கதையாசிரியர் தொகுப்பு: ராம்ஈஷ்

4 கதைகள் கிடைத்துள்ளன.

அடியாளும் கடத்தப்பட்டவனும்

 

 ஏற்கனவே திட்டமிட்டபடி அந்த அடியாள் அந்த கார்-ஐ வழிமறித்து, ஓட்டுனரை அடித்துவிட்டு, அதிலிருந்த வாலிபனை வெளியே இழுத்து தன்னுடைய வண்டியில் ஏற்றிக் கொண்டு விருட்டென்று கிளம்பினான். எப்போதும்போல் பிரத்யேக இடமான ஒரு சேமிப்பு கிடங்கில் அந்த வாலிபனை கட்டி வைத்திருந்தான். நேரம் எந்த சலனமுமின்றி சற்றே அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. அவனுக்குக் கைப்பேசியில் அழைப்பு வந்தது. பேசிவிட்டு வந்து அமர்ந்தான். கடத்தப்பட்டவன் தொண்டையைக் கனைத்து அமைதியைக் கலைத்தான். “ஏன் என்னைப் பிடிச்சிட்டு வந்தீங்க” என்று மரியாதையாகவே கேட்டான். அதற்கு


பேசிய இதயம்

 

 அவன் யாருமற்ற இடத்திலே கீழே வீழ்ந்துக் கிடந்தான். அவன் இதயம் பேசியது (துடித்துக்கொண்டிருந்தது). இந்த பாழும் பழி உணர்ச்சி ஒரு மனிதனை எப்படி மிருகமாக்குகிறது. கண நேரத்தில் உணர்ச்சி வயப்பட்டு அவன் செய்யும் ஒரு தவறு அவனை இந்த நிலைமைக்கு கொண்டு விடுகிறது. அன்று இவன் குழுவிற்கும் வேறொரு குழுவிற்கும் ஒன்றுக்கும் பிரயோசனமே இல்லாத ஒரு காரணத்திற்கு வாய்த்தகராறு. அது சற்றே வலுத்து கைக்கலப்பில் முடிந்தது. இந்த தகராறின் காரணமாக பிறிதொரு நாளில் கீழே விழுந்து கிடக்கும்


அன்பு தம்பி

 

 சிவராமன் தன்னுடைய அலுவலகப் பணியில் மூழ்கியிருந்தபோது அவனுடைய கைப்பேசியில் அழைப்பு வந்தது. “ஹலோ யாரு” என்றான். “அன்பு தம்பி இருக்காங்களா” என்றது அந்த முனையில் ஒரு அம்மாவின் தளர்ந்த குரல். அன்பு தம்பி என்றவுடன் அவனுக்கு சட்டென்று சிரிப்பு வந்தது. அதை அடக்கிக்கொண்டு “அது போல் யாரும் இல்லீங்க. ராங் நம்பர்” என்று கைப்பேசியை அனைத்தான். சில நாட்கள் கழித்து அதே அம்மாவின் அழைப்பு மீண்டும். யாரும் இல்லை என்று வைத்தான். அதே மாதத்திற்குள் இரண்டு மூன்று


உயிரின் மதிப்பு

 

 ராம் அவசரமாக வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.மனைவியிடம் “சாதம் கட்டிட்டியா” என்றான். உள்ளிருந்து “ரெடி” என்றாள் அவன் மனைவி. உடனே தன்னுடைய மதிய உணவுப் பையை எடுத்துக்கொண்டு மனைவியிடம் விடை பெற்று கிளம்பினான். மக்களோடு மக்களாக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது எதிர்புறத்தில் ஒரு வாலிபன் பார்ப்பதற்கு கல்லூரி செல்லும் மாணவன் போல் இருந்தான்.கைப்பேசியை காதில் வைத்து ஒரு பக்கம் தலை சாய்த்து சிரித்து பேசிக்கொண்டிருந்தான்.இரு பக்கமும் பாராமல் சட்டென்று கைப்பேசியில் பேசிக்கொண்டே அந்த சாலையை கடக்க ஆரம்பித்தான்.