கதையாசிரியர் தொகுப்பு: வி.உஷா

10 கதைகள் கிடைத்துள்ளன.

இதுவல்ல உன் கனவு

 

 வாசலுக்குப் போய் கையெழுத்து போட்டேன். நியுயார்க்கில் இருந்து என் மகன் எனக்கு இரண்டு ஷர்ட்டுகள் அனுப்பியிருந்தான். அடுத்த வாரம் என் பிறந்தநாள் வருவதை ஞாபகம் வைத்திருக்கிறானே என்று சந்தோஷமாக இருந்தது. உள்ளே போனபோது பெல் அடித்தது. மறுபடி வாசலுக்கு வந்தேன். யாருப்பா? என்றேன். ஒரு இளைஞன் நின்றிருந்தான். நல்ல சிவப்பாக நல்ல உயரத்தில் இருந்தான். தலைமயிரின் கறுப்பும் அடர்த்தியும் மிக வசீகரமாக இருந்தன. திருத்தமான முகத்தில் வியர்வையும் டென்ஷனும் இருக்க, உடையில் நவீனத்துவம் பளிச்சிட்டது. சார்…. அயாம்


மென்மையான நினைவு!

 

 ரயில் நிலையத்தின் பிரத்யேக மனித உறவுக் காட்சிகளை, புன்னகையுடன் பார்த்தவாறு நின்றாள் பாவை. சில அம்சங்கள், தாமாக நல்வாய்ப்பாக அமைந்து விடுவதும் உண்டு. இதோ… இந்த ஓரத்து இருக்கையைப் போல. பொதிகை எக்ஸ்பிரசின் தாலாட்டில் தூங்கி எழுந்து, முதல் விடியல் கீற்றை தரிசிக்க இயலும். நகர்ப்புற வாழ்வின் பரபரப்பில், கடைசியாக எப்போது விடியலைப் பார்த்தோம் என்று நினைத்துப் பார்த்தாள். ஐந்து வருடங்களுக்கு முன்… ஒரு கணம் திக்கென்றுதான் இருந்தது. ரமணனை பிரிந்து, ஐந்து வருடங்கள் ஆகின்றன. அப்படியானால்,


பரிசும் தரிசும்!

 

 வாழைத்தோப்பு, மிக்க குளுமையுடன் நாத முனியை வரவேற்றது. நெருக்கமான வாழைகள், தன் காலுக்குக் கீழே, ஏகப்பட்ட குட்டி வாழைகளுக்கு இடம் கொடுத்து, வாழையடி வாழையாக பல்கிப் பெருகி நிற்கும் வாழைப் பரம்பரை. தன் இலை, கனி, காய், பூ, நார், மடல் என்று, சகலத்தையும் வினியோகித்து, நேயத்திற்கும், காருண்யத்திற்கும், சிறந்த சாட்சியாய் தலை நிமிர்ந்து நிற்கும் வாழைகள். தனபால்! மகனை நினைத்ததும் நெஞ்சம் இளகியது. எப்படிக் கிடந்த நிலம் இது… வெறும் தரிசு. அதிலும் கள்ளியும், எருக்கும்


அன்புக்கு ஆசைப்படு!

 

 தெருமுனையில் திரும்பும் போது, ஒலி பெருக்கியில் யாரோ, ஒரு பேச்சாளரின் சொற்பொழிவின், சில பகுதிகள், தாமாக வந்து, காதில் விழுந்தன. அப்படியே நின்றான் ராஜு. “கல்வியை பெருக்க, ஏழை மாணவர்களுக்கு, மதிய உணவை இலவசமாகத் தந்தார் காமராஜர். அரசு மருத்துவமனைகளில், ஏழைகளுக்கு இலவச சிகிச்சை கொடுத்தார்; வேறு எதையும், அவர் இலவசமாக வழங்கியதே இல்லை. அறிவுக்கு கல்வி தந்து, வயிற்றுக்கு சோறிட்ட அந்த மனிதனைத் தோற்கடித்து, காதுக்கு சுகம் அளிக்கும் பேச்சுக் கச்சேரிக் கலைகளுக்கு, நாம் வாக்களித்தோம்.


தேவதை போல் ஒருவன்!

 

 “இந்தியாவில், ஜனநாயகம் என்பது, இந்திய மண்ணின் மேல், ஒரு மேல் பூச்சாகவே இருக்கிறது; அது, அடிப்படையில் ஜனநாயகத்திற்கு எதிராகவே இருக்கிறது…’ என்ற, முதல் இரண்டு வரிகளே என்னைக் கவர்ந்து விட்டன. மேற்கொண்டு வாசிக்கத் துவங்கும் போது, முகிலன் வந்து, “”அம்மா… உன்னைத் தேடிக்கிட்டு ஒரு அம்மாவும், மகளும் வந்திருக்காங்க!” என்று சொல்லி சென்றான். எழுந்து வந்தேன். பூக்கார செண்பகமும், அவளின் இளம் மகளும் நின்றிருந்தனர். “”வா செண்பகம்!” என்று வரவேற்றேன். “”வணக்கம்மா… இது சுமதி… என் ரெண்டாவது


மீண்டும் ஒருமுறை!

