கதையாசிரியர் தொகுப்பு: ஹரிசாரதி

8 கதைகள் கிடைத்துள்ளன.

நெஞ்சில் கனத்துடன் ஓர் கடிதம்

 

 வெகு நாட்களுக்கு பிறகு என் நெஞ்சம் கணப்பதை இப்பொது உணர்ந்து கொண்டிருக்கிறேன். தயக்கம் பயம் சோகம் பிரிவு வரும் நேரங்களில் இந்த கணம் எல்லோரையும் போல் என்னையும் தாக்கும். ஆனால் இவை எல்லாம் மறந்தநிலையில் மனதில் நினைத்ததை பேச எப்பொதும் எனக்கு நிழலாய் தொடர என்னுள் சந்தோஷத்தை விதைத்த நெஞ்சக்கணம் மறக்கடித்த ஒரு அழகான உறவில் விரிசல்களின் சாயல்கள் தெரிவதை என் மனம் காட்சியாய் வெளிபடுத்தியதால் அக்கணம் இப்போது என்னை மறுபடியும் சூழ்ந்துகொண்டது. அந்த விரிசலின் காரணம்


ஆனந்தியம்மா

 

 “ஏன் டா இப்படி ஏன் உசுர வாங்குற…. இதுக்கு பேசாம ஆனந்தி கிட்டையே உன்ன விட்டுட்டு வந்துர்கலாம்…” எனக்கு விவரம் புரியாத வயதில் இருந்தே என் அம்மா என்னை திட்டுவதென்றால் இந்த வார்த்தையை உபயோகிக்காமல் இருந்ததில்லை. என்னை திட்டும்போது மட்டுமல்லாமல் எங்களை பற்றி நாங்கள் என்ன பேச ஆரம்பித்தாலும் கடைசியில் ஆனந்தியோடு தான் எங்கள் பேச்சு முற்று பெறும். தாய் மகன் என்ற எங்கள் உறவிர்க்கிடையில் ஆனந்தி என்பவளின் பங்கு மிகப்பெரிது என்பதை என் அம்மா சொல்லி


என் தவறுகளும் அவள் கேட்கும் மன்னிப்புகளும்

 

 “ஐ அம் கோயிங் டு கெட் மேரீட்…. ப்ளீஸ் டோன்ட் ட்ரை டு காண்டக்ட் மீ…. பை பார் எவர்…. சாரி” யாருக்கு வேண்டும் இவளது மன்னிப்பு. என்னை பிரிவதற்கான காரணம் சொல்லாமல் என்னை விட்டு பிரிகிறேன் என்பதை மட்டும் சொல்லி கடைசியில் மன்னிப்பு கோரினால் எல்லாம் முடிந்துவிடுமா இல்லை நான் தான் அவளை மன்னித்து விடுவேனா. ஒருவேளை இதை முகத்திற்கு நேராய் சொல்லியிருந்தாலோ அல்லது அலைபேசியில் பேசி புரிய வைத்திருந்தாலோ மன்னித்திருக்க கூடும் ஆனால் அவள்


குறுஞ்செய்தி

 

 கல்லூரி இறுதி ஆண்டின் தொடக்கத்தில் ஏதோ ஒரு சூழ்நிலையில் இருவருக்கும் பூத்த காதல் முழுதாய் புரிந்தது அவள் ப்ராஜெக்ட் சம்பந்தமாய் சென்னை போன அந்த ஒரு மாத காலத்தில். கிண்டலும் கேலியுமாய் வளர்ந்த எங்கள் நட்புக்குள் காதல் வந்து சிம்மாசனமிட்ட தருணம் புரியாமல் தான் இருந்தோம் அந்த பிரிவு வரும் வரை. சிறு நாட்களின் அவளது பிரிவு எனக்கு வெறுமையை கொடுத்தது. அவளோ சென்னையில் நானோ கோவில்பட்டியில். கல்லூரி செல்லவே பிடிக்காமல் போன அந்த நாட்கள் நத்தை


ஆட்குறைப்பு

 

 ட்ரிங் ட்ரிங்…… ட்ரிங் ட்ரிங்…… எதோ யோசித்து கொண்டிருந்த பத்ரி என்கிற பத்ரிநாதன் தனக்கு அலுவலகத்தில் கொடுக்கப்பட்டிருந்த இண்டர்காமின் சத்தத்தால் தொலைபேசியின் ரீசிவர் எடுத்து சத்தத்துடன் தனது யோசனையையும் துண்டித்தார். தனது காதில் போனை பதித்து “ஹலோ” என்றார். அவரது குரலில் பயம் கலந்த நடுக்கம் தெரிந்தது. எதிர்முனையில் இருந்து என்ன சொல்ல போகிறார்கள் என்பதை அச்சத்துடனும் ஆவலோடும் எதிர்பார்ப்பது அவர் கண்களில் தெரிந்தது. சுருள் நிறைந்த முடியுடன் அழகாய் செதுக்கிய கிருதாவும் மீசையும் அதன் கீழே


சிகரெட் தோழி

 

 நான் பணிபுரியும் அலுவலகத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு சேர்ந்தவள் தான் மம்தா. வந்த நாளிலேயே அனைவரையும் தனது குழந்தைத்தனமான கன்னக்குழி பேச்சில் கவர்ந்தவள். அவள் வரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உடை அதற்கு தகுந்தாற்போன்று சிகை அலங்காரம் அவளை அனைத்து விதத்திலும் அழகாய் காட்டியது. சினிமா கதாநாயகிக்கான அத்தனை லட்சணங்களும் அவளுக்குள் இருந்தது. கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று கேட்கும் அனுராக் காஷ்யப் இவளை பாத்திருந்தால் அனைத்து லட்டும் ஒரு சேர இவளிடமே அவருக்கு


மாயை

 

 “அங்கிள் அங்கிள்….” ஏதோ சிந்தனையில் முழ்கிபோயிருந்த அவனை அந்த மழலை பெண் அவன் பின்னங்கால்களை சுரண்டியபடி அழைத்து கலைத்தாள். பின்னால் திரும்பியவன் அந்த மழலை பெண்ணை கண்டதும் அவளது அழகில் ஈர்க்கப்பட்டான். எதை பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தோம் என்பதையே மறந்தான் அச்சிறு பெண்ணின் கொஞ்சும் முகபாவங்களில். அதே நேரம் அக்குழந்தையின் முகம் பரிச்சயமானதாய் நன்கு பழகிய உணர்வும் அவனுக்குள் பிஞ்சு விரல்களை அவன்முன் ஆட்டி தன்னிடம் அவள் வர சொல்ல அவனும் அவளது கட்டளைக்கு இணங்கி அவளின் உயரத்திற்கு


மஞ்ச தண்ணி

 

 “என்ன மாமா மஞ்ச தண்ணி ஊத்தவா இல்ல சாணிய கரைச்சு ஊத்தவா” கிண்டல் தொனியில் கேட்டாலும் அதில் பழைய காதலும் அன்பும் கலந்தே இருந்தது அவளிடம். இன்று திருமணமாகி வேறொருவன் மனைவி ஆகிவிட்டாலும் அவளின் பால்ய வயது குறும்புத்தனம் மட்டும் இன்னும் குறையவில்லை. ஒரு குழந்தைக்கு தாயாகி போனவள் சற்று உடல் பெருத்திருக்கிறாள் அவ்வளவே. உடலின் மாற்றங்கள் மனதை மாற்றுவதில்லை. வசதி வாய்ப்புகள் பெருகிய பின்பும் அதே மனநிலையில் அவள் இருப்பது தான் ஆச்சர்யம். மஞ்சள் தண்ணீர்