வெடிகுண்டு

 

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான நியான் விளக்குகள் சிங்கப்பூர் எங்கும் பிரகாசிக்க, என் மனத்தின் இருளை யாரறிவார்? பலத்த யோசனையுடன் கையிலிருக்கும் கருவியை அப்படியும் இப்படியும் திருப்பி பார்க்கிறேன்.

‘எனக்கு ஏன் இந்த சோதனை?’

‘என்னை கைவிடப் போகிறாயா அருந்ததி?’ என்று பழைய கைபேசி என்னைக் கண்டு கண்ணீர் உகுப்பதுபோல எனக்குத் தோன்றுகிறது.

“நானாகவா உன்னை கைவிடுகிறேன்? சிங்கப்பூருலதான் புதுசு புதுசா சட்டம் போடுறாங்களே! உன்னைல்லாம் இனிமே வச்சிருக்க கூடாதுன்னுட்டாங்க” என்றபடி என் ஆதங்கத்தை வாய்விட்டு கூறுகிறேன். நினைவுகளில் சில வருடங்கள் பின்னோக்கிப் போகின்றன.

“அம்மா…. இனிமே நீங்க எங்க போனாலும் இந்த போனை எடுத்துக்கிட்டுதான் போகணும்” என்றவாறு மகள் யாழினி என்னிடம் கைக்கு அடக்கமான போனை திணிக்கிறாள்.

அதைக் கையில் வாங்கும்போதே என் வயிற்றில் கலக்கம் பிறக்கிறது. எப்படி பாவிக்கணும்னு மகள் சொன்னபோதிலும், அதைக்கண்டாலே எனக்கு விதிர்விதிர்க்குது. எப்ப, எந்த நேரத்துல சத்தம் கொடுக்கும்னே தெரியாது. வீட்டில் இருக்கிறப்ப பரவாயில்லை. வெளியில் போகும்போது என்னவோ வெடிகுண்டை மடியில வச்சிருக்கிற மாதிரி. யாரோட போனடிச்சாலும் என்னோடதுதான் அடிக்குதோன்னு இருக்கும். அதிலும் பேருந்து, இரயில்ல போகும்போது… கேக்கவே வேணாம். அந்தப் பக்கம் என்ன பேசுறாங்கன்னும் சரியா கேக்காது. நான் கொஞ்சம் சத்தமா பேசினா, வண்டியில இருக்க அத்தன பேரும் என்னை பாக்கிற மாதிரியே இருக்கும். எதுக்கு இந்தத் தொல்லைன்னு வீட்டைவிட்டு கிளம்புறப்ப ஞாபகமா அதை வீட்ல வச்சிட்டுதான் போவேன். பாலர்பள்ளியில் படிக்கும் பேரன் நாவலன், சொல்லிச் சொல்லி அதன்மீதிருந்த பயம் விலகி பாசமும் பெருகியது.

இந்த நிலையில்தான் 2Gக்கு சிங்கப்பூர் அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்க, புதிய கைபேசியை மகள் வாங்கித் தர, இருளடைந்த முகத்துடன் இப்போது நான். இந்த போன்ல லேசா கை பட்டுட்டாலே என்னன்னவோ கேக்குது… ஆறு மாசத்து புள்ளங்ககூட இதில் பூந்து விளையாடுதுங்க… ம்… எனக்கு ஒண்ணும் பிடிபட மாட்டுது.

‘ஏன்தான் வயசானவங்களுக்கு இவங்க இப்படில்லாம் தொல்லை கொடுக்கிறாங்களோ?’ கண்ணீர் வடிக்கா குறையாய் உள்ளேன்.

“என்ன யோசனை அருந்ததி?” என்று கேட்டவாறு வருகிறாள் தோழி சங்கவி.

“எல்லாம் இந்த கருமம் புடிச்ச போனை பத்திதான்” அலுத்துக்கொள்கிறேன்.

“நானும் அதுக்காகத்தான் வந்தேன். என்னவோ ஸ்கில் பியூச்சரமே (Skill Future) அங்க இதைப்பத்தில்லாம் சொல்லித் தர்றாங்களாம் போலாமா?”

புதுவகை கைபேசிகளின் மின் சேமிப்புபோல கடிதில் காணாமற் போகிறதுஒரு மாதம்.

“அம்மா… உங்களுக்கு பேஸ்புக்லாம் இருக்கா?” விழி விரிய யாழினி.

“ஆமாம்.”

“எப்போதிருந்து?”

“சும்மா தொணதொணக்காதே…. இன்ஸ்டகிராம்ல என்னோட டீனேஜ் போட்டோவுக்கு வந்த கமெண்ட்சை பார்க்கிறேன்.”

“பாட்டி….”

“….”

