கதையாசிரியர் தொகுப்பு: வித்யாசாகர்

11 கதைகள் கிடைத்துள்ளன.

தூக்கம் நிறைந்த கனவுகள்

 

 “சார் வணக்கம் சார்..” “ம்ம்.. ம்ம்..” “எப்படி இருக்கீங்க சார் சௌக்கியம் தானுங்களே?” “எந்தா வேணும் பர” “சும்மா உங்களைப் பார்க்கலாம்னு வந்தேன் சார்…” “அப்படியா.., நீ பரஞ்சோ மோளே..” காதில் தொலைபேசியை அடைத்துக் கொண்டு, அவன் தன் மகளுடன் பேசத் துவங்கினான். அந்த வயது முதிர்ந்த தமிழர் எதிரே அப்பாவியாய் நின்றிருந்தார். இவன் அவரை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை என்பதால் அவரே மீண்டும் அருகில் சென்று அழைத்தார் – “சார்….” “சொல்லுப்பா டண்டா-பாணி எந்தா வேணும்,


ஒரு தோசையும் தொட்டுக்க நாலு மாத்திரையும்…?

 

 குடும்பம் ஒரு கோவில் என்பார்கள்; அது இந்த குடும்பத்திற்கே பொருந்தும். மூன்று அண்ணன் தம்பிகளும், அவர்களின் மனைவியர் மற்றும் குழந்தைகளும் அவர்களுக்கு நடுவே ஒரு இதய நோயாளியான தந்தையுமென திறக்கிறது இக்கதைக்கான கதவுகள். “ஐயோ… தாத்தா!!!!!!!!!!!!!!!!” ”அம்மா தாத்தா குளிக்கிற அறை கதாவான்டையே விழுந்துட்டாரு” “என்னடி சொல்ற???!!!!” “உண்மையா தாம்மா, வந்து பாரேன்…” “ஐயோ ஆமா…, என்னங்க அப்பா மயக்கம் போட்டு விழுந்துட்டாருங்க” “ஏம்மா இப்படி அலர்ற, ஐயோ அப்பாவுக்கு என்னாச்சு?!!” “தெரிலிங்க, திடீர்னு மயங்கி விழுந்துட்டாருங்க..”


அந்நிய தேசத்தில் அழுகிறான்

 

 தமிழரிடமிருந்து ஏன் இந்தியரிடமிருந்தே வெகுதூரத்தில் நிகழ்கிறது அது. ஒருவன் தலை குனிந்து கஷகஸ்தான் நாட்டின் பரபரப்பான ஒரு வாகன வீதியில் புத்தகம் ஒன்றைக் கையில் விரித்துப் படித்துக் கொண்டே வருகிறான். ஒரு வாகனம் அவனை இடிப்பது போல் வந்து ஒதுங்கிப் போகிறது. தன்னை, ஒவ்வொருவரையும் தனது நாட்டின் ராஜாக்களாகவும், ராணிகளாகவும் பாவித்துக் கொள்ளும் பிரஜைகளைக் கொண்ட அரபு தேசத்தின் வாசம் கொண்ட, ‘ரஷ்ய தேசத்தின் எல்லை தேசம் கஷகஸ்தான். ஏதோ ஒரு அரபு போன்ற மொழி பேசுகிறார்கள்


அவர்களுக்குள் இருப்பது அது இல்லை…!

 

 “நெருப்பு – எரிந்ததடிப் பெண்ணே உன் நினைவு – உலகை மறந்ததடி பெண்ணே அன்பு – கனன்றதடி பெண்ணே ஆயுளைப் பாதியாய் – மௌனம் குறைத்ததடி பெண்ணே உயிரில் – பூத்தாய் பெண்ணே உள்ளம் – நீண்டு நிறைந்தாய் பெண்ணே என் சகலமும் – ஆனாய் பெண்ணே இல்லை யெனக் கொன்று – மீண்டும் ஒரு சின்ன பார்வையில் பிறக்க செய்தாயடிப் பெண்ணே!!” கட்.. கட்.. கட்.. நில்லு நில்லு இது பத்தாது, காதல் கவிதை படிச்சா


கத்தாமா எனும் கண்ணீர்க் கதை

 

 பணத்தை மட்டுமே ஆதாரமாக கொண்டு மனிதம் விற்கும் ஒரு நபரின், மனிதம் ஏன் பணத்திற்கெனில் எதையும் விற்கும் ஒரு நபரின் அலுவல் அது. அங்கே வெளிநாட்டிற்கு ஆட்களை விற்கும் பணி நடந்துக் கொண்டிருந்தது. கேட்டால் வெளிநாட்டில் வேலை செய்ய ஆள் எடுக்கிறோம் என்றார்கள். அதும் “குவைத்திற்கு படித்த பெண்கள் தேவை” என ஆங்காங்கே விளம்பரம் வேறு. மீரா வெகு ஆவலாக அந்த அலுவலை நோக்கி வந்தாள். குடும்ப அழகிற்கு ஒரு உதாரண முகம் மீராவிற்கு. சுண்டினால் சிவக்கும்


