கதையாசிரியர் தொகுப்பு: வேல்விழி மோகன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

கொரானா

 

 பெரியவர் கால்களைக் கழுவிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்.. முன்புறம் சதுரமாக மண் தரை.. சாணி போட்டு லேசான தூசியுடன் ஒரு ஒரமாக தண்ணீர் பாத்திரத்துடன் இருந்தது.. சுற்றிலும் நான்கைந்து வீடுகள்.. பழைய நாட்டு ஓடு.. வெளியே வீடுகளுக்கு முன்பு கொஞ்சம் இடம் விட்டு தூண்களுடன் இருந்தது.. இடதுபுறம் முதல் வீட்டில் இருந்தவள் காமாட்சி.. எல்லோருக்கும் பெரியவள்.. தனியாக இருப்பவள்.. உள்ளே நுழைந்தால் முன்புறம் சமையலறை.. பின்புறம் ஒரு படுக்கையறை.. ஒன்றிரண்டு மூட்டைகள்.. தொங்கிக்கொண்டிருக்கும் கயிறில் பழைய துணிகள்.. ஆணிகளில்


ஆட்டோ

 

 பிரபு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தான்.. பேருந்துகளின் வித்தியாசமான வேகமான ஹாரன் சத்தங்கள்.. இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் சீட்டில் இருந்தபடியே வெளியே தலைநீட்டி திட்டிக்கொண்டிருந்தார்கள்.. ஒரு குள்ளமான பெண் பரிதாபமான கண்களுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள்.. எதிரும் புதிருமாக அரக்க பரக்க “அந்த பஸ்ஸூ வந்துருச்சா பாரு..?” என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.. பிரபு ஆட்டோ ஸ்டேண்ட் போகலாம் என்று நினைத்தபோது அந்தாள் வந்து நின்று..;ஆட்டோவா சார்..?” என்றார்.. அவரை மாதிரி பேருந்து வெளியே போகும் கேட்டில் வரிசை போட்டு நின்றிருந்தார்கள்


கிழவி

 

 கொஞ்சமாக இருந்த அந்த இடத்தில் பாட்டி நீட்டி உட்கார்ந்தாள்.. உட்காருவது கஷ்டமாக இருந்தது.. உடம்பெல்லாம் அங்கங்கே வலித்தது.. அருகில் பொது கழிவறை.. நாற்றம்.. வரிசையாக படுத்துக்கிடக்கும் ரிக்சா ஓட்டிகள்.. ஆலமரம்.. பழைய டி.எம்.எஸ் பாடல்.. நாயொன்று தூங்கிக்கொண்டிருந்தது.. டிபன் கடையில் இரண்டு பேர் வெற்றுடம்புடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.. முக்கிய சாலையான அந்த இடத்தில் கொஞ்சம் தள்ளியிருந்த கோயிலின் வாசலில் நான்கைந்து பெண்கள் பூக்கட்டிக் கொண்டிருந்தார்கள்.. அதில் ஒருத்தி “ஏய் கிழவி” என்றாள்.. கிழவி திரும்பவில்லை.. அசதியாக இருந்தது..


அருக்காணி

 

 சைக்கிளை வீட்டருகே நிறுத்திவிட்டு வெளியே கால் கழுவினார் அவர்.. அவருடைய தினசரி பழக்கம் அது.. அந்த ஆடு அவரைப் பார்த்து திரும்பியது.. இரண்டு நாளைக்கு முன்னாடிதான் வாங்கி வந்திருந்தார்.. இரண்டு மாதம் கழித்து விற்றுவிடுவார்.. இதை விற்பதா இல்லை வளர்ப்பதா என்று இப்போதே கணக்கு போட ஆரம்பித்து விட்டார்.. காரணம் அது பெட்டை ஆடு.. குட்டிக்கு விட்டால் விருத்தி ஆகும்.. அவருக்கு பட்டியில் ஆடுகள் இருக்க வேண்டும்.. இப்போது இது மட்டும்தான் இருக்கிறது.. “என்னா..?” என்றார்.. அது


டைரி

 

 அவனுக்கு அடுத்தபடியாக இருந்தவன் பச்சை பெயிண்ட் அடித்த மாதிரி டை கட்டியிருந்தான். உள்ளே போகும் வரை டையை தடவிக்கொண்டே இருந்தான்.. முன்னாடி அந்த கதவுக்கு மேலே சின்ன கண்ணாடியில் வெள்ளெழுத்தில் கோ.நமச்சிவாயம்.., எம்.டி..ஓட்டிக்கொண்டிருந்தது.. இரண்டு பக்கமும் வெள்ளை சோபாக்கள்.. மேலே தொங்கிக்கொண்டிருக்கும் கூம்பு பல்புகள்.. இடதுபுறம் வெள்ளை நிற விரிப்புடன் ஒரு மேசை.. முன்புறம் அதே வெள்ளை நிற சொகுசு இருக்கையில் அந்த சிவப்பு பெயிண்ட் அடித்த உதடுகளுடன் உட்கார்ந்திருந்தவள் “ஆர்.பிரபு..” என்று சொற்களை வழியவிட்டாள்.. இவன்