கதையாசிரியர் தொகுப்பு: வி.ராமநாதன்

1 கதை கிடைத்துள்ளன.

மேலே போகும் சக்கரம்

 

 தூர இருந்து பார்க்கும் போதே, வீடு பிரமாண்டமாக இருந்தது. இரண்டு கிரவுண்டு நிலம்; மாடி வீடு. கட்டடமே மூவாயிரம் சதுர அடி இருக்கும். டைல்சும், மார்பிளும் இழைக்கப் பட்டிருந்தன. வழுவழுவென்று பெயின்ட். தேக்கு மரக் கதவுகள், வாசற்படிகள், ஜன்னல்கள், கிரில் எல்லாம் புதுப்புது டிசைன். வீட்டைச்சுற்றி தோட்டமிருந்தது. செடி, கொடிகள் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தன. தோட்டக்காரன் ஒருவன், நீண்ட ஹோஸ் பைப்பை கையில் பிடித்து, செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான். போர்டிகோவில் கார் ஒன்று நின்றுக் கொண்டிருந்தது;