என்.சந்திரசேகரன்

கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: May 21, 2023
பார்வையிட்டோர்: 554 
 
 

சிறுகதைகள் தளம் எனக்கு மிகவும் பிடிக்க ஆரம்பித்தது கோ.பி. 2020 (கோவிட் 19) ஆண்டில் தான்.
இந்த காலகட்டத்தில் இந்த இணைய தளமானது ஒரு சிறந்த வழிகாட்டியாக செயல்பட்டது என்று சொல்வது மிகையாகாது. அதற்குப் பின்னரும் அவர்களுடைய வடிவமைப்பு, செயல் முறை போன்றவற்றில் சிறந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைக் கண்கூடாகக் காண்கிறேன்.

இந்தத் தளத்தின் சிறப்பு என்னவென்றால், நமது கதைகளுக்கு ஒரு உயிரூட்டம் ஏற்படுவதாகவே நான் கருதுகிறேன். எதனால்?
1)இந்தத் தளத்தில் பல ஜாம்பவான்களுடன் என்னைப் போன்ற சில பல பாவவான்களும் சேர்ந்து எழுத முயல்வதுதற்குக் கொடுக்கப் பட்ட வாய்ப்பு!.
2)பார்வையாளர்கள் மிகவும் அதிகம். அவர்களுடைய பார்வை விபரங்களைக் கொண்டே நாம் எந்த விதமான கதைகளில் வாசகர்களைக் கவர்ந்திருக்கிறோம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாகத் தெரியும்.
3)கதாசிரியர்களின் அறிமுகம்-மெயில் தொடர்பு விவரம் அபாரம்!
4)கதைப் பட்டியல்
5)பிரசுரமாகும் முறை
6)நமக்கு வரும் செய்திக் குறிப்புக்கள்
7)மேலும் நம்மை எழுதத் தூண்டும் ஒரு ஆர்வக் கிளரல்!
இன்னும் பலப் பல இந்த தளத்தில் உள்ள சிறப்புக்கள்.
இந்தத் தளத்தை எனக்கு அறிமுகப் படுத்திய என் சிறந்த வழிகாட்டி நண்பர், அமரர். எஸ்.கண்ணன் அவர்கள் என்றென்றும் என்னுள் உறைந்து கிடக்கிறார்! அவருடைய சில வழிமுறைகளை நான் பயன்படுத்தினால் பெரிய அளவில் எழுத்தார்வம் விளங்கும் என்பது உறுதி!

என்.சந்திரசேகரன்