படியும் நண்பன் கண்டுபிடித்து சொல்லிவிடுவான், அதற்குப்பின் அம்மாவை கூட்டி போய் அந்தப்பெண்ணை அவர்கள் வீட்டில் கேட்க வேண்டும், ஒரு வேளை அவர்கள் மறுத்துவிட்டால்?சே சே என்னை வேண்டாம் என்று சொல்ல அவர்களுக்கு என்ன பைத்தியமா? “சார்” யாரோ கூப்பிட்டது இவன் கனவை கலைத்தது.

பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன். இப்பொழுதெல்லாம் ராஜா ராமன் வேலை முடிந்தவுடன் கிளம்பி விடுகிறான், இவனை பார்த்து கவலைப்படாதே என்று சொல்கிறானே தவிர சாதகமான பதிலை தரமாட்டேனெங்கிறானே, கவலையில் பாலுவுக்கு சாப்பாடே இறங்கவில்லை. ஒரு மாதம் ஓடி விட்டது, ஹ¥ஹ¥ம் இது வரை ராஜா ராமனிடமிருந்து எந்த சாதகமான பதிலும் வரவில்லை, ஒரு நாள் பொறுக்க முடியாமல் கேட்டுவிட்டான், என்ன ஆச்சு ராஜா ராமா?

ராஜா ராமன் ஒன்றும் பேசாமல் இவன் அருகில் வந்து “சாரி நண்பா சொல்றதுக்கு கஷ்டமா இருக்கு, அந்தப்பெண் உனக்கு வேண்டாம், என்றான்.இவனுக்கு தலையில் பெரிய இடியே விழுந்த்து போல் இருந்தது. என்ன சொல்றே, நான் அட்ரசை மட்டும்தான கேட்டேன், அதை கண்டு பிடிச்சு கொடுத்துட்டு போகவேண்டியதுதானே, கோபத்தில் பாலுவுக்கு வார்த்தைகள் வரவேயில்லை. சிறிது நேரம் பாலுவையே பார்த்துக்கொண்டிருந்த ராஜா ராமன் அந்தப்பெண் ஒருத்தனை விரும்பறா, அதை எப்படி சொல்றதுன்னுதான் யோசிச்சுட்டு இருந்தேன். நீயே கோபமா கேட்கும்போது எனக்கு வேற வழி தெரியலை, அந்தப்பெண்ணும் அவனும் பழகிக்கிட்டிருக்காங்க, அடுத்த மாசத்துல அவங்களுக்கு கல்யாணம். இது “அரேஞ்சுடு கம் லவ் மேரேஜ்”. மலை போல திகைத்து நின்ற பாலுவை பரிதாபமாய் பார்த்து மெல்ல விலகினான் ராஜா ராமன்.

கண்களில் கண்ணீருடன் நின்ற பாலுவை தாமு தட்டி, உண்மையிலயே மனசு கஷ்டமா இருக்கு, நாங்க வேணா அந்த பொண்ணுகிட்ட போய் உண்மையிலயே உங்களுக்கு கல்யாணமா? அப்படீன்னு கேட்டு வர்றோம், இல்லையின்னா நாங்க மூணு
பேருமே போய் அந்த பெண்ணோட அட்ரஸ் எல்லாத்தையும் கண்டு பிடிச்சுட்டு வர்றோம்.

அதுக்கெல்லாம் வழியே இல்லை, இப்ப அந்தப்பெண் பஸ்ஸ¤க்கே வரதில்லை, தினமும் அந்த ஆள் கூடத்தான் வண்டியில வேலைக்கு போறா, இதை நானே கண்ணார பார்த்திட்டேன்.மனம் வெறுத்து சொன்னவனை ஆறுதல் வார்த்தை
சொல்ல முடியாமல் தடுமாறி, சரி அந்த ஆளு கிட்டயாவது உன்னுடைய நிலைமையை சொல்லி பாக்கலாமா என்று ராஜேஸ் கேட்டான்.

அந்த ஆளுக்கு எல்லாம் தெரியும் என்றவுடன் மூவரும் அதிர்ச்சியாகி எல்லாம் தெரிஞ்சுமா? என்று கேட்டார்கள். ஆமா நானே கூட்டிட்டு போய்தான காண்பிச்சு கோட்டைவிட்டுட்டு நிக்கிறேன். அவன்தான் அந்த ராஜா ராமன் தான், என்று சொல்லிவிட்டு
கோவென அழுக ஆரம்பித்துவிட்டான்.

அவன் மன நிலை புரிந்து “அவனை நன்றாக அழுக விட்டார்கள்”.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *