கதையாசிரியர் தொகுப்பு: ராகவன் தம்பி

5 கதைகள் கிடைத்துள்ளன.

மலைமுழுங்கி

 

 மலைமுழுங்கி என்பது அவருக்குக் கிடைத்த பட்டப் பெயர் அல்ல. அவர் செய்து வருகின்ற காரியங்களை முன்வைத்த காரணப் பெயரும் அல்ல. யாரும் அவரை அப்படிக் கூப்பிடாத போது அவரே தன்னைப் பற்றி ஜம்பம் அடித்துக்கொள்ளவும் சாதுவான ஆட்களைக் கொஞ்சம் மிரட்டி வைக்கும் நோக்கத்துடன் “என்னை என்னன்னு நெனச்சிக்கிட்டே? எல்லோரும் என்னை எப்படிக் கூப்பிடுவாங்க தெரியுமா? ஜாக்கிரதையா இருந்துக்கோ” இப்படியாகத் தனக்குத்தானே பட்டப் பெயர் கொடுத்துக்கொண்டு ஊரில் தோளை நிமிர்த்தி உலா வரப்போக, அதுவே அவருடைய பட்டப் பெயர்,


கொசு

 

 துவக்கப் பள்ளியில் ஏழு வருஷங்களும் உயர்நிலைப் பள்ளியில் எட்டு வருஷங்களும் (றாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் தலா ஒரு வருடம் உபரியாகிப்போனதால்) அரசு கலைக்கல்லூரியில் மூன்று வருஷங்கள் ஏறத்தாழ அதே வகுப்புத்தோழர்களுடன் காலம் கழித்ததால் எவ்வித மாற்றமும் அடையாது இத்தனை வருஷங்களும் கிருஷ்ணமூர்த்தி என்னும் அவன் பெயர் அனைவராலும் வயது வித்தியாசமின்றி கொசு என்றே அழைக்கப்பட்டு வந்தது. கல்லூரியில், அவன் காதலிக்கலாம் என்று திட்டமிட்ட பெண்ணுக்கும் நண்பர்களால் கொசு என்றுதான் அறிமுகப்படுத்தப்பட்டான். இந்தப் பெயரையும் கொஞ்சமாக அவன்


முறையீடு

 

 ஏறத்தாழ எட்டாவது முறையாக மீண்டும் அந்தக் கேள்வியை சிவராமன் கேட்டபோது சோட்டே லால் என்னும் அந்தக் கான்ஸ்டபிளுக்குக் கோபத்துக்குப் பதில் சிரிப்புத்தான் வந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டு அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு பதில் அளிப்பது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இந்த மதராஸிகளிடம் அதிகம் வேலை காண்பிக்க முடியாது. தில்லியில் மத்திய அமைச்சரவையில் பதினைந்துக்கும் மேற்பட்ட மதராஸிகள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். தில்லியெங்கும் தடுக்கி விழுந்தால் ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மதராஸிகளாக இருக்கிறார்கள். இந்த ஆள் கண்டிப்பாக எங்காவது


ஷா ஆலம் முகாமின் ஆவிகள்

 

 ஷா ஆலம் முகாமில் பகல்கள் எப்படியோ ஒருவாறு கழிந்து கொண்டிருந்தன. ஆனால் இரவுகள் மட்டும் முடிவிலாது நீண்ட துர்சொப்பனாங்களாகிக் கொண்டிருந்தன. இந்தக் கொடுமையான நரகவேதனையிலிருந்து ஆண்டவரால் மட்டுமே எங்களைக் காப்பாற்ற முடியும். என்ன ஒரு மிகப் பயங்கரமான அமளி இது? உங்களுடைய குரலையே உங்களால் மிகவும் பலவீனமாகத்தான் கேட்க முடிகிற அளவுக்கு கூக்குரலும் ஓலமும், முனகலும், பேரழுகையும் மொத்தமாய்ச் சேர்ந்த ஒரு கலவையாக…. நள்ளிரவுக்குப் பிறகு ஆவிகள் தங்கள் பிள்ளைகளைப் பார்க்க வருகின்றன. அநாதைகளைத் தடவிக் கொடுக்கின்றன.


டோபா டேக் சிங்

 

 இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறைக் கைதிகளைப் போல, இருநாடுகளின் பைத்தியக்கார விடுதிகளில் விடப்பட்ட பைத்தியங்களையும் தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என இருநாடுகளும் முடிவெடுத்தன.இந்த முடிவு சரியானதா இல்லையா என்று சொல்வது சற்றுக் கடினமான காரியம்தான். ஆனால் . இந்த முடிவுக்கு வருவதற்கு, இருநாடுகளின் மிக முக்கியமான உயர் அதிகாரிகள் பல ஆலோசனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்து, பலமுறை கூடி மிகக் கடுமையாக ஆலோசித்தும், விவாதித்தும் எடுக்கப்பட்ட முடிவு இது என்பதை