கதையாசிரியர் தொகுப்பு: வே.முத்துசாமி

1 கதை கிடைத்துள்ளன.

வடக்காச் செல்லி

 

 “”ஏல செல்ராசி… வாய்க்காலுக்கு போம்போது, உப்பாச்சிப் பெயலையும் சேத்துட்டுப் போல. தண்ணீர் நெறைய வந்துச்சுன்னா ஓரமா நின்னு குளிங்கல…” சித்திரை பாட்டி கீழவூட்லர்ந்து காட்டுக்கத்தா கத்துனா. இங்கன உப்பாச்சிங்கறது யாருன்னு கேட்டியோன்னா, எங்க மூக்கம்ம சித்தி மவன். எப்பப் பாத்தாலும் மூக்குல தண்ணீ ஊத்தும் அவனுக்கு. அது காஞ்சிப் போயி, உப்பு பொறிஞ்சி கெடக்கும். அதனால், சேக்காளிப் பெயலுவல்லாம் சேந்து வச்ச பட்டப் பேரு அது. அவனோட நெசப் பேரு மாரி; மாரியப்பன். நாஞ் செலநேரம் டால்டா