சமூக பிரசவம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 12, 2019
பார்வையிட்டோர்: 6,812 
 

தாய்ப்பால் குழந்தைக்கான ஆகாரம் மட்டுமல்ல!

வளர்ச்சிக்கான ஆதாரம்!

தாய்ப் பால் கொடுப்பதால் குழந்தைகளின் நோய் எதிர்பு சக்தி அதிகரிக்கும். என பேசிக்கொண்டே போனார். தாய் சேய் நல விடுதியில். அதன் திட்ட இயக்குநர்.

நல்லாதான் புரியுது, நல்ல விஷயம்தான் ஆனால் வேலைக்குச் செல்வதால் கொடுக்க முடியுமா? அதிலும் தாய்ப்பால் வங்கி எல்லாம் வந்து விட்டதாக கேள்விப்பட்டேன் என சமூக அக்கறையோடு பேசினார்கள். அருகே அருகே கட்டிலில் அமர்ந்து இருந்த பிரசவித்த பெண்கள் சுகன்யா , மற்றும் சாருலதா. இருவருக்கும் முதலாவது பிரசவம். ஒத்த வயதுடன், ஒரே ஊர்.

சுகன்யா பண்ணிரெண்டாம் வகுப்பு வரைப் படித்தவள், கணவரும் எலக்ட்ரீஷயனாக வேலை பார்க்கும் நடுத்தர குடும்பம்.

எங்க வீட்ல ஆணோ,பெண்ணோ,எதுவா இருந்தாலும் பராவாயில்ல, சுகப் பிரசவமானதில் சந்தோஷம்.

என் மாமியார்தான் ஆண்பிள்ளைத்தான் வேணும்னு ஆசைப்பட்டாங்க. அது போலவே ஆண் பிள்ளைப் பிறந்ததால் மகிழ்ச்சி அவங்களுக்கு. என்றாள் சுகன்யா.

ஆணோ,பெண்ணோ நம்ம கையில் என்ன இருக்கு?

உன் கணவர் என்ன சொல்கிறார், சாரு கேட்டாள்.

அவரும் அம்மா போலவே ஆண் வாரிசுதான் வேண்டும் ,

அப்பத்தான் அதிகம் செலவாகாது,இல்லைன்னா நாம உழைக்கிறது எல்லாமே வெளியாட்களுக்குத்தான் போகும்னு சொல்கிறார். என்றாள் சுகன்யா.

அது சரி, பெண் வாரிசு இருந்தா குடும்பப் பொறுப்பு வரும், தந்தைகள் நல்லா சம்பாதிக்கனும்னு நினைப்பாங்க! நல்லா படிக்க வைத்து நல்ல இடத்திலே கட்டிக் கொடுக்கனும், எண்ணி அதுக்காகவே உழைக்க ஆரம்பிச்சிடுவாங்க, அதனாலேதான் உனக்கென்ன அந்த மகாலட்சுமியே வந்து பிறந்திட்டா! அப்படின்னு சொல்வாங்க! என்றாள் சாரு

பெண்னா பிறந்தா அதைக் காப்பாற்றி, கரை சேர்க்கிறது என்பது எவ்வளவு கஷ்டம்னு நாம அனுபவிக்கிறதைப் பார்த்தா தெரியலையா? எத்தனை தடங்கல்கள்,சங்கடங்கள்
பள்ளியிலே ,கல்லூரியிலே, வெளி இடத்திலே ,புகுந்த வீட்டிலே, ஒரு பாதுகாப்பற்ற நிலைமை இருக்கா இல்லையா?

அதுக்கு காரணம் நாம பெண்னா பிறந்ததுதான்னு நினைக்கிறியா?

ஆமாம், என்றாள்.சுகன்யா.

ஆணாக பிறந்தால் இதையெல்லாம் அனுபவிக்க வேண்டாமில்ல.சுதந்திரமாக இருக்கலாம்.. என்றாள்.

