கதையாசிரியர் தொகுப்பு: ஷன்முகப்ரியா

1 கதை கிடைத்துள்ளன.

கூடு

 

 ஓரு நாள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி கதவைத் தட்டிய பொழுதே, உள்ளிருந்து என் ஆறு வயது இளவரசியின் உற்சாகக் குரல் கேட்டது: “அப்பா வந்தாச்சு…அப்பா வந்தாச்சு…” கதவைத் திறந்தும் திறக்காததுமாய் குதித்துக் கொண்டிருந்தவள், என் கால்களைக் கட்டிக் கொண்டு, “அப்பா இன்னிக்கு பெரிய சர்ப்ரைஸ் இருக்கு உனக்கு” என்றாள். “என்ன குட்டிமா? ஒழுங்கா சாப்டுட்டு அம்மா சொன்னது எல்லாம் கேட்டிட்டிருக்கியா நீ?” என்றேன். “இல்லை” என்றவள் என் கால்களையும் கைகளையும் பற்றி இழுத்தாள். “பெட் ரூமுக்கு வா…”