கதையாசிரியர் தொகுப்பு: வாஷிங்டன் ஶ்ரீதர்

12 கதைகள் கிடைத்துள்ளன.

உயிரும், உரிமையும்!

 

 உக்ரெயின் நாட்டில் நள்ளிரவு கடந்து சுமார் மூன்று மணி இருக்கும். அந்த பழுப்பு நிற மோட்டார் கார்கதவுகளில் மூன்று மங்கிய மஞ்சள் நிறத்திலும். நான்காவது நீல நிறத்தில் இருந்தன. காரின் வண்ணக் கலப்புஉக்ரெயின் நாட்டின் கொடி வண்ணங்களை நினைவூட்டியது. இது எதேச்சையாக நடந்த வண்ணக் கலப்பாகஇருக்கலாம். ஆனால் அந்த கார் உக்ரெயினிலிருந்து மேற்கு திசையில் இருக்கும் போலந்து நாட்டைஇலக்காக வைத்து நகர்ந்தபோது உக்ரெயின் மக்களின் உரிமை ஓலம் நமக்குக் கேட்கவில்லையா? மேற்கு திசையில் போலந்து நாட்டு எல்லையில்


நேரம் – ஒரு பக்க கதை

 

 ‘மணி எட்டாகிறதே…எழுந்திருக்காம இன்னும் படுக்கையிலேயே…?’ “ம்..ம்..இன்னும் பத்து நிமிடம்…” ‘ஆறு மணிக்கே எழுந்திருக்க போவதாய் நேற்றிரவு சொன்னாயே…’ ‘ஆமா, சொன்னேன்…அப்போ விழித்திருந்தேன்…’ ‘இப்போ?’ “தூக்கத்தின் சுகம்…பத்து நிமிடம்தானே…” ‘நேரம் வீணாகவில்லையா?’ “கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு…” ‘வருந்தினா மட்டும் போதுமா? அதற்கு ஏதாவது செய்ய வேண்டாமா?’ எழுந்திரு…எழுந்திரு…’ எனக்கு திருப்பள்ளியெழுச்சி பாடியது யார் என்று படுக்கையிலிருந்தே பார்த்தேன். அறையில் என்னைத் தவிர வேறு யாருமில்லை…நிம்மதியாக தூங்கலாம் என்றால்… யாருடைய குரல் என்னை எழுப்பியது? ஒரு வழியாக எழுந்தாயிற்று. கையில்


என்ன ஆச்சு?

 

 ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி். பிற்பகல் மூன்று மணி. திடீரென்று ஆபிசில் பரபரப்பு. அன்று ஆபிசில் சுமார்எண்பது பேர் வேலைக்கு வந்திருப்பார்கள். சட்டென்று தட்டச்சு சத்தம் அத்தனையும் அடங்கியது. என்ன ஆச்சு? நான் கம்ப்யூட்டர் திரையிலிருந்து பார்வையை திருப்பினேன். அவரவர் தங்கள் இடத்திலிருந்து எழுந்துநின்றனர். ஆண்களில் சிலர் தலையை சொரிந்து கொண்டும், சிலர் நகத்தை கடித்துக்கொண்டும், மற்றும் சிலர்முகத்தைத் தடவிக்கொண்டும் நின்றனர். சில பெண்கள் தமது துப்பட்டா நுனியை விரலில் சுற்றுவதும்விடுவதுமாக இருந்தனர். மற்றும் சில பெண்கள் மேக்கப்


ஆலமரம்

 

 ஊர் எல்லையைத் தொட்டு ஓடிய ரயில் பாதை. சற்று தொலைவில் சின்னச்சின்ன வீடுகளும், குடிசைகளும். இடையே கரடுமுரடான பாதை, சில மரங்கள், அடர்த்தியில்லாத புதர்கள். அங்கே நின்ற ஒரு பிரும்மாண்டமானஆலமரம்! அதன் நூற்றுக்கணக்கான விழுதுகளை மெல்லிய காற்று உசுப்பிவிட, தரையுடன் கொஞ்சின. அந்தஆலமரம் எத்தனை காலமாக அங்கே இருந்ததோ… ஊரில் யாருக்கும் தெரியாது. ஆனால் ஊராரின்இன்பதுன்பங்களை அதுவே சுமப்பது போல அதன் கிளைகள் பரவிக்கிடந்தன. ஆலமரத்தடியில் ரயில் பாதையை நோக்கி ஆவலுடன் உட்கார்ந்திருந்தது ஒரு சிறுவர் கூட்டம்.


