Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சமூக தண்டனை

 

அந்த பேரூந்தில்; ஆறு மிருகங்கள்; ஒரு பூவையிடம் வெறித்தாண்டவமாடி, சின்னாபின்னமாக்கப்பட்டு இறுதியில் பிணமாகிப்போன,… அந்த கோரசம்பவத்தின் முழுநீள விளக்கமான ‘ரிப்போர்ட்’ தயாரிக்கும் பொறுப்பு ‘இன்வெஸ்டிகேட்டிவ்-ஆபீஸ’ரான என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

பயணிகள் பேரூந்தென்று நம்பி ஏறிய தப்பைத் தவிர வேறொன்றும் செய்யாத அந்த இளம்பெண் பட்ட அவஸ்தையை, சித்ரவதையை ‘பாக்கிஸ்தான்’ வசம் சிக்கிக்கொண்ட இந்திய இராணுவவீரன் கூடபட்டிருக்க மாட்டான்.

கற்பழிக்கப்பட்ட பிறகு அடிவயிற்றிலும், தொப்புளிலும் இரும்புக்கம்பியைத் திருகி ஏற்றி…….நினைக்கவே கடினமாக இருந்தது. என்னால் ரிப்போர்ட் எழுத முடியவில்லை. நரம்பெல்லாம் முறுக்கேற, நரசிம்ம அவதாரமெடுத்து அந்த மனிதமிருகங்களை நார்நாராக கிழித்தெறிய விரல்கள் துடித்தன.

இந்தியா கேட்டிலும், மற்றும் பலஇடங்களிலும் வெளிப்பட்ட மக்களின் கொந்தளிப்பினை உணரமுடிந்தது.

கொடுமை, இதனினும் பெரியகொடுமை எனது இருபது வருட ‘சர்வீஸி’ல் இதுவரைகேட்டிருக்கவில்லை.

கர்பத்திலிருக்கும் பெண்சிசு கூட இந்தியாவில் பிறக்க அச்சப்படும் போலும்.

சமூக தண்டனைதகுந்த தண்டனை கொடுக்கத்தான் வேண்டும். இதுபோன்று இனி ஓருக்காலும், இந்தியாவில் மட்டுமல்ல உலகிலெங்கும் நடக்கக்கூடாது.

தூக்குத்தண்டனை….ம்ஹூம்,….
பத்தோடு பதினொன்றாகிவிடும்.

சமுகப்பிசாசுகளுக்கு நாம் எதிர்பார்க்கிற பாதிப்பை அதுகொடுக்குமா என்பது சந்தேகம் தான். மனித உருவத்தில் நடமாடும் மிருகங்களை, குலைநடுங்க வைக்கும்படியான ஒரு தண்டனையைத் தரவேண்டும். இதுபோன்ற குற்றங்களை நினைக்கவே அஞ்சும்படியான தண்டனையாக அது இருக்கவேண்டும்.

அரேபியநாடுகளில் உள்ளதைப்போன்று மக்கள் முன்னிலையில் அங்கசேதம் முதல் சிரச்சேதம் வரை செய்யலாம். ஆனால் அதுகூடப் போதாது என்று எனக்குத்தோன்றுகிறது.

சமூகதண்டனை கொடுத்தால் என்ன?

சமூகத்திற்குக் களையாக இருப்பவர்களை , களை எடுக்கும் பொறுப்பை சமூகத்திடமே கொடுத்து விடலாமே..

ஆயுள்தண்டனை, தூக்குத்தண்டனை மாதிரி , சமூகதண்டனையையும் நமது நீதித்துறையில் புகுத்தத் தான் வேண்டும்.

சமூகப்பிசாசுகளின் குற்றங்கள், தெளிவுற நீதிமன்றத்தில் நிரூபணமான பின்னர், அவர்களை கொந்தளிக்கும் மக்கள் கூட்டத்திலே எறியவேண்டும்.

அந்த மக்கள் கூட்டத்திலுள்ள ஒவ்வொருவரும், ‘நரசிங்கமூர்த்தி’யாகமாறி, அந்த கொடியவர்களை நார்நாராக கிழிப்பதை, ‘டீவி’ ‘சானல்’களில் காண்பிக்க வேண்டும்.

சமூக தண்டனை2சினம்தணிந்து கூட்டம் பிரிந்துசெல்லும்போது, தரையில், அந்தக்கொடியவர்களின் ஒவ்வொரு அங்கங்களும் சிதறிக்கிடக்கும்… இரத்த வெள்ளத்தில்.

கொடியதண்டனை கொடுப்பதால் மட்டும் குற்றங்களை முழுவதுமாக நிறுத்திவிடமுடியாது,

பொது இடங்களில் ஒவ்வொரு குடிமகனும், கண்திறந்து நடக்கவேண்டும். அவர்களது கண்கள் மாதர்களை கவசம் போன்றுக் கண்காணிக்க வேண்டும். ஏதாவது தவறு நடக்குமென்று தோன்றினால், அவர்களுக்கு உதவ முன்வரவேண்டும்.

இப்படி ஒவ்வொருவரும் நடந்தால் , உங்கள் வீட்டுப்பெண்கள், மற்ற ஏதோ ஜோடிக்கண்களால் பாதுகாக்கப்பட்டு வருவார்கள்.

ஆகவே, பொது இடத்தில் செல்லும்போதாவது, பணத்திலோ, பொருளிலோ உள்ள உங்கள் கவனத்தைத் திருப்பி சுற்றிலும் தென்படும் பெண்களை, சிறுமிகளை கவனியுங்கள். உங்களது பார்வையில், அவர்கள் பாதுகாப்பாக இருக்கட்டும்.

எனது ரிப்போர்ட்டை இப்படி முடித்தேன்,

“கனம் நீதிபதி அவர்களே, இத்தனைக் கொடூரமான கயவர்களுக்கு, முடிந்தால் சமூகதண்டனை கொடுங்கள்.” 

தொடர்புடைய சிறுகதைகள்
எனது தந்தையைவிட ஐந்து வயது மூத்தவர், எனது பெரியப்பா. ஆனால் யாருக்கும் எந்த உதவியும் செய்யாதவர். எச்சில் கையால் கூட காக்கை விரட்டாத ஜாதி. அவருக்கு நல்ல வருமானம் இருந்தது. அரசு வேலை தவிர பெரியம்மாவீட்டு சீதனமாக வயலும்,தோட்டமும் இருந்தது. நல்ல ...
மேலும் கதையை படிக்க...
பெரியப்பா

சமூக தண்டனை மீது 2 கருத்துக்கள்

  1. Sailapathi says:

    ஹா! ஹா! என்ன சார் இது. நீங்க இந்தியாவுலத்தான் இருக்கீங்களா? சமூக பிசாசுகள் இங்கு சாதாரணமாக தேர்தலில் நின்று நாடாளும் நல் அவதாரம் எடுக்கும் இங்கு மக்கள் எல்லோரும் அல்லவா சமூக தண்டனை பெற வேண்டியவர்கள்?

    • ஆசிரியர் says:

      ஓட்டுபோடும்போது கவனமாக இருங்கள். ஓருங்கிணைந்து சமுகத்தை துப்புரவு பண்ணுவோம் வாருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)