கதையாசிரியர் தொகுப்பு: விஜயலட்சுமி ஸ்ரீதர்

3 கதைகள் கிடைத்துள்ளன.

மோதல்

 

 “மேகலா வரவில்லை. எதிர்பார்த்துக் காத்திருந்ததில் முக்கால் மணி நேரம் ஆபீசுக்கு லேட். வீட்டு சாவி எதிர் வீட்டில்.” டீ ப்ரேக்கில் வாய்ஸ் பார்ட்னெர் சஞ்சனா விடம் “எக்ஸ்க்யுஸ் மீ” என்றுவிட்டு கச்சிதமாய் பிரேமிடமிருந்து வந்த டெக்ஸ்ட் மெசேஜை வாசித்தாள் வாணி. இன்னைக்கும் மேகலா லீவா. இந்த வேலைக்காரர்கள் தொந்தரவிலிருந்து என்றுதான் விடுதலையோ என்றிருந்தது வாணிக்கு. அடக்கமான இரண்டு பெட்ரூம் ப்ளாட்; எல்லா வேலைக்கும் மெஷின். இருந்தும் கடந்த வாரம் முழுக்க மேகலா வரவேயில்லை. ஆபிஸ் முடிந்து வீட்டிலும்


விதை

 

 ஆளில்லாத தார் சாலை திரௌபதியின் விரிந்த கூந்தல் போல முடிவில்லாமல் நீண்டு கிடந்தது. லக்ஷ்மியின் மனதில் ஆயிரத்தெட்டு குழப்பங்கள். சட்டென மிதுனையும் மைத்ரியையும் அம்மாவிடம் தள்ளிவிட்டு கிளம்பியது தவறோ? இரண்டு வருட சிங்கப்பூர் வாழ்க்கையில் குழந்தைகளின் உணவுப் பழக்கங்கள் முற்றிலுமாய் மாறி இருந்தன. “உன் பிள்ளைகள் நூடுல்ஸையும் பாஸ்தாவையும் தவிர வேறு ஒண்ணையும் தொட மட்டேங்கரதுகள். அரிசி சாதம் விஷமா இருக்கு…மணிக்கு வயதுக்குள்ள போயிட்டா பாத்துக்கறதுல என்ன கஷ்டமிருக்கு லக்ஷ்மிம்மா?” என்று அங்கலாயித்தபடி இருப்பாள் பாவம். யாரையாவது


கள்ளநெருப்பு

 

 “எல்லாரும் செட்டிலிருந்து பேக் அப் பண்ணுங்க. ஹீரோ போர்ஷான்ஸ் நாளைக்குத்தான்…” டைரக்டரின் குரல் அயர்வாய்க் கேட்டது. ஆர்யன் கேரவானில் ஏறி கதவுகளை அறைந்து மூடினான். சேரில் அமர்ந்து கால்களை நீட்டி பொத்தானை அமுக்கிவிட்டு ஜன்னலை லேசாய் திறந்து விட்டான். சேர் நீண்டு படுக்கை ஆனது. மெல்ல கண்களை மூடி படுத்துக் கொண்டான். செட்டில் உள்ள சாமான்களை அப்புறப்படுத்தும் சத்தம் மற்றும் ஆட்களின் குரல் கலவையாய் கேட்டது. விலைமதிப்புள்ள சாண்டிலியர் விழுந்ததில் செட்டின் பிரதான தளத்தில் ஏகப்பட்ட நாசம்.