இருமுனைத் தேடல்

 

 அந்த காவல் நிலையத்தில் வருவோரும் போவோருமாக வழக்கத்தைவிட கொஞ்சம் அதிக நடமாட்டமாகஇருந்தது. ஏற்கெனவே சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டனுடன் பேசிய இளைஞன் சிவக்குமார் ஸ்டேஷனுக்குவந்தபோது, அவன் வந்து நின்றதை கவனிக்காமல் மணிகண்டனுடன் ரைட்டர் கருணாவும் ஏதோ முக்கிய பேச்சு விவகாரத்தில் இருந்தனர். “என்னய்யா இது… இன்னுமா அந்த பெரியவரின் பிரச்னையை நீங்க முடிக்கலே? சரி …அவர் கொடுத்தஅந்த பையன் போட்டோவை காட்டுங்க” என்றார் மணிகண்டன். கருணா தன் கையிலிருந்த போட்டோவை நீட்டினார். அதைப் பார்க்க நேர்ந்த சிவக்குமார் சற்று திடுக்கிட்டு,


சிறகு நாவல் – ஒரு பக்க கதை

 

 ஒப்புக்கொண்டாலும் மறுத்தாலும், நம் வாழ்க்கை இயற்கையை ஒட்டியே செயல்படுகிறது. இயற்கைக்கு மாறாக செயல்பட எத்தனிக்கும்போது முரண்பாடுகள் தலைதூக்கும். ஆண்டுகள் பலவாயினும் மூன்று முடிச்சால் பிணைக்கப்பட்ட வாழ்வில் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கும் கடைநிலையும் அப்படித்தானே. அவன் முதிர்ந்தவன்; அவளும்தான், ஆனால் வயதில் சற்று இளையவள். அவன் ஒரு சக்கரவண்டியில் – அவள் மெல்ல அந்த வண்டியைத் தள்ளினாள். அவன் அவளை ஏறிட்டுப் பார்த்தான் – பார்த்தான் என அவளுக்குத் தோன்றியதா? அவனுடைய உதட்டின் ஓரம் புன்னகையா


ஒரு ரூபாய் நோட்டு

 

 பதில் சொல்லத் தெரியாமல் சிவாவுக்கு வாய் அடைத்துப்போய் கொஞ்ச நேரம் உட்கார்ந்தான். பிறகு தன்அறைக்குப் போய் பத்திரமாய் வைத்திருந்த சின்னப் பெட்டி ஒன்றை எடுத்து வந்தான். அதை எடுத்தபோதுஅவனுக்குக் கைகள் சற்று நடுங்கின மாதிரி தோன்றியது. அது பெட்டியைத் தொடும் போதெல்லாம் ஏற்படும்அநுபவம்தான். சிவா பெட்டியைத் திறந்தான். அதில் – ஒரு ரூபாய் நோட்டு! சிவாவைப் பொறுத்தவரை அந்த ஒரு ரூபாய் நோட்டு அவன் வாழ்க்கையில் விலை மதிப்பேயில்லாத மிகப்பெரிய பொக்கிஷம்தான்! அதைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு


அஹிம்சா

 

 அன்று மாலை மறைந்துகொண்டிருந்த சூரியனின் செங்கதிர்களைவிட அதிகமான சிகப்பு நிற இரத்தம்கசிய ஓர் உடல் தரையில் கிடந்தது. அதுவும் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன், டி.சி – வெள்ளை மாளிகைஅருகே… ​விற்பனைக்காகக் குவிந்துகிடக்கும் பனியன்கள் நிரம்பிய அந்த சின்ன தள்ளுவண்டியின் அருகே, சற்றுமுன்நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிர் போன ஒருவனின் உடல் கிடந்தது. அமொரிக்க தெருக்களில், பள்ளிக்கூடங்களில்,‌ஷாப்பிங் மால்களில், சினிமா அரங்குகளில் – பொதுவாக எங்கே, எப்போது இப்படிகுண்டுக்குப் பலியான உடல்கள் கிடக்கும் என்து மக்களுக்குப் புரியாத ஒரு


ஏழாம் பக்கம்

 

 இன்டர்நெட் யுகத்திலும் தினசரி செய்தித்தாள் படிப்பவர்களில் ஒருவரான கோபாலன் – தலையங்கத்தில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு உள்ளே அவர் மனைவி சாருவுக்கும் மகள் ரேவதிக்கும் காரசாரமாக பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது. அவர் எப்போதும்போல் கண்டு கொள்ளாமல் இருந்தார். ‘அம்மாவுக்கும் பொண்ணுக்கும் வேறே வேலையே இல்லை…’ என்று அவர் முணுமுணுத்தபோது “நீங்களே சொல்லுங்கோ” என்றவாறு சாரு கூடத்துக்கு வந்தாள். “என்ன சொல்லணும்?” என்று அவர் தலையைத் தூக்கியபோது ‘பை ஃபோகல்’ கண்ணாடி மூக்கு மேட்டில்சிறிது சரிந்தது. “அதான்…முகுந்தன்


அப்பா ஒரு புதிர்

 

 “வாங்க அண்ணா, வாங்க.” ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் எனக்கு வரவேற்பு பலமாகவே இருந்ததில் வியப்பில்லை. வரவேற்றது என் இரண்டாம் தங்கை சங்கரிதான், விமான நிலையத்துக்குத் தன் இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்தாள். “சௌக்யமா சங்கரி ஜகன் எப்படி இருக்கார்?” என்று அவருடைய கணவனைப் பற்றிக் கேட்டேன். “எல்லாம் உங்க புண்ணியம்தாவே, அண்ணா … எல்லோரும் சௌக்யம்தான். அவருக்கு ஆபீசில் முக்கியமான வேலை. ஏர்போர்ட்டுக்கு வரமுடியலே” என்றாள். சங்கரியே காரை ஓட்டினாள். ஆறு வருசத்துக்கு முன் நான்