கதையாசிரியர் தொகுப்பு: விஸ்வபாலா

1 கதை கிடைத்துள்ளன.

குசலா எங்கே

 

 உமாவுக்குத் தூக்கமே வரவில்லை. இப்படித் தூங்காமல் எத்தனை இரவுகள் போய்விட்டன! தனிமை இப்படியா தூக்கத்தை விரட்டும்? உமாவின் கணவர் விஸ்வம், இரு பிள்ளைகளை உமாவுக்குத் துணையாக விட்டுவிட்டு இறந்துபோனார். அந்தப் பேரிழப்புக்குப் பின்பும் வாழ்ந்தாக வேண்டும் என்ற வைராக்கியத்தையும், சாதிக்க வேண்டும் என்ற வெறியையும் கொடுத்ததே அந்த வாரிசுகள்தான்! ஆபீஸ், வீடு, பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் எதிர்காலம்… இவற்றுக்கு இடையே உழைத்து, நினைத்ததைச் சாதித்து, ஓய்வும் பெற்றுவிட்டாள். இதோ, இன்று… பெரியவன் சுரேஷ் அமெரிக்காவில் இருக்கிறான். பெரிய