ஆண் ஒருவன் சுதந்திரமாக இருக்கிறதுக்கே பெண் தேவைப்படும் போது, பெண்களுக்கான நம்ம சுதந்திரத்தை தருவதற்கு அவங்க யாரு? என்றாள் சாரு.

என்ன சொல்றிங்க?

ஆண்கள் சுதந்திரமா இருக்காங்கிறது ஒரு பாவனை.

வீட்டுக்குப் போனா மனைவினு ஒருத்தி இருக்கா ,தங்கை இருக்கா அம்மானு ஒருத்தி இருக்காளேங்கிற நினைப்பே இல்லாம, மனசுலே வக்ரப் புத்தியை வச்சுகிட்டு சந்தர்ப்பத்திற்கு காத்திருப்பாங்க.

எல்லோருமா அப்படி இருக்காங்க?

இல்லை, இருக்கிறவங்களைச் சொல்கிறேன்.

இது இப்ப மட்டுமல்ல, புராணக் காலத்திலேயும் இருந்தது.

சீதையை ராவணன் கடத்தியதும், இந்திரன் சுயநலத்துடன் செய்த சூழ்ச்சியே ஆனாலும் வஞ்சிக்கப்பட்டது அகலிகை தானே,

இவை எல்லாமே மன வக்ரத்தின் வெளிப்பாடுதானே?

இதனால் அகலிகை தாழ்ந்தவள், ஆனால், இந்திரனுக்கு எந்த தண்டனையும் இல்லை. லக்குவன் சீதைக்குக் கோடு போட்டதும், ராமன் பாதத் துளிப்பட்டு அகலிகை விமோசனம் பெற்றதும் ஆணாதிக்கம் இல்லாமல் என்ன?

அப் பெண்கள் இருவரும் மனத்தால் கெடாதவர்களே!

ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தானே?

பெண்களை அம்பாள் ஆக ஆறுகளாக, மலர்களாக, சித்திரித்து விட்டு, புணரும் பொருளாக மட்டும் பாராமல், உணர்வுள்ள, ரத்தமும், சதையுமாக , சக மனுஷியாக பார்த்து மதித்து நடத்தலே.

பெண்களுக்கான உண்மையான சுதந்திரம். நல்ல பிள்ளைகளை ஈன்று, வளர்த்து, சமூகத்திற்கு பொறுப்பான ஒரு ஆண் பிள்ளையைத் தருவது என்பது அவ்வளவு எளிதல்ல.

பெண் பிள்ளைகள் வளரும் வரை அப்பாவைச் சார்ந்தும், பெரியவளானதும் அம்மாவின் பேச்சை கேட்டு, பணிவும் துணிவும் சாந்தமும் சாமர்த்தியமும், தானாக வந்துவிடும்.

ஆண் பிள்ளை அப்படி இல்ல. வளரும் வரை அம்மாவை சார்ந்தும், வளர்ந்த பின் அப்பாவின் குணமும்,நடையும், பண்பும் வந்து விடுவது இயல்பு. ஆணாதிக்க வளர்ச்சிக்கு இதுவே ஒரு காரணமாக இருக்கிறது.

ஒரு ஆண் பிள்ளையை வளர்த்து எடுப்பதில் தான் அதிக பிரச்சினை உள்ளது. ஆதலால் எனக்கு பெண் பிள்ளையே மகிழ்ச்சி் என்றாள் சாரு.

நீங்க சொல்றதுதான் சரி. என்றாள் சுகன்யா.

பெண் பிள்ளைத்தானே மகிழ்ச்சி தரும்.

இல்ல , பெண்ணை மதித்துப் போற்றும் நடத்தையை என் பிள்ளைக்கு கற்றுக் கொடுத்து சரியான ஆண் மகனாக இந்த சமூகத்திற்காக வளர்த்தெடுப்பேன், என்றாள். அங்கே சமூக பிரசவம் நிகழ்ந்து இருந்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “சமூக பிரசவம்

  1. Mr.Ayyasamy,always notches up.Kudos. pls continue writing the social related issues as said above. cheers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *