கதையாசிரியர் தொகுப்பு: விமலன்

51 கதைகள் கிடைத்துள்ளன.

அருகிலிருந்த டீக்கடை நோக்கி…

 

 நண்பன் போன் பண்ணிய வேளை இவன் வீட்டில் இல்லை.டீக்கடைக்குப் போயிருந்தான்,எங்கு போனாலும் செல்போனை பிள்ளை போல் தூக்கிக் கொண்டு செல்வான்,அருகில் உள்ள கடைதானே என எடுத்துச் செல்லவில்லை, டீக் கடைக்காரருக்கு இவனது செல்போன் மேல் ஒரு கண்,கடைக்குப்போகும் போதெல்லாம் செல்போனை வாங்கி அதன் ஆப்சன்களுக்குள் சென்று பார்த்து விடுவது அவரது வழக்கம், ஒரு நாள் டீப்போட்டுக்கொடுத்து விட்டு செல் போனை வாங்கியவர் யாருக்கும் கேட்காத பேச்சில் “சார் போன் என்ன வெலை சார்”என்றார், இவன் ”இருபத்தியெட்டாயிரத்து முன்னூறு


சிலந்தி வலை தட்டான்கள்…

 

 அந்த நேரத்தில் அவளை அங்கு வைத்துப பார்ப்போமென எதிர்பார்த்திருக்கவில்லைதான். மென் பனி பொழிந்த முன் மாலைப்பொழுது, இன்று பனியின் தாக்கம் சற்று கூடுதலாகவே தெரிந்தது, அழுத்திய உடல் சோர்வை விடவும் பசியும்,ஒண்ணுக்கும் நெருக்கிக்கொண்டு வந்தது, இதில்பசியைதாங்கிக்கொள்ளலாம்,முட்டிக்கொண்டுவருகிறஒண்ணுக்கை என்ன செய்து எங்கிட்டுக்கொண்டு போய் தள்ளுவது எனத்தெரியவில் லை, தள்ள வேண்டாம்,முறையாக கழிக்க எங்காவது ஒரு இடம் வேண்டுமே,,,? சாப்பிடவும் டீக்குடிக்கவும் ரோடு நெடுக்கவும் பிணைந்து இணைத் திருந்த கன்னிகளாய் இங்கு கடைகள் நிறைந்து இருக்கிறதுதான், ஆனால் படக்கென போய்


இட்லித்துணி…

 

 காய வைத்திருந்த இட்லித்துணிகளை எடுத்து அதன் சுருக்கம் நீக்கி மடித்து வைத்துக்கொண்டிருந்தாள் மனைவி. இது நாள்வரை அவள் அவித்தெடுத்த இட்லிகள் அந்தத்துணிகளின் துணையில்லாமல் வெந்ததில்லை,அது போல் அவள் அந்தத்துணிகள் போட்டு எடுக்கும் இட்லியைத்தவிர்த்து வேறெதையும் நினைத்துப் பார்த்ததில்லை. அது அவள் கட்டியிருந்த புடவையைப் போலவே இருந்தது, இட்லித் துணியும்/ இட்லித்துணிகளை அலசி எப்பொழுதும் வெயிலில் காயப்போட மாட்டாள் மனைவி. நிழல்க்காய்ச்சலாக வீட்டிற்குள்தான் காயப்போடுவாள்,அதுவும் சமை யலறை சிங்க் தொட்டியின் மேல்புறமாய் இருக்கிற கம்பியில்தான் உலர்த்தினால்தான் திருப்தி அவளுக்கு/


சிந்தித்தெள்ளிய…

 

 போய் விட்டதா பேருந்து எனக்கேட்க நினைத்த கணத்தில் வந்து நிற்கிறது பேருந்து இளம் செவ்வந்துப்பூ நிறம் காட்டி, புழுதி படர்ந்த சாலைகளில் இது போலான கலர்களில் பேருந்து ஓட்ட தனி தைரியம் வேண்டும்தான்,அது அவர்களுக்கு இருந்தது போலும் என்கிற எண்ணத்துடன் பேருந்தில் ஏறுகிறான், வரட்டுமா அப்ப, எனக் கேட்ட நேரத்தில் தோசை சுட்டுக் கொண்டிருந்தாள் மனைவி. தோசையம்மா தோசை, அம்மா சுட்ட தோசை அரிசி மாவும் உளுந்தமாவும் கொஞ்சம் கோதுமை மாவும் கலந்து சுட்ட தோசை,,,,,என பிள்ளைகள்


சாரல் பூத்த மனது…

 

 மூன்று திசைகளிலுமாய் முகம் காட்டி அமர்ந்திருந்த நெல்லிக்காய்கள் கொஞ்சம் முகம் வாடியும் பழுப்பு வர்ணம் கலந்தும்/ ”எதுக்கு இப்ப இத்தனை நெல்லிக்காய்களப் போட்டு வாங்கி வச்சிருக்க, பேசாம தேவைக்கு மட்டும் எதுவும் வாங்குன்னு சொன்ன கேக்குறீயா, இப்பப்பாரு வேஸ்டாக்கெடக்குதில்ல, இது இனி திங்குறதுக்கு ஆகாது, தூக்கி குப்பையில போட வேண்டியதுதான், என்றான் மனைவியை நோக்கி வார்த்தையையும் பார்வையையும் நிறுத்தாமல்/ ஊதாக்கலரில் காட்டன் சேலை கட்டியிருந்தாள்,ஏன் இப்பிடி வயசான பெரிய வுங்க மாதிரி காட்டன் சேலைகளகட்டிக்கிட்டு,நல்லதா டிசைன் சேலைகள


