கதையாசிரியர் தொகுப்பு: ஹேமா

9 கதைகள் கிடைத்துள்ளன.

கொள்ளெனக் கொடுத்தல்

 

 அந்த பெரியவர் கிட்டத்தட்ட இருபது நிமிடங்களாக எதையோ தேடிக் கொண்டிருந்தார். பாலர் பள்ளிக்கு வெளியே இருந்த இருக்கைகளையும் அதற்கு கீழேயும், சற்று தள்ளி சுவரின் மூலையில் இருந்த பச்சை நிற குப்பைத் தொட்டிக்கு உள்ளேயும் பார்த்த படி இருந்தார். எப்படியும் எழுபது வயதிற்கு மேல் இருக்கும். தலைமுடி கருப்பு நிறத்திலிருந்தாலும் தோல் சுருக்கங்களும், களைப்படைந்த கண்களும் வயதை தெள்ளெனக் காட்டின. காக்கி கால் சட்டையும் ‘அன்பு நிரத்தரமானது’ என்று பொருள்தரும் வார்த்தைகள் கொண்ட வெளிர் நீல டீசர்ட்டையும்


ஒளி தேடும் விட்டில் பூச்சி

 

 ஒன்று அம்மாவைப் போல கோதுமை நிறத்தில் இருந்திருக்கலாம் இல்லையென்றால் நூடுல்ஸ் போல சுருண்டு கிடக்கும் இந்த முடியாவது, நீளமாய், தொடுவதற்கு தேங்காய் நார் போல இல்லாமல், மெத்தென்று இருந்திருக்கலாம். இதையெல்லாம் தான் மாற்ற முடியாது. சரி! உடம்பையாவது குறைக்கலாமென்றால் அதுவும் முடியவில்லை. பட்டினி கிடந்தாலும் குறைவேனா என்கிறது அது. கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்க்கவே சங்கடமாயிருந்தது ஈஸ்வரிக்கு. முக ஜாடையில் தான் நடிகை அருந்ததியை ஒத்திருப்பதாய் இரண்டு வருடங்களுக்கு முன் ஊரிலிருந்து வந்த அத்தை சொல்லியிருந்தார். அப்போதிலிருந்து,


சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்

 

 மஞ்சுளாவிற்கு சாப்பிடுவதில் அதிக விருப்பம் இருந்தது. எதையாவது சாப்பிட்டபடியே இருந்ததால் அவள் பூசின உடல்வாகைக் கொண்டிருந்தாள். சிறுவயதில் அப்பாவோ அல்லது உறவினர்களோ வாங்கி வரும் பொட்டலங்களில் மற்றவர்களை விட தனக்கு கொஞ்சமாவது அதிகம் கிடைக்கும் படி பார்த்துக் கொள்வாள். வீட்டின் கடைசி பெண் என்பதால் அம்மாவின் பங்கில் பாதியேனும் அவளுக்குக் கிடைத்துவிடும். மெல்லிய சவ்வுத் தாளில் கடைக்காரர்கள் சுற்றித்தரும் தீனிகளை விட கவர்ச்சிகரமான தகர டப்பாக்களில் விற்கப்படும் சாக்லேட்டுகளின் மீது அவளுக்கு ஆசை அதிகம் இருந்தது. ஒரு


அம்மா என்றொரு பெண்

 

 அம்மா கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக் கொண்டிருந்தாள். முகம் உணர்ச்சிகளைத் தொலைத்த பாறையைப் போல இறுகிக் கிடந்தது. சமையலறையை ஒட்டி ஒதுக்குப் புறமாய் இருந்த அறையில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள். அவள் படுத்திருந்த பாய் ஓரத்தின் சிவப்புத் துணி தேய்ந்து, நைந்து போயிருந்தது. அவளுடைய மெலிந்த உடலின் மேல் சுருங்கிய தோல் ஒரு போர்வையைப் போல சுற்றிக் கிடந்தது. இரண்டு வாரங்களாய் தண்ணீரைக் காணாத தலைமுடி பஞ்சு பஞ்சாய் திரிந்திருந்தது. பாதங்கள் இரண்டும் தேய்ந்து அடிப்பகுதி தட்டையாய், வெடிப்புகளுடன் காட்சியளித்தது.