“பசிக்குது பாட்டி….” அழைக்கிறான் நாவலன்.

“யாழினி பிள்ளையை கவனி” என்கிறேன்.

“என்னம்மா நீங்க எப்பவும் போன்லயே இருக்கீங்க?” எனும் யாழினியைப் பார்க்க எனக்கு எரிச்சல் மண்டுகிறது.

‘எனக்கு தொல்லை கொடுப்பதே இவளுக்கு வேலையா போச்சு’ எண்ணியபடி “டிவிட்டர்ல பிரண்ட்சுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்றேன். உனக்கு என்ன வேணும்?”

“உங்களுக்கு டிவிட்டர்லாமா இருக்கு…?”

“ஆமாம்” சேட்டிங்கை தொடரும் என்னை விநோதமாகப் பார்க்கிறாள் யாழ்.

“எவ்ளோ பிரண்ட்ஸ் உங்களுக்கு?”

“அது இருக்கும் ஆயிரத்துக்கிட்ட.”

“ஆ…”

‘இவள் ஏன் திடீர்னு மயங்கினாள்னு தெரியலையே!’ 

தொடர்புடைய சிறுகதைகள்
“முருகா நீ தமிழகத்திற்குச் சென்று ஏழுமலைகளையும் பார்வையிட்டு வருவதாகத்தானே கிளம்பினாய்? அப்புறம் இங்கு எப்படி...?” “அங்கே ரூபாய்நோட்டு, ஜல்லிக்கட்டு, அரசியல் குழப்பங்களென்று  பிரச்சினைகள் விசுவரூபமெடுத்துள்ளதால் பயணத்தைச் சிங்கப்பூரை நோக்கித் திருப்பினேன் தந்தையே. அதற்கடுத்ததாக நாமனைவரும் அருகிலிருக்கும் பத்துமலைக்கும் சென்று வருவோம்!” “அதுசரி, எங்களை அழைத்ததின் ...
மேலும் கதையை படிக்க...
என்னுள் எழும் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்த வேண்டுமென்பதே என் கொள்கையாகக் கொண்டிருந்தாலும் இப்போது மட்டும் அது இயலாமற் போகிறது. ‘அவளாக ஏதும் சொல்லுமுன் இன்றைக்கு எப்படியாவது அவளிடம் சொல்லிடணும்’ கடந்த சில நாட்களாக எடுக்கும் தீர்மானத்தை இன்றும் எடுத்தேன். “என்ன மச்சி தீபிகா பற்றிய ...
மேலும் கதையை படிக்க...
“விருப்பப்பட்டதை சாப்பிடக்கூட முடியலை...சீ... இதெல்லாம் ஒரு வாழ்வா?!” வழக்கம்போல தோன்றும் எண்ணம் அன்றும் உதித்தது. ரம்யமான மணத்துடன் வகைவகையான உணவுகளைக் காணும்போதெல்லாம் என்னுள் எழும் உணர்வுதான்... ம்.... என்ன செய்வது...? சிவா கேண்டீனுக்குள் வந்து அமர்ந்தான். அங்கிருந்த அனைவரது கண்களும் ஒருவினாடி என்னை ...
மேலும் கதையை படிக்க...
முன்ஜென்மத்து விட்டக்குறை தொட்டக்குறை மேல நம்பிக்கை இருக்கா உங்களுக்கு? இல்லையா? நானும் அப்படித்தான் முன்னல்லாம் நினைச்சுக்கிட்டிருந்தேன். எதுக்கு முன்னன்னா கேக்குறீங்க? எல்லாம் இந்த கல்யாணம்னு ஒண்ணு நடக்கிறதுக்கு முன்னதான். முன்ஜென்மத்து வினை தொடரும்னு அனுபவிச்சவங்க சொன்னா கேக்கணும். என்ன அனுபவம்னு பொத்தாம்பொதுவா ...
மேலும் கதையை படிக்க...
“எனக்கு இந்த ஊர் புதிதாக இருந்தது, அதனால்தான் உங்களையிங்கு வரவழைத்தேன்” என்றபடி குடும்பத்தினரை நோக்கினார் முருகர். “அப்படியென்ன புதுமையைக் கண்டாய்?” வினாதொடுத்தார் சிவபெருமான். “மக்கள் மனநிறைவுடன் வாழ்வதே இக்காலத்தில் புதுமைதானே தந்தையே.” “கார்த்திகேயா, எங்கே உமது வாகனம்?” ஐயமுடன் வினவினார் விநாயகர். “அதையேன் கேட்கிறீர்கள் தமையனே, ஜூரோங் ...
மேலும் கதையை படிக்க...
அமுதே…! தமிழே…!
சொல்லிட்டாளே…
என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க……!
(ஏ)மாற்ற சொன்னது நானா…?
பூலோக சொர்க்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)