கதையாசிரியர் தொகுப்பு: யாசிர் அரபாத் ஹசனி

5 கதைகள் கிடைத்துள்ளன.

மண்ணின் ரசிகன்

 

 இயற்கை தத்தெடுத்த அழகிய கிராமமது! பார்வைகளைப் பற்றிக் கொள்ளுமளவிற்குப் பசுமைகள் போர்த்திய கிராமம். விண்ணுக்கு ஏணிகளாய் பனை மரங்களும், தென்னை மரங்களும் சோப்பில் நட்டு வைத்த ஊசிபோல் அழகழகாய் காட்சியளிக்கின்றன. தினந்தோறும் கதிரவன் காலை எழுவதால்! அசதியில் உறங்கினாலும் உறங்கிவிடும். ஆனால், அதிகாலை சூரியனின் ஒளி பூமியைத் தொட்டு முகம் பார்க்கும் முன்‌னெழுந்து விவசாயத்திற்குச் சென்று விடுவது இந்த கிராமவாசிகளின் அன்றாட வழக்கங்களில் ஒன்று. ராஜாவும்,அன்பும் வகுப்புத் தோழர்கள் என்பதால், வண்டி பூட்டியது போல் எப்போதும் கை


கலைந்த மேகம்…

 

 நகரத்தின் பெரிய ஹாஸ்பிட்டலின் வரண்டாவில் கைகளைப் பிசைந்துகொண்டு அங்குமிங்கும் அலைந்துக் கொண்டிருந்தான் அன்வர். அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கும் நர்ஸிடம் கை நீட்டி ஏதோ கேட்க முயன்றான். அண்ணா! அங்கே போய் உக்காருங்க. குழந்தை பிறந்தவுடன் நானே வந்து சொல்வேன் என்றாள் நர்ஸ்..ஒரு சேர அமைக்கப்பட்டிருக்கும் நாற்காலியில் போய் அமர்ந்தான். மனைவி நல்ல விதமாகப் பிள்ளைப் பெற்று வீடு திரும்பினால் உண்டியலில் பணம் போடுகின்றேன் என்று வேணாடி கடவுளைத் துணைக்கு அழைத்தவனாக வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான். கண்களும், உள்ளமும்


இரட்டைக் கிளவி

 

 இடி, மின்னல், மழையென இரவு கழிந்தது.அனிஃப் எழுந்தார். அருகில், மனைவி நன்கு அசதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். கால் தடத்தின் சப்தம்மனைவியின் உறக்கத்தைக் கெடுத்துவிடும்என்பதற்காக கால் தடத்தின் சப்தத்தை குறைத்துக் கொண்டுகுளிக்கச் சென்றார். குளித்து முடித்து… வெளியில் வரும் போது. சுட சுட டீ அவரை வரவேற்றது… உன் தூக்கம் கெட்டு விடக் கூடாதென்பதற்காக தானே! பொறுமையாக நடந்தேன். பிறகு எப்படி ? டீ யென்றுக் கண்ணால் கேட்டார். அவளின் சிரிப்பே… அதிகாலை சூரியனுக்கு வழிவிட்டது போல்… கூடுதல்


நீர்த் தாரை…

 

 இருளின் பிடியிலிருந்து பகல் கொஞ்சம், கொஞ்சமாக நழுவத் தொடங்கியது. தவளைகளின் சப்தங்கள் ஓயத் தொடங்கின. நிசப்தம் விரவிக் காணப்பட்டது. வாகனக் கண்ணாடியில் புகை போல் காணப்பட்டது பனியின் மிச்சம். இரவு முழுவதும் தாழ்ப்பாளில் சிக்கிக் கொண்ட கதவுகளை விடுவித்து ஃபஜ்ர் நேரத் தொழுகைக்கு வெளியேறினார் ஹபீப். தெரு முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது.. இரவு முழுவதும் மாடுகள் கடந்த செய்தியைச் சாணம் சொன்னது. பள்ளிக்குள் சென்று தொழுகையில் ஈடுபட்டார். பள்ளிவாசலுக்கு எதிரில் தேநீர்க்கடை வைத்திருக்கும் கணேசன் கடையைத் திறந்து


எதுகை, மோனை

 

 நடுநிசி இரவு.. வீடு முழுக்க நிசப்தம் படர்ந்து இருந்தது. சுவர் கடிகாரத்தின் முள் அசையும் சப்தம் பிசுறு தட்டாமல் அப்படியே கேட்டது. அன்பு, அவனது மனைவி, மற்றும் 6 மாத குழந்தையும் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். சமயலறையில் பெரும் சப்தம் கேட்டது… சப்தம் கேட்டுப் பதற்றமாக எழுந்தாள் அன்பின் மனைவி. அவளை பயம் பற்றிக் கொண்டது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அன்பை எழுப்பினாள்.அவனோ ! “போடின்னு”.. எச்சில் வழிந்த உதட்டைத் துடைத்தவாறு தூக்கத்தைத் தொடர்ந்தான். ஜீரோ வால்ட் பல்பின்