ராஜி ரகுநாதன்

 

ராஜி ரகுநாதன்:

​’கணையாழி களஞ்சியம் பாகம் 3′ ல் திரு என். எஸ். ஜகந்நாதன் அவர்கள் மூன்றாவது பத்தாண்டு காலத் தொகுப்பாக தேர்நதெடுத்து கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட 80 கதைகளில் ஒன்று ராஜி ரகுநாதன் எழுதி கணையாழி
​,​
செப்டம்பர் 1989ல் வெளிவந்த ‘வேப்பமரத்தை வெட்டிய போது…’ சிறுகதை. பெரிய ஜாம்பவான்களோடு சேர்ந்து இவர் கதையும் சிறந்த கதைகளுக்கான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவது குறித்து ​மகிழ்கிறார்.

கீழ்வேளூரில் பிறந்து ஹைதராபாத்தில் வாழ்ந்து வரும் பி.ஏ. தமிழ் பட்டதாரியான இவர் விடாமுயற்சியுடன் தானாகவே தெலுங்கு மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுள்ளார். சமஸ்கிருதத்தில் சர்டிபிகேட் கோர்ஸ் படித்துள்ளார்.

பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் தெலுங்கில் எழுதிய ‘ஏஷ தர்ம: சனாதன:’ என்ற தெலுங்கு நூலை தமிழில் ‘இது நம் சனாதன தர்மம்’ ​என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். 2016ல் ருஷிபீடம் ஹைதராபாத் இதனை வெளியிட்டுள்ளது.

பக்கம்: 673. விலை:Rs.350/-
கிடைக்குமிடம்:-
Rushipeetham Charitable Trust,
H.I.G – A- 40,
Dr.A.S.Rao Nagar,
Hyderabad- 500062
Ph: 040-27134557, 27132550, 9849063617.

“சனாதன தர்மத்தின் பல்முனைச் சிறப்புகளும், புராண, இதிகாசங்கள் மற்றும் சாஸ்திர நூல்களிலுள்ள பல்வேறு விஷயங்களும் எளிதில் புரியும் வண்ணம் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.” -ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்.

“வேதம், சமயம், தத்துவங்களில் ஆழ்ந்த ஞானமுடைய திரு சாமவேதம் ஷண்முக சர்மா எழுதிய 195 கட்டுரைகளின் தொகுப்பு. நம் பண்டைய மரபுகளின் மதிப்பையும், முக்கியத்துவத்தையும் உணர்த்தும் கட்டுரைகள், பண்டிகைகள், விசேஷ தினங்களின் உள்ளர்த்தம், தெய்வங்களின் தத்துவம், அவதார மூர்த்திகளின் தாத்பர்யம், புராணங்களின் சிறப்பு, மகான்களின் வரலாறுகளில் பொதிந்த உட்பொருள், ரகசியம் போன்றவற்றின் சரியான கண்ணோட்டம் இந்த நூலில் உள்ளது. இவை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவை. தெலுங்கில் எழுதிய கட்டுரைகளை எளிய நடையில் தமிழாக்கியுள்ளார் ராஜி ரகுநாதன். சிறப்பான தொகுப்பு நூல்”. – தீபம்.

பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் எழுதிய ‘சிவஞானம்’ தெலுங்கு நூல், இவருடைய தமிழ் மொழிபெயர்ப்பில் விரைவில் வெளி வர உள்ளது.

‘மதுரமுரளி’ தெலுங்கு மாத இதழுக்காக கடந்த எட்டு ஆண்டுகளாக ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் ஆன்மீக உரைகளை தெலுங்கில் மொழிபெயர்த்து அளித்து வருகிறார்.

திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளி எழுச்சி – ராஜி ரகுநாதனின் தெலுங்கு மொழி பெயர்ப்பில் ருஷீபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்து தெலுங்கு மக்களின் பேராதரவைப் பெற்று வருகிறது.

தற்சமயம் தெலுங்கு ஆன்மீக நூல்கள் இரண்டின் தமிழ் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.

1988, 89, 90 களில் ராஜி ரகுநாதன் எழுதிய சுமார் 30 சிறுகதைகள் முன்னணி தமிழ் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இவர் எழுதி அனுப்பிய “தாய் மண்ணே வணக்கம்”, மங்கையர் மலர் நடத்திய சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது

கடந்த ஏழு ஆண்டுகளாக ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தில் கட்டுரைகள் எழுதி வருகிறார். சமீப காலமாக தீபம், ஞான ஆலயம், சினேகிதி, அமுத சுரபி இதழ்களிலும் எழுதி வருகிறார்.

தெலுங்கு ஆன்மீக மாத இதழ்களான ருஷீபீடம், ஸ்ரீபீடம் இவற்றில் கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து எழுதி வருகிறார். சுமார் 25 கட்டுரைகளுக்கு மேல் வெளிவந்துள்ளன.

பக்தி டிவியிலும் ஈ டிவியிலும் இருமுறை வரலக்ஷ்மி விரதம் பற்றி தெலுங்கு கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார். ஆல் இந்தியா ரேடியோ ஹைதராபாத்தில் தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் தெலுங்கில் உரையாற்றி வருகிறார்.

தான் வசிக்கும் காலனி வாசிகளை ராம நாமம் எழுத வைப்பதில் மும்முரமாக கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார்.
raji.ragunathan@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *