கதையாசிரியர் தொகுப்பு: ராஜ ஸ்ரீகாந்தன்

1 கதை கிடைத்துள்ளன.

எரிதழலில் வாழும் மனிதம்

 

 (1997 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சாளரத்தின் கனதியான திரைச்சீலையை ஒதுக்கி விட்டுக் கொண்டு வெளியே பார்வையைச் செலுத்தினார் வேங்கடகைலாசசந்திரசேகரமூர்த்தி. வானம் மப்பும் மந்தாரமுமாக நிறைசூல் கொண்டிருந்தது. கொழும்பின் கொங்கிறீற் காட்டில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உயர்ந்த கட்டிடமொன்றில் பதினேழாவது மாடியில் அமைந்திருந்தது அவருடைய செயலகம். அம்மாவும் ஐயாவும் வைத்த அழகிய பெயரைக் குறுகத்தறித்து, மினுக்கிய பித்தளைத் தகடொன்றில் வீ. கே. எஸ். மூர்த்தி என்று பொறித்து வைத்திருந்தது நிர்வாகம்.