 

 கடைசியாக ஒரு தடவை மலையைப் பார்க்க ஆசைப்பட்டாள் கோகிலா. வண்டி வருவதற்கு இன்னும் நேரமிருந்தது. மலையைப் பார்க்க ரொம்பத் தூரமெல்லாம் நடக்க வேண்டியதில்லை. கொல்லைப் பக்கம் கதவைத் திறந்தால் மலைதான். வேலுவுக்கு ஏனோ அந்த மலை என்றால் ரொம்ப விருப்பம். மலை என்று இல்லை… இயற்கையின் எந்த அம்சமுமே அழகுதான் என்பது அவன் எண்ணம். 20 கி.மீ., தள்ளி இருந்த கூட்டுறவு வங்கியில், அவன் டப்திரியாக வேலை பார்த்தாலும் இந்த கிராமத்து வீட்டை அவனால் விட முடியவில்லை.


எண்ணற்ற நல்லோர் !

 

 வாசல் பக்கம் வந்து நின்றாள் கஸ்தூரி. பார்வை தெருக்கோடியை எட்டியது. ஒரே ஒரு பசுமாடு மட்டும், அன்ன நடை நடந்து வந்து கொண்டிருந்ததைத் தவிர, வேறு இயக்கமில்லை. எதிர் வீட்டு மஞ்சள் மரம் மட்டும், கர்மசிரத்தையாக பூக்களை உதிர்த்துக் கொண்டேயிருந்ததை பெருமூச்சுடன் பார்த்தாள். “”வேலை முடிஞ்சுட்டதும்மா… கிளம்பட்டுமா?” என்று, ஈரத்துணியை காம்பவுண்டில் உதறிப் போட்டபடி கேட்டாள் வேலம்மா. “”கிண்ணத்துல சாம்பார் சாதம் வெச்சிருந்தேனே… சாப்பிட்டியா?” என்று, தெருக்கோடியைப் பார்த்தபடியே கேட்டாள் கஸ்தூரி. “”ரொம்ப ருசியா இருந்திச்சும்மா… அதுவும்,


அன்புக்கும் உண்டோ?

 

 ஆறரை அடித்து விட்டது. அனல் காலம். இப்போதே அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் அறையின் தரையைத் தொட்டு சூடாக்குகிற சூரியன். சுவர்களின் இரவு நேரக் குளுமை, வேகமாய் காணாமல் போய், மெல்ல, மெல்ல சூடு ஏறத் தொடங்குகிற காலை நேரம். ஜகதீசனுக்கு தொண்டை காய்ந்தது. “காபி… காபி…’ என்று, உடம்பில் எத்தனை நரம்புகள் இருக்கின்றனவோ, அத்தனையும் ஏங்கின. நளினியின் குரல், சமையல் அறையில் இருந்து கேட்டது. குரல் அல்ல அது; பாடல். கூர்ந்து கவனித்த போது பாடலின் வரிகள்


மக்களின் தேசம்

 

 அலுவலகம் விட்டு வரும்போதுதான், அந்தக் காட்சிகளைப் பார்த்தேன். நெஞ்சம் கனத்தது. மரங்கள் அடர்ந்த தெரு அது. ஒரு தெரு அல்ல… வரிசையாக நான்கைந்து தெருக்கள். அரசு, நெட்டி, கொன்றை என்று, வலுவான அடர் மரங்கள் நிறைந்த அந்தப் பகுதியில் நடந்து வருவது, மாலை வேளைகளில் எனக்கு மகத்தான அனுபவம். பறவைகளின் உற்சாகக் கூவல்களும், கூடு வந்தடையும் தாய்ப் பறவைகளும், காற்றின் தாளத்திற்கு நாட்டிய மாடும் கிளைகளும் இலைகளுமாக, ஒரு புது உலகத்திற்கு வந்ததைப் போலிருக்கும். அதிலும், அந்த


பூனையும் நிலவும் சாட்சிகளாய்…

 

 அதிக நேரம் அவளைக் காத்திருக்க வைக்காமல் வந்த பேருந்தில் ஏறியபோது, அடுத்த நல்வாய்ப்பாக ஓரத்து இருக்கை கிடைத்தது. உட்கார்ந்தாள். பேருந்து கிளம்பியதும் மெல்ல வந்து முகத்தைத் தொட்ட காற்று, ஏதோ அன்னையின் வருடலைப் போல இருந்தது. “”டிக்கெட்டும்மா…” என்று ஏற்கெனவே கிழித்து வைத்திருந்த பயணச் சீட்டை, பழகிய நடத்துநர் ஒரு புன்னகையுடன் நீட்டினார். “”தாங்ஸ் சார்…” என்று சரியான தொகையைக் கொடுத்தாள். புன்சிரித்தாள். “”நேற்று தவற விட்டுட்டீங்களாம்மா நம்ம பஸ்சை?” “”ஆமாம் சார்! கிளம்புற நேரத்துல மச்சினரும்