கதையாசிரியர் தொகுப்பு: ரெ.முத்தரசு

3 கதைகள் கிடைத்துள்ளன.

அகிலாவும் அரசுப் பள்ளியும்

 

 அகிலாவை என் தம்பிக்காக பெண் பார்க்கப் போய் பூடகமாய் நிராகரித்துவிட்டு வந்து 30 வருடங்களுக்குப் பின் அவளது வீட்டுக்கு இன்று போகிறோம். இம்முறை எனது இரண்டாவது மகளுக்கு அவளது மூத்த மகனைச் சம்பந்தம் பேச. அந்தக் காலத்தில் அகிலாவைச் செய்ய வேண்டாமென்று சொன்னதில் அக்காவாகிய எனது அழுத்தம்தான் அதிகமிருந்தது என எல்லோருக்கும் தெரியும். எனக்குத் திருமணம் முடிந்து அப்போது ஒரு வருடமாகியிருந்தது. இருவருக்கும் வங்கிப் பணி. ஒரே ஊர். தம்பி அரசு பணிப் பொறியாளர். அகிலா தூரத்து


கண்மணி

 

 “ப்ளீஸ்மா. எனக்காக” என்றாள். “”ம்ம்” என்றேன். அவள் கை என் கைக்குள்ளும், என் கை அவள் கைக்குள்ளும் மாறிக் கொண்டிருந்தது. உடல் முழுவதும் உருக்குலைந்து போனாலும் உள்ளங்கைகளுக்குள் அவள் பிடியின் வலிமை நாற்பது ஆண்டுகளாக மாறவில்லை. “”சாப்பிடுறியா” என்றேன். “”ப்ச். வேண்டாம்” கண்களைத் திறக்காமலேயே. பிடியை இறுக்கி “”ஏன்” என்றேன். மூடிய இமைகள் மெல்ல நீரை விடுவித்து கண்கள் ஓரம் தேக்கியது. கண்களைத் திறந்து மறுபடியும் “”ப்ளீஸ்மா” என்றாள். கண்களின் ஓரம். தேங்கியிருந்த நீர் மீண்டும் அந்தப்


வங்கிக் கடன்

 

 அந்தி மயங்கும் பொழுதில் லச்சுமி, “டிமக்ரான்’ பூச்சி மருந்து குடித்துச் செத்துப் போனாள். அதற்கு ஒரு மணி நேரம் முன்பு வரை பண்பலையில் சினிமாப் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த 18 வயதுப் பெண். மருந்து குடித்ததற்குக் காரணம், அவளுடைய உண்டியலில் இருந்த பணத்தை – 200 ரூபாயை எடுத்து அவள் அம்மா பருத்திக்கு பூச்சி மருந்து வாங்கி விட்டாளாம். கோவில்பட்டியிலிருந்து பக்கம் 15 கி.மீ., ஆனால் சாத்தூர் தாலுகா. வானம் பார்த்த பூமி. இன்னமும் விவசாயத்தை விடாமல்