வேரிலைபட்டு…

 

 இதோ வந்து கொண்டிருக்கிறேன் பறந்து,உடனடியாகவோ இல்லை சற்று தாமதம் காட்டியோ,,,,,/ கோபப்பட்டுக்கொள்ள வேண்டாம் தயவு செய்து/ கோபம் இருபக்கமும் கூர் கொண்ட முள் முனை போன்றது. சமயத்தில் நம்மையே பதம் பார்த்து விடக்கூடும்,கூடும் என்ன கூடும் கண்டிப்பாக பதம் பார்த்து விடும்தான். பார்க்கிற பதம் கைகாலை கிழித்துவிட்டால் பரவாயில்லை, இதயத்தை கிழித் து விடுபையாக சமயத்தில்/ பக்கத்து பக்கத்து வீட்டில் இருக்கிற அக்கா தங்கை இருவரும் சின்னப் பையன்கள் பிரச்சனைக்கா கம்பைதூக்கிக்கொண்டு நின்றார்கள். போன அமாவாசைக்கு முன்


இளைப்பாறும் ஓட்டங்கள்…

 

 ”சண்டைக்கு வந்துட்டாரு சார் அவரு”என அவர் சொன்னபோது மணியைப் பார்க்க எத்தனித்து எட்டிப்பார்க்க முடியாமல் இவன் அமர்ந்திருந்தஇடத்திலிந்து இரண்டாவது இருக்கையில் அமர்ந்திருந்த வரிடம் கேட்கிறான், பணி ரெண்டரை என்கிறார் அவர். நல்லாப்பாருங்க ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கேட்டப்பயும் இதே பணிரெண்டரையத்தான் சொன்னீங்க,இப்பயும் அதத்தான் சொல்றீங்க, இப்பவரைக்கும்அதேபணிரெண்டரையிலயேபிடிவாதம்காட்டிநிக்குதா, கடிகாரம்? இல்லை கடிகாரத்துக்குள்ள இருக்குற முள்ளுக பேரீட்சம் பழக்கடைக்கு போயிருச்சா என இவன் சொன்ன போது படக்கென சிரித்து விட்டார் இரண்டாவது இருக் கைக்காரர்/ அடேயப்பா மனதை அள்ளுகிற


ஒற்றைச்சாளர இருப்பில்,,,

 

 அன்றாடங்களின் நகர்தலில் சிறியதும்பெரியதுமான ஏதாவது ஒரு வேலை நடக்காமல் கூடப் போய் விடலாம். ஆனால்இவன் அந்தக்கடையில் டீசாப்பி டுவது மட்டும் நின்றது இல்லை, ஆற்றிக்கொடுக்கிற அரைக்கிளாஸ் டீக்கு அடகு போய்விட்ட நாவின் சுவை யறும்புகள் என்ன சொல்லியும் கேட்காமல் அந்தக்கடையில் போய்தான் நிலை கொள்கிறது மனோ ரீதியாகவும் உடல் ரீதியாகவும்/ அதற்கு ஒரு காரணம் இருந்தது,அந்தக்கடை டீ மாஸ்டரின் மென் புன்னை கையும் தன் பரிமாறலும் மனம் நினைத்த நேரத்தில் அரைக்கிளாஸ் டீயை சப்தமில்லாமல் ஆற்றிக்கொண்டுவந்து இவன்


நவாப்பழக்கலருக்காரர்…

 

 ”நல்லாவந்துருவேனாண்ணே,,,,,,?”எனக்கேட்டபோதுஅமர்ந்திருந்த இடத்திலிருந் தே உயரம் காட்டி திரும்பிப் பார்த்தார் அண்ணன், அவரதுபார்வையில் நிறை கொண்டிருந்ததோற்றம்முன்நினைவுகளை காட்சிப் படுத்திச்செல்பவையாக/ அப்படி என்ன காட்சிப்படுகிறது அவரிடம் என கேட்ட நாட்களில் ரகசியம் காத்த நினைவாகவும் பூதம் காத்த உயிராகவும் அதிசயம் காட்டி நிகழ்வொ ன்றை அவிழ்த்துவிட்டுச் செல்வார், அவிழ்த்து விடுகிறவைகளை அள்ளி முடியாமலும் அள்ளி முடிய மனமில்லா மலும்விதைகொண்டவைகளை நினை கொண்டே திரிகிரவனாய் ஆகிப் போகி றான். அண்ணன் என்றால்பெயர்எதுவும்இல்லையா என தெரிந்தவர் ஒருவர் வெகு வான ரகசியமேதும் இல்லாமல்


சோப்பிடலின் உருதாங்கி…

 

 மதயானை கடையில்தான் சோப்பு வாங்கினான், மகன் யானை என்பதே மறுவி மதயானை ஆகிபோனது என்று சொல்வார்கள் கடைக்காரைப்பற்றி அந்த ஊர்க்காரர்களிடம் கேட்கிற போது,அவர் பிறந்த போது பிரசவம் பார்த்த தாதி உன் மகன் யானை ஓங்குதாங்காக வருவான், மகன் இனி யானை போல எனதாதி சொன்ன சொல் மறுவி,,,,மறுவி இன்று மதயானையாய் நிற்கிறது, உள்ளபடிக்குமாய் இது மதயானையின் அண்ணன் கடை.பலசரக்கு தவிர மற்ற தெல்லாம் இங்கு கிடைத்தது, என்ன சோப்பு வேணும்…கடைக்காரர். குளியல் சோப்பு…இவன், குளியல் சோப்புல