ஆனந்தி

கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: May 11, 2023
பார்வையிட்டோர்: 624 
 
 

நான் எழுதுகோல் பிடிக்கத் தொடங்கி, ஒரு யுகம் போலாகிறது. சிறு கதைகளுக்கான இணைய தளம் மூலம் என் கதைகளைப் பெரிதும் வாசித்து அன்பு காட்டும் ரசிகளின் பொருட்டு, இம்மடலை வரைகிறேன். பத்திரிகை உலகில் வேதம் சொல்லி வருகின்ற என் கதைகளுக்கான அங்கீரகாரமும் அமோக வெற்றியும் பூஜ்யம் தான் என்று சொன்னால், இது திடுக்கீடான செய்தியாகும். ஆனால் இது தான் நிஜம். யதார்த்த நிகழ்வுகள் என்பது என்னைப் பொறுத்த வரை, வேத பிரகடனமாக இருக்க வேண்டும் என்ற ஒன்றைத் தவிர,மாயா உலகில் சஞ்சரிக்க விரும்பும் வரட்டு போக்கை, ஒரு போதும் நான் கடைப்பிடித்ததில்லை, இதனால் தான் எனக்கு இந்தப் பின்னடைவு. ஆனல் சிறுகதைகளுக்கான் இணைய தளத்தில் எனது எல்லாக் கதைகளுமே பெருமளவு வாசககர் ஆதரவைப் பெற்று, வீறு நடை போடுவதை ஒருகடவுள் காட்சி தரிசனமாகவே நாம் தரிசிக்கின்றேன். இது என பூரணமான சத்திய இருப்புக் கிடைத்த வெற்றி. சிறுகதைகளுக்கான இணைய தளத்தில் என் வேதம் வாழ்கிறது, என்ற நிதர்ஸ்னமான உண்மையை ஒரு பளிங்கு வார்ப்பாக உங்களுக்கெல்லாம் எடுத்துக் கூறவே இம் மடலை நான் பதிவிடுகிறேன் என் கதைகளை வாசித்து, பதிவிடும் இத் தளத்திற்கும் ஆதரவுக் கரம் நீட்டும் அன்பர்களுக்கும் தலை வணங்கி நான் நன்றி கூறுகிறேன் மிக்க நன்றி! இப்படிக்கு அன்புடன்ஆனந்தி!

ஆனந்தி