கதையாசிரியர் தொகுப்பு: வே.முத்துக்குமார்

2 கதைகள் கிடைத்துள்ளன.

பூத்தலும்… துளிர்த்தலும்…

 

 தனிமை பீடித்திருந்த இந்த இரவில் எங்கள் தெருவில் பாட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டு வாசலிலிருந்து எட்டிப் பார்த்தேன். நாலைந்து வீடு தள்ளியிருக்கின்ற தெருமுனை வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த குட்டி யானை வாகனத்திலிருந்து ‘தணியாத தாகம்’ படத்தில் இடம்பெற்ற ‘பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்..’ பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அநேகமாக அது வானவில் பண்பலை ஒலிபரப்பாக இருக்க வேண்டும். அதில் தான் இரவு பத்தரைக்குப் பிறகு ‘இரவின் மடியில்’ என்ற நிகழ்ச்சியில், இந்த


காலத்தில் தொலைந்தவர்

 

 இரண்டொரு நாட்களாக வெப்பத்தில் தகித்திருந்த நிலத்தை குளிர்விக்கும் படியாக இன்று காலையிலேயே மழை பிடித்துக் கொண்டது. இடியும், மின்னலும் இருநாட்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டாலும் மழை மட்டும் இறங்கவில்லை. புதுக்குடி நிலபட்டா பெயர் மாற்றம் சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலரை சந்திப்பதற்காக காருகுறிச்சி செல்ல வேண்டியதாயிற்று. பரபர நொறுக்கு மண் சகதியாகின்ற வரையில் பெய்து கொண்டிருந்த மழை, தொண்டைக்கு இதமாக லேசான சூட்டில் தேநீர் குடிக்கின்ற தாகத்தை ஏற்படுத்த பஸ் நிறுத்தத்திலிருந்த ஒலைக்கூரை கடைக்குள் தஞ்சமடைந்தேன். கரி அடுப்பின்