கதையாசிரியர் தொகுப்பு: லாவண்யா பாலாஜி

2 கதைகள் கிடைத்துள்ளன.

துணை!

 

 அழுது அழுது கண்கள் சிவந்து, உடல் சோர்ந்து உட்கார்ந்திருந்தாள் சுமித்ரா. “”அம்மா, அம்மா, அப்பா எங்கம்மா. இனி வர மாட்டாங்களா…” மழலையில் கேட்கும் மகனின் வார்த்தைகள், அவள் சோகத்தைக் கிளற, மகனை மார்போடு அணைத்து தேம்பினாள். “”சுமி… என்னம்மா இது, மனசை தேத்திக்கம்மா. சந்திரனின் காரியங்கள் முடிச்சாச்சு. வந்த ஜனமும் கிளம்பி போயிருச்சு. இனியும் இப்படியே இடிஞ்சு போய் உட்கார்ந்திருந்தா, உன் உடம்பு என்னத்துக்காகும். அண்ணன் தம்பி நாங்க மூணு பேரும், என்னைக்குமே உனக்கு துணையாயிருப்போம்.” சுமித்ராவின்


ஒப்பீடு

 

 திவாகர் படித்து முடித்து, புத்தகங்களை எடுத்து பையில் வைத்தான். “”என்ன திவாகர் படிச்சாச்சா… சாப்பிட வர்றியா?” என்று, கேட்டபடி அங்கு வந்தாள் திலகா. “”இப்ப என்ன மணியாச்சு… அதுக்குள்ள புத்தகத்தை மூட்டைக் கட்டி வச்சுட்டானா… இன்னும் கொஞ்ச நேரம் படிச்சா குறைஞ்சா போயிடும்?” அப்பா சரவணன் சொல்ல, ஒன்றும் பதில் சொல்லவில்லை திவாகர். மகனுக்கும், கணவனுக்கும் திலகா பரிமாற, சாப்பிட்டுக் கொண்டிருந்த சரவணன், “”திலகா… உனக்கு விஷயம் தெரியுமா? எதிர் வீட்டு ராமு தான், இந்த ரிவிஷன்