கதையாசிரியர் தொகுப்பு: மேலாண்மை பொன்னுசாமி

18 கதைகள் கிடைத்துள்ளன.

பிஞ்சுகளும் போரிடும்

 

 (2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வழக்கம் போல் அந்த நேரத்தில் தான் பரிமளம் பாட்டி விழித்துக்கெண்டாள். பக்கத்தில் ராஜி படுத்திருந்தான். வீடு பூராவும் ஈரமாகி சுவரெல்லாம் – தரையெல்லாம் குளிர்ந்து கிடந்ததால், கிழிந்த சாக்குகள் இரண்டை கீழே போட்டு, அதன் மேல் கால்களையும் கைகளையும் உள்ளுக்குள் மடக்கிக் கொண்டு சுருண்டு ஒடுங்கிப் படுத்திருந்தாள். வாயில் கோழை வடிய, குழந்தை போல் அமைதியாக உறங்கும் இவள்தான் – இந்தச் சிறுமிதான்.


பூ

 

 “ராசாத்தி மகள் மூலையில் உட்கார்ந்து விட்டாள்.” முந்தா நாளிலிருந்து ஊரில் இதே பேச்சுதான். ஊர்ப் பெண்கள் மூக்கில் விரலை வைத்தனர். வாயைப் பிளந்தனர். ஆச்சரியத்தில் மாய்ந்து போனார்கள். “நிஜந்தானா” “நிஜந்தானா” என்று ஒவ்வொரு பெண்ணும் திணறித் தவித்தார்கள். பூங்கோதைக்கும் ஆச்சரியம்தான். அத்துடன் கொஞ்சம் அதிர்ச்சியும்கூட. மனசுக்குள் மெல்லிய நெருடல். ஆழத்திற்குள் ஜில்லிட்டுப் பாய்கிற பயம். “அப்பவும் இப்படியா. அப்பவும் இப்படியா” என்று வாய்க்கும், கைக்குமாய் புலம்பிக்கொண்டிருந்தாள். புருஷனுக்கும், பிள்ளைகளுக்கும் எல்லாவற்றையும் கவனித்து, சமாளித்து முடித்துவிட்டு, கூலி வேலைக்குக்


பௌர்ணமி

 

 றெக்கை முளைத்த மாதிரியிருந்தது சிந்தாமணிக்கு. சந்தோஷமென்றால் சந்தோஷம்… அம்புட்டுச் சந்தோஷம். உள் நரம்புகளுக்குள் ஓடிப் பரவுகிற பரவசம். உள்மனச் சிலிர்ப்பு. ஒவ்வொரு அணுவிலும் மனத்துள்ளல். சிரமப்பட்டு மறைத்தாலும் மீறிக்கொண்டு முகத்தில் மனசின் மலர்ச்சி. அதன் ஒளி. சிந்தாமணிக்கு வயது முப்பத்தைந்துக்கும் மேலே. மூன்று பிள்ளைகள். மூத்தவள் ராஜி. ஏழாங்கிளாஸ். சிந்தாமணிக்குள் சிறகடிப்பு. இப்பத்தான் கல்யாணம் ஆனவளைப் போல குதூகலத் துடிப்பு. மனசுக்குள் குமரிப் பருவக் கொந்தளிப்பு. கும்மாளம். எல்லாம்… புருஷனை நினைத்துத்தான். குமரேசனை நினைக்க நினைக்க ஒரே


காட்டு ருசி

 

 அன்றைக்குக் கடைசி ஆடி. ஊர் முழுக்க தோசை வாசனை கம்ம்மென்று முறுகல் மணல். ஆட்டுரல்களில் சட்னி ஆட்டுகிற கடகடா சப்தம். வழக்கத்துக்கு மாறாக… காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கிறான் சீனிவாசன். ஒரே பரபரப்பு. அங்கேயும் இங்கேயுமாய்ப் பாய்கிறான். ஆளைக் கையில் பிடிக்க முடியவில்லை. மூக்கின் மேல் நின்ற கோபம் நாலா பக்கமும் சிதறித் தெறிக்கிறது. இன்னார் மீது என்று கணக்கில்லை. சகட்டு மேனிக்கு “சள் சள்” ளென்று சீறுகிறான். மண்ணடிக்க டக்கர் போயிருக்கிறது. வேலை செய்யாமல்


யார் நான்?

