கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீதேவி மோகன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

அன்பின் விழுதுகள் அறுவதே இல்லை

 

 “சந்திரா… சந்திரா… இங்கே…இங்கே…” என கை காட்டிய படி ஓடினாள் கன்னியம்மாள். கூட வந்த அவள் மகள் மங்கைக்கு கோபமாக வந்தது. எதிர் திசையில் சென்றுக்கொண்டிருந்த சந்திரன் பார்த்ததும் தான் நிறுத்தி மூச்சுவிட்டாள். தன் வயதை மறந்து ஓடியது கன்னியம்மாளுக்கே வெட்கமாக தான் இருந்தது. என்ன தோன்றியதோ சந்திரன் இவளை கிராஸ் பண்ண வைக்காமல் அவனே வந்தான். வந்தவுடன் அவன் கைகளைப் பிடித்து “எப்படிடா இருக்க?” என்றாள் முகம் நிறைய பூரிப்புடன். “நல்லா இருக்கேன் அத்தை” என்றான்.


பனித்துளி சுமக்கும் புற்கள்

 

 நெஞ்சம் வலிப்பது போன்று இருந்தது. கல் போன்ற பாரம் நெஞ்சை அழுத்துவது போல் இருந்தது. எட்டு வருட வாழ்க்கை ஒரு நொடியில் மாறிப்போகும் என்று கனவிலும் நினைக்கவில்லை. மனத்திலும் சுமை, கையிலும் சுமை. எப்படி தாங்கப்போகிறேன் கடவுளே! கடவுள்! என்ன மாதிரியான கடவுள் இவர். எல்லா இன்பங்களையும் ஒரு சேரக்கொடுத்து சுகமான ஒரு மனநிலையில் மிதந்து கொண்டிருக்கும் போது அதைத் தட்டி பறித்து எடுத்துப்போகிற கடவுள்,என்ன கடவுள்? நேற்றுக் காலை வரை எல்லாம் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. நன்றாகக்


தீராக்காதல்

 

 இது என்ன மாதிரியான மனநிலை? சந்தோஷமா?சந்தோஷம் என்று எப்படி இதைச் சொல்ல முடியும்? வருத்தத்திற்குரிய செயலல்லவா இது. துக்கமான மனநிலை என்பதா?துக்கம் என்றும் சொல்லமுடியவில்லை. காற்றில் பறக்கின்ற இறகு போல மனது மட்டும் லேசாக இருக்கின்றது. ஆனால் கண்ணீர் தடையின்றி சுரந்து கொண்டே இருக்கிறது. வலி தாங்காமல் வரும் கண்ணீர் அல்ல இது.பதில் சொல்ல முடியாத கேள்விக்கான பாரத்தின் வடிகால் இது. எதிர்காலம் பற்றிய பயம் இது. ஆனால் இந்த தண்டனை எனக்கு வேணும் தான். பாவத்தின்


மழையில் நனையும் புறாக்கள்

 

 திடீரென்று வந்த மழையால் குளிர்ந்திருந்தது பூமி மட்டுமல்ல தீபாவின் மனதும் தான். அலுவலக வேலைக்கு நடுவில் அவள் கண்கள் ஜன்னலில் முட்டி மோதி நின்றது. அங்கே சில புறாக்கள். அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தாள் தீபா. அவை மழையில் நனைந்துகொண்டிருந்தன. நனைந்ததென்னவோ அவை தான். இவளுக்கு உடம்பு சிலிர்த்தது. அவை தலையை உடம்புக்குள் புதைத்தும் தலையைக் குனிந்தும் இறகுகளை மடக்கியும் மழையில் நனைந்தபடி இருந்தன. மழையே ரசிக்க இன்பமானது. மழையோடு இந்த காட்சியும் அவள் மனக்காயங்களுக்கு மருந்தாய் இருந்தது. சந்தியா


பெண் ஜென்மம்

 

 இன்று ஏனோ ஆஸ்பத்திரி கிளம்பும் போதே குழந்தை அடம்பிடித்தாள். என்ன சொன்னாலும் கேட்கவில்லை. மாமியாரும், கணவரும் அவளை சமாதானப்படுத்தி உள்ளே அழைததுச்சென்றனர். குழந்தையின் அழுகை என்னுள் காரணமற்ற கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. சே!என்ன வாழ்க்கை இது? என்ன டாக்டர்? பொல்லாத டாக்டர்! குழந்தையைக் கூட சரியா பார்த்துக்கொள்ள முடியாமல். இந்த பெண் ஜென்மமே இப்படித்தானா? எப்போதும் காலை கட்டிக்கொண்டிருக்கும் சங்கிலிகளுடன். அது அடிமைச் சங்கிலியாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை. அன்பு சங்கிலி, கடமைச் சங்கிலி என்று ஏதோ ஒரு