இது காமம் சொன்ன கதை

 

 வானத்தை அந்நார்ந்துப் பார்த்து-எச்சில் உமிழும் இளமைப் பருவம். சரியென்று நினைத்துக் கொண்டே சின்னஞ்சிறு தவறுகளோடு வாழ்கையை நகர்த்தும் – சபலமான மனத் தோன்றல். சிரிப்பின் அடையாளம் இதுவென்று கண்டு கொண்டு- சகதிகளில் கால்பதிக்கும், நம் கதாநாயகன் காளமேகம் நடந்து போகிறான். காளமேகத்தைக் கண்டவுடன் பிடித்துவிடும் அத்தனை அழகென்று யாரும் மெச்சிட முடியாது, ஆனால் பழகப்பழக தன் நடத்தையினால் தன்னை அழகாக வெளிப்படுத்திக் கொள்ளக் கூடிய திறமையானவன் காளமேகம். வாழ்கையை எப்படியேனும் ஒழுக்கமாகவே வாழ்ந்து விட வேண்டுமென்றுதான் அவனின்


தாத்தாவுக்கு மூக்குக் கண்ணாடி!

 

 “ஏண்டா இவ்வளோ சம்பாரிக்கிரியே எனக்கிந்த மூக்கு கண்ணாடிய மாத்தி தரக் கூடாதா ..” “மாத்திடலாம் தாத்தா.. தோ இந்த மாசம் .. இந்த மாசம் கண்டிப்பா மாத்திடலாம் தாத்தா ” “போடா.. போடா.. போக்கத்தவனே.., இதைத் தானே எப்பவும் சொல்ற.. பாரு என் கண்ணே அவுஞ்சி போச்சி ” “இந்த மாதம்.. கண்ணாடியோட.. வந்தாதான் இங்க வருவேன் தாத்தா, கண்டிப்பா.. கண்ணாடி கண்ணாடி.. கண்ணாடிதான் இந்த மாசத்துக்கு முதல் பட்ஜெட் சரியா ?” “இதைத் தானே போன


திருநெல்வேலி அல்வா வேணுமா?

 

 பள்ளியில் கட்டுரை போட்டியிலோ ஓவியப் போட்டியிலோ கலந்து கொள்ளும் ஒரு மாணவனை அழைத்து ‘இந்தா நீ உலகத்தின் முதல் பரிசினை பெற்றாய்’ என்று கையில் கொடுத்தால் அந்த மாணவனின் முகத்தில் எத்தனை வெளிச்சங்கள் சிரிப்பாய் பிரகாசிக்குமோ அப்படித்தான் பிரகாசித்தான் இனியன். தமிழினியன் அவன் முழு பெயரென்றாலும் இனியனென்றே நண்பர்கள் அழைத்துக் கொண்டு அவன் பின்னால் ஓடினார்கள். இனியனுக்கு வாழ்வின் அத்தனை வெற்றிகளும் உள்ளங்கையில் விழுந்து கிடப்பதாய் ஒரு சந்தோஷம், வானத்தையும் பூமியையும் மாறிமாறிப் பார்க்கிறான், எதை விலைக்கு


சகுனம் சரியில்லையே…?

 

 அத்தை அவசரம் அவசரமாக வெளியே செல்லப் புறப்பட்டாள். நான் அவள் பணப் பையெல்லாம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு நிற்க, அத்தை தயங்கினாள். என்ன அத்தை என்றேன். “திங்கள் கிழமையில்ல இன்னைக்கு” என்றாள். “அதனாலென்ன அத்தை, உங்களுக்கு நேரம் சரியாக இருக்கும். நீங்க போயிட்டு வாங்க” என்றேன். “இல்லடி, மணி ஒன்பதுக்கு முன்னாடி இருக்கே இப்போ ராகுகாலம்ல?” “ராவுகாலமா இன்னைக்கெங்க, அதலாம் நேத்துதான் இன்னைக்கு செவ்வாய்க் கிழமை அத்தை” “செவ்வாயா? ஐயோ காலையில கோவிலுக்கு போகலையே குமுதா?” “அதலாம்


பயணம்?

 

 “கல்யாணியும் சாந்தியும் நல்ல தோழிகள். அவர்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நடுத்தரக் குடும்பத்தை சார்ந்தவர்கள். அலுவல் முடிந்து, எப்பொழுதும் அவர்கள் பேருந்தில் பயணம் செய்துதான் வீட்டுற்கு போவார்கள். அப்படி ஒரு நாள் பயணத்தின் போது – “கல்யாணி சாந்தியிடம் கேட்கிறாள் நேற்று செய்தி பார்த்தியாடி, தேர்தல் நெருங்குகிறது ஆகவே சாலை சீரமைப்பு மற்ற எல்லாம் பணிகளும் நம் நாட்டில் விரைவாக செய்து கொண்டு வருகிறார்கள் தெரியுமா” “அப்படியா” என்றால் சாந்தி. “ஆம் நம் நாடு மிகவும்