கி.பி.4142

 

 ரவி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது, வீட்டு வாசலுக்கு எதிராக அது பளபள வென்று நின்றுக் கொண்டிருந்தது. கம்பித் தடுப்புகளுடன் , சுமார் ஐந்தடி உயரத்தில், ஒரு பெட்டி போல, சுருக்கமாக சொல்வதென்றால் சற்றே பெரிய வெள்ளிக் கூண்டு போல இருந்தது. உள்ளே உட்காருவதற்கு வாகாய் ஒரு இருக்கை. அதற்கு மேலே கி ௪௧௪௨ பி என்று புரிபடாத எழுத்துகள் சிவப்பாக ஒளிர்ந்துக் கொண்டிருந்தன.. அதன் பக்கத்தில் ஒரு பச்சை விளக்கு கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்தது.


நடுத்தர மனசு

 

 ‘எங்க தான் போச்சு அது!’ கை வெங்காயத்தை வெட்டிக்கொண்டிருந்த போதிலும், மனம் மும்மரமாய் தேடிக் கொண்டிருந்தது. “என் பனியன எங்க வச்ச? அலமாரில தேடிப்பார்த்தா காணோமே?” பதில் சொல்வதற்கு முன், “அம்மா என் பென்சிலைக் காணோம், பார்த்தியா?” “ஏண்டா, எழுதினதும் பத்திரமா எடுத்து வையின்னு எத்தன முறை சொல்லியிருக்கேன்! படிச்சா அங்கேயே போட்டுட்டு போயிடற! அப்புறம் எப்படி கிடைக்கும்?” “நான் இங்க தான்ப்பா வச்சேன்.” “அப்ப கால் முளைச்சு ஓடிப்போச்சா?” கை பனியனை எடுத்துக் கொடுத்தபோதும், உரையாடல்களை


சினேகிதியே…

 

 சாம்பல் நிறத்தில் கறுப்பு கரை வைத்த பட்டுப் பாவாடையைக் கட்டிக் கொண்டு சுற்றினால் குடையாய் விரியுமே, அது போல பென்சிலின் சீவல் ஷார்ப்னரிலிருந்து வெளி வந்துக்கொண்டிருந்தது. சிறுமியாய் இருந்த போது இதை சாதம் வடித்த கஞ்சியில் ஊறவைத்து, காய வைத்தால் ரப்பர் கிடைக்கும் என்று செய்து பார்த்தது நினைவுக்கு வந்தது. குண்டூசியில் வண்ண மணியைச் செருகி, ரப்பர்த் துண்டை திருகாணியாய் பொருத்தி, ஒரு ஜோடி பத்து காசுக்கு விற்ற பத்மா தான் அதைச் சொன்னாள். அப்போது மூன்றாவது


கானல் நீர்

 

 சுரேஷ் கூடத்து பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். அவன் கைகள் வாரப் பத்திரிக்கையுடைய முன்னட்டையின் ஓரத்தை சுருட்டி விரித்தபடி இருந்தன. கூடத்து மின்விசிறி கடகட வென்று சத்தம் எழுப்பியபடி ஓடிக் கொண்டிருந்தது. செல்வியக்கா கல்யாணத்திற்கு முன்பு செய்த சம்க்கி குத்திய பந்தும், மணி பொம்மைகளும் அழுக்காய் ஆணியில் தொங்கிக் கொண்டிருந்தன. மேலே ஓடும் மின்விசிறியையும் அதற்கும் மேலாக உத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த பல்லியையும் சற்று நேரம் வெறித்தான். மின்விசிறியின் ஓரத்தில் அழுக்கு பிரிபிரியாய் பார்டர் கட்டியது போல ஒட்டிக் கொண்டிருந்தது.


வார்த்தைகள்

 

 வார்த்தைகள் என்னை மொய்த்தபடியிருந்தன. கூர்மையாய், மொன்னையாய், தட்டையாய், குறுகலாய், நெட்டையாய், தடிமனாய் பல வடிவங்களில் பல்வேறு திசைகளிலிருந்து தொடர்ந்து வந்துக் கொண்டேயிருந்தன. கணவரிடமிருந்தும், பிள்ளைகளிடமிருந்தும், கடைக்காரனிடம் பேரம் பேசும் போதும் வெளிப்பட்ட வார்த்தைகள், தொலைக்காட்சி நாடகத்திலிருந்து புறப்பட்ட வார்த்தைகள், தெருவில் மீன் விற்றுக் கொண்டிருந்தவனின் கத்தலிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் . . . எழுத்துகளாகவும் ஒலி வடிவமாகவும் என் உடலை சுற்றி வந்து படர்ந்துக் கொண்டிருந்தன. காது ஓட்டைக்குள்ளும் மூச்சு துவாரத்தின் உள்ளும் நுழைந்தபடி என் உடலினுள்