கதையாசிரியர் தொகுப்பு: யோகா பாலச்சந்திரன்

1 கதை கிடைத்துள்ளன.

கனவுக் குழந்தை

 

 (1982 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மாலை ஐந்தரை மணி. மிகவும் சோர்ந்து போன நடை தளர்ந்த நிலையில் வீட்டுக்குள் நுழைந்த ஈஸ்வரன் ஆபீஸ் பையை மேசையில் எறிந்துவிட்டுக் கட்டிலில் தொப்பென்று விழுந்து கிடந்தான். “உடுப்பு மாற்ற இவருக்கு இன்று என்ன இவ்வளவு நேரம்.’” என்று யோசித்தபடி கையில் தேநீர்க் கோப்பையுடன் படுக்கை அறைக்குள் நுழைந்த இந்திரா, “என்ன இண்டைக்கு வந்தவுடன் படுத்திட்டியள்? ஏன் சுகமில்லையே?” என வினவியபடி தலையில்