கதையாசிரியர் தொகுப்பு: விசாலம் முரளிதரன்

12 கதைகள் கிடைத்துள்ளன.

உளைச்சல்

 

 போன் எடுத்து கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் பார்த்தார் ராஜாராம். எதாவது மிஸ்ட் கால்ஸ் இருக்கிறதா என்று. “எவ்ளோ தடவ எடுத்துப் பார்த்தாலும் ஒண்ணும் இருக்காது. போன் வரல. நான் இங்கயே தானே இருக்கேன். உங்களுக்கு வேணா காது கேக்காது. எனக்கு கேக்கும்”. மனைவியின் குரலில் ஒரு எகத்தாளம். “சே என்ன பசங்ககளோ. கொஞ்சம் கூடப் பொறுப்பு இல்லாம”, ராஜாமணி குரலில் ஒரு வருத்தம். “அன்னபூரணி , கொஞ்சம் தண்ணி கொண்டு வா” என்றபடி ஈசி சாரில்


தண்டனை

 

 இந்த வாட்ஸாப் பேஸ்புக் இதுல வர ஜோக்ஸ் எல்லாம் யாரோட வாழ்க்கையிலோ நடந்து இருக்குமானு ரொம்ப நாளா ஒரு சந்தேகம், அதுல ஒண்ணு என் வாழ்க்கைல நடக்கும் வரை. . படிக்கும் பொழுது இருக்கும் ஹாஸ்யம் நிஜத்துல நடக்கும் போது அவ்வளவு வேடிக்கையாக இல்லை என்பது தான் உண்மை. நான் விஸ்வா. ஒரு சாப்ட்வே என்ஜினீயர். இது சொன்ன உடனேயே என்னோட சொந்த வாழ்க்கை எவ்ளோ சூனியம்னு உங்களுக்கு புரிஞ்சுப் போய் இருக்கும். வேலை நேரம் ஒன்பது


ஓய்வு

 

 பரபரவென்று வாசலுக்கு ஓடினாள் ராதிகா. பால் பாக்கெட் ரெண்டு படியில் கிடந்தது. எடுத்து உள்ளே நகர்கையில் சொக்கலிங்கம் வாயிலுக்கு வந்து கொண்டு இருந்தார். “பேப்பர் வரலியா?”, அவளது கையில் இருந்த பால் பாக்கெட்டுகளை பார்த்தபடிக் கேட்டார். “நான் கவனிக்கல. ஏற்கனவே லேட் . நீங்க கொஞ்சம் போய் பாருங்க”, நிற்காமல் ஓடினாள். ஒரு பத்து நிமிடத்தில் காபி கலந்து எடுத்து வந்து நீட்டுகையில், கையில் பேப்பருடன் இருந்த சொக்கலிங்கம், நிமிர்ந்து பாராமல் கையை நீட்டினார். “இங்க பார்த்து


144

 

 “அம்மா! அப்பா வந்துட்டாரு” கத்திக் கொண்டே வாசலுக்கு ஓடினாள் முருகன். வாயிலைத் தாண்டி நின்று காலணிகளைக் கழற்ற முயற்சித்த கேசவன் தோளில் தாவினான். “இருடா ஷூவ கழட்ட விடு”, சிரித்தபடி தன் முயற்சியை கைவிட்டு முருகனைத் தூக்கி தோளில் தூக்கி தட்டாமாலை சுற்றினான். சத்தம் கேட்டு பக்கத்து போர்ஷன் அன்னம்மா பாட்டி வெளியே வந்தாள். “என்னப்பா கேசவா, மாசமா இருக்குற பொண்ணு, ரெண்டுகெட்டான் வயசுல புள்ள, ரெண்டு பேரையும் விட்டு இப்படி நாள் கணக்கா வேலை வேலைனு


பண்டாரச்சாமி

 

 எங்கூருக்குள்ளாற வந்து ஜமீன் வூடு எங்கன்னு கேட்டாக்க கை சூப்புர பச்சப் புள்ளக் கூடோ வாயிலே இருக்குற கைய எடுத்துபுட்டு சொல்லிபுடும் . எங்கய்யா அம்புட்டு பிரபலம். நாங்க இங்க சொந்தமா மச்சு வூடு கட்டின மொதக் குடும்பம் வூடு கட்டும் போதே பக்கத்துல இருக்குற அரசமரத்த வெட்டச் சொல்லி நம்ம மேஸ்திரி சொல்லி இருக்காரு. ஆனா எங்கையா ‘இல்ல இது புள்ளையாரு மரம். இந்த வூட்டுக்கு வர வேளை அந்த சாமி கண்ண தொறந்து என்


