குளிச்சு ரெண்டு வாரமாச்சு…பரட்டை முடியுடன் என்னைப் பார்த்தாலே விரட்டி அடிக்கத்தான் எல்லோருக்கும் தோணும்.
அவங்கள சொல்லி தப்பில்லை. என் விதி. பிச்சை சோறு எடுத்து தின்கறதுக்கு சாகலாம்.
போனவாரம்கூட வாழ்க்கையே வெறுத்துபோய் வேகமா வந்த லாரிக்குள்ள பாஞ்சுட்டேன்…
என் நேரம் அப்பவும் சாவு வரலை. லாரிக்காரன் போட்ட பிரேக்ல அநேகமா டயரு தேஞ்சிருக்கும்.
கேவலமா கெட்ட கெட்ட வார்த்தையால என்னை திட்டி தீர்த்துட்டான் லாரி டிரைவர்.
அதுக்கப்புறம் ரெண்டு நாளா எங்கேயும் வெளியில போகல. பிள்ளையார் கோவில்லேயே படுத்துக்கெடந்தேன்.
எத்தனை நாளைக்குத்தான் சோறுதண்ணி இல்லாம இருக்க முடியும்?
அந்த கோவில் அர்ச்சகர் ரொம்ப நல்லவர். கொஞ்சம் சுண்டலும் பொறியும் தந்தார்.
தெருத்தெருவா சோத்துக்கு நாயா அலையறது மாதிரி கஷ்டமான வேலை வேற எதுவுமே இருக்க முடியாது.
இதெல்லாம் அந்த எதிர்வீட்டு வாட்சுமேனுக்கு எங்க புரியப்போகுது? எப்போ என்னை பார்த்தாலும் அடிக்கத்தான் வர்றான் சண்டாளன். இருக்கட்டும் ஒருநாள் அவன உண்டு இல்லன்னு பண்ணிடுறேன்.
சரி சரி நேரமாச்சு பக்கத்து தெருல இருக்கற குப்பைத்தொட்டிக்கு போகணும்… நாய்ங்க வர்றதுக்கு முன்னால போனாதான் சோறு கிடைக்கும்…
வாலாட்டியபடியே வேகமாய் ஓடத்துவங்கினேன் அடுத்த தெரு நோக்கி.
- Monday, September 17, 2007
தொடர்புடைய சிறுகதைகள்
ஜன்னல் வழியே நுழைந்த இளவெயில் வசீகரமானதாக தோன்றியது. இளமஞ்சள் நிறத்தில் மேலெழும்பும் சூரியனும் கடந்து செல்லும் மரங்களும் இவளுக்குள் புதுவித உற்சாகத்தை தந்தன.முதல் முறையாக பெருநகரத்திற்குள் நுழைகிறோம் என்கிற சந்தோஷத்துடன் தொலைதூர வானை ரசித்தபடி அமர்ந்திருந்தாள் . இவள் எண்ணம் முழுவதும் ...
மேலும் கதையை படிக்க...
நாளைக்கு காலைல 6 மணிக்கு ஒரு கொலை செய்யப் போறேன்.
+2 படிச்சுட்டு வேலை தேடி சென்னைக்கு வந்து நாலு மாசமா அலைஞ்சு திரிஞ்சும் ஒரு வேலையும் கிடைக்கல.
திருவல்லிக்கேணில ஒரு மேன்சன்ல தங்கி இருக்கேன். தங்கி இருக்கேன்னு சொல்றது தப்பு. நாலு பேரு ...
மேலும் கதையை படிக்க...
மும்பை,அந்தேரி ரயில்நிலையம்.
கடந்து செல்லும் மின்சார ரயிலின் வேகமும்,கால்மீது நடந்து செல்லும் மனிதர்களின் வேகமும் அவசர வாழ்க்கையை எடுத்துரைத்தது.
வினோத் அமைதியாக சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தான்.
எரிமலையாக வெடித்துக்கொண்டிருந்தாள், வித்யா.
"மொதல்ல என் பிரண்ட் சொன்னப்போ நான் நம்பலை, என் வினோத்தை பத்தி எனக்குத் தெரியும் நீ ...
மேலும் கதையை படிக்க...
1.
புல்லாங்குழல் விற்றுக்கொண்டிருந்தவனின் தோள்களில் சாய்ந்திருக்கும் நீண்ட குச்சியில் ஏராளமான குழல்கள் சொருகி வைக்கப்பட்டிருந்தன.வானம் நோக்கி கைகள் விரித்து மழையே வா என்று அவை அழைப்பது போலிருந்தது அவளுக்கு.
ரயில் நிலையத்தில் ஆதவனுக்காக காத்திருக்கும் அவளை சுற்றிய இந்த நிமிடங்கள் யாவும் ஒருவித கவித்துவ ...
மேலும் கதையை படிக்க...
சென்னை வித்தியாசமான ஊரென்பது வந்து இறங்கிய முதல்நாளே புரிந்துவிட்டது. இறக்கையின்றி பறந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை. நிஜமான புன்னகையை எந்த முகத்திலும் காணமுடியவில்லை. சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்து கிராமத்து நண்பர்களிடம் விடைபெற்று சென்னைக்கு வந்து இறங்கியிருக்கிறேன். அரும்பாக்கத்திலுள்ள நண்பனின் வீட்டை நோக்கி ...
மேலும் கதையை படிக்க...
முத்துப்பேச்சியும் குரோட்டன்ஸ் செடியும்
பற்றி எரியும் காட்டில் திரியும் ஒற்றைமான்
ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு ‘ஏ’ பிரிவு