கதையாசிரியர் தொகுப்பு: வினோத்குமார் சேகர்

3 கதைகள் கிடைத்துள்ளன.

உணர்ச்சிகள்

 

 அவனுக்கு வயது 27 தான் இருக்கும். மூன்று வருடம் இருக்கும்.அவன் தந்தை தான் அறிமுகம் செய்து வைத்தார். அஞ்சு அடிக்கும் குறைவான உயரம். உயரத்திற்கு ஏற்ற திடகாத்திரமான உடம்பு. எண்ணெய் வைத்து படிய வாரிய தலை. நெற்றியில் புருவத்திற்கு மத்தியில் தீக்குச்சியில் வைத்த செந்தூரம். பழைய மாடல் பாகிஸ் பான்ட், கச்சிதமான கோடு போட்ட சட்டை. மேல் சட்டை பையில் கர்சீப் குத்தப்பட்டிருந்து (கே ஜி பிள்ளைகள் போல) சட்டையின் நிறம் மாறுமே தவிர கோட்டின் சைஸ்ஸும்,


இருபது ரூபா நோட்டு

 

 “ஆஹா, யாரு கண்ணுலயும் படாம நம்ம கண்ணுல படுதே, அதிர்ஷ்டம் இன்னக்கி நமக்கு தான் “ பஸ்ல ஏறன உடனே சீட் எங்க இருக்குனு தேடறதுக்குள்ள என் கண்ணுல அது பட்டுடுச்சு. யாரோட ஆதரவும் இல்லாம அனாதையா காந்தி இருபது ரூபா நோட்டுல கீழ கிடக்குறாரு. அப்டியே அங்கேயே சீட்டு போட்டாச்சு. எப்படி அத எடுக்கறதுனு ஆழ்ந்த யோசனை. அப்ப தான் நண்டு சிண்டு வேல செய்ய ஆரமிச்சது. “ யாரும் நம்மள நோட் பண்றாங்களா? “


களவு போன காதல்

 

 “ இன்னக்கி எப்படியாவது லவ்வ சொல்லிடனும். நம்ம ராசிக்கு இன்னக்கி வெற்றி. கண்டிப்பா வெற்றி தான் “ இப்படி காலண்டர்ல வெற்றி சுபம்லாம் பாத்துட்டு முச்சந்தில நிக்கறது போன ஆறு மாசத்துல பன்னெண்டாவது தடவ. இத முச்சந்தினும் சொல்லிட முடியாது. காலேஜ் கேம்பஸ் தான். Y மாதிரி ஓரு பக்கம் லேடீஸ் ஹாஸ்டல். ஒரு பக்கம் காலேஜ். இன்னொரு பக்கம் வெளிய போற வழி. வெளிய போற வழினா மெயின் கேட் கிடையாது. அதுக்கு ஒரு கிலோமீட்டர்