உற்றத் தோழி

 

 அண்ணா நகரில் ஒரு மல்டி ப்ளெக்ஸ் அபார்ட்மெண்டில் குடியிருப்பு. கணவன் ஒரு பெரிய ஆட்டோமொபில் கம்பெனி சி .இ .ஒ . எனக்கு அண்ணா நகரின் அருகில் உள்ள ஒரு பிரபல cbse பள்ளியில் நல்ல வேலை.ஒரே மகள் அபர்ணா. 10 வயது அபர்ணா . எங்கள் ஒரே மகள். வட்ட முகத்தில் எப்போதும் சிரிப்பு . ஒரு குட்டி பந்து போல் எப்போதும் ஓடி கொண்டே இருக்கும் சுறுசுறுப்பு . எல்லோரிடமும் பிரியம்.யாரவது கஷ்டப்பட்டால் ஓடிச்சென்று


ரியாலிட்டி செக்

 

 லண்டன் ப்ரோக்ராம் முடித்து விட்டு இப்போது தான் சென்னையைத் தொட்டு இருந்தான் சந்தீப். ஏர்போர்டில் லக்கேஜ் வருவதற்கு காத்திருந்த போது தன்னைச் சுற்றி நின்றவர்கள் பார்வை தன்னை ஒரு முறைக்கு இரு முறை தடவிச் செல்வதை கவனிக்க முடிந்தது. இரண்டு பேர் அவன் கிட்டே வந்து ‘நீங்க ‘பயங்கர தமாஷ்’ ப்ரோக்ராம் பண்ற சந்தீப் தானே? எங்களுக்கு உங்க ப்ரோக்ராம் ரொம்ப பிடிக்கும் ” என்ற போது பெருமிதம் தாங்க வில்லை அவனுக்கு. 6 மாதம் முன்பு


கண்ணு பட போகுது

 

 ‘நான் ஒரு வாரத்துல திரும்பி வந்துருவேன் கண்ணு. உன்னோட போட்டிக்கு இன்னும் 2 மாசம் இருக்கு. ஏன் இப்படி அலுத்துக்கிற ??’ அப்பாவை அழுகையுடன் பார்த்துக் கொண்டு நின்றாள் குமுதா. ‘ நீங்க ஊருக்கு போய்ட்டா என்ன யாரு ப்ராக்டிசுக்கு கூட்டிகிட்டு போவாங்க.? நான் ஒரு வாரம் போகலீனா கோச் கண்டபடி திட்டுவாறு .’ ‘இவ்ளோதானா விஷயம். நான் கூட நீ என்னவோ என்ன பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு தான் அழுவுறியோனு நெனைச்சுட்டேன் கண்ணு.’ சிரித்தபடி சொன்ன


குழந்தை

 

 ‘அதென்ன யாரை பார்த்தாலும் குழந்தைன்னு கூப்பிடற பழக்கம் ?’ கற்பகம் கத்திக் கொண்டு இருந்தாள் .’ காதுல மிஷின் மாட்டுங்கோ.ரொம்ப சௌரியமா நான் பேசும் பொதுக் கழட்டி வெச்சா எதுவும் கேட்க வேண்டாம்னு நினைப்பா ? அப்படீல்லாம் ஈசி யா தப்பிக்க முடியாது.?’ விஷயம் இது தான் .நானும் அவளும் கோவிலில் எங்க ஊர் மாமா ஒருவரை பார்த்தோம்.என் அம்மாவிற்கு தூரத்து உறவு.அவளுக்கு அவரை பரிச்சயம் இல்லை.குசல விசாரிப்பு முடிந்து கற்பகத்தை அறிமுகபடுத்தியபின் நான் அவரிடம் ‘


கொடுத்து வைத்தவன்

 

 ‘எத்தனை நாளா இந்த வலி இருக்கு.?’ “இப்போ தான் ஒரு 4 நாளா ..’ எதாவது புதுசா வேலை பண்ணினேளா?? ‘இல்லை எப்போவும் இருக்கற வேலை தான்..என்ன இப்போ குழந்தைகள் எல்லாம் லண்டன்லேர்ந்து வந்திருக்கற சந்தோஷம் அது மட்டும் தான் எக்ஸ்ட்ரா ‘ புன்னகைத்தபடி சொன்ன பத்மா மாமியை பார்த்தேன். ‘ ஓ ஸ்ரீதர் வந்திருக்கானா ?தடியன் எனக்கு போன் பண்ணவே இல்லை.’ என்றவுடன்.. ‘இல்லப்பா வந்து இறங்கின மறானாள் லாவண்யா தம்பி நிச்சயம் .அதுல கொஞ்சம்