 

 சுப்ரமணியசாமி என்ற தன் பெயரையும், முழு முகவரியையும் லெட்ஜரில் எழுதி கையெழுத்திட்டு விட்டு, லாட்ஜ் பையன் திறந்துவிட்ட அறைக்குள் நுழைந்தபோது – அவனுள் ஓர் இறுக்கம். மனதில் பதற்றம். ஒரு குற்ற உணர்ச்சி. ஷர்ட்டைக் கழற்றி ஹாங்கரில் மாட்டி, கைலியை எடுத்து உடுத்திக் கொண்டு, பேண்ட்டை உருவினான். கட்டிலில் சாய்ந்தான். மின் விசிறி காற்றின் இரைச்சல். ‘யாராவது பாத்திருப்பார்களோ’. உள் தடுக்கம். இந்த லாட்ஜ், அப்படிப்பட்ட ‘ஒரு மாதிரி’. இவனும் அதே ‘ஒரு மாதிரி’, சபலத்தில், வங்கியில்


குணவேறுபாடு

 

 சுனைக்கனி, பலசரக்குக் கடைக்குள் உட்கார்ந்திருந்தான். மடியில் நோட்டும் சிட்டைத்தாளும். கடை பூராவும் நிதானமாகப் பார்வையை அனுப்பினான். ‘வேற ஏதாச்சும் கொள்முதல் பண்ணணுமா?’ என ஒவ்வொரு பொருளாக யோசித்து சிட்டையில் எழுதினான். கல்லாப்பெட்டியைத் திறந்தான். ரூபாயை எடுத்தான். ‘எம்புட்டு வெச்சிட்டுப் போகணும்?’ என்ற யோசிப்பு. `கரிவலம்வந்தநல்லூர் மிட்டாய் வியாபாரி, வரகுணராமபுரம் புகையிலைக்காரர், மாதாங் கோவில்பட்டி முட்டை வியாபாரி, செவல்பட்டி சேவுக்காரர், நத்தம்பட்டி பொடிமட்டைக்காரர்… இவங்கதான் இன்னைக்கு வந்து சரக்கு போடுவாக. அவுகளுக்கு ரூவா கட்டணும்’ – தோராயமாக மனசுக்குள்


சொந்தக் கால்

 

 ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டும் உரசித் தள்ளிக் கொண்டும், மந்தையாக வருகிற செம்மறி ஆடுகளை, பட்டிக்குள் பத்தியனுப்பினான் செல்லாண்டி. கைக் கம்பால் அதன் முதுகுகளில் செல்லத்தட்டுகள் தட்டுகிறான். பட்டிக்குள் நெட்டித்தள்ளி மூங்கில் தப்பைக் கதவைச் சாத்தி, கொண்டியை மாட்டுகிறான். குப்புறக் கவிழ்ந்துகிடந்த கூடையைத் தூக்கித் திறந்தவுடன், உள்ளுக்குள் அடைப்பட்டுக்கிடந்த இளங்குட்டிகள் ஆவல் பறப்பும் ஆசைப் பரபரப்புமாகத் தெறித்தோடின. தத்தம் தாய் ஆடுகளைத் தேடிக் கனைத்தன. தாய் ஆடுகளும் குட்டிகளைத் தேடிக் கத்துகின்றன. அதுகளுக்கும் மடுவில் பால் கட்டியிருக்கிற வேதனை.


வனச் சுதந்திரம்

 

 பைக் கட்டை முக்கித்தக்கி தூக்கித் தோளில் போட்டவுடன் பாரம் தாளாமல் முதுகு வளைந்தது கடற்கரைக்கு. எல்லோரும் சிட்டாகப் பறக்கிறார்கள். அவர்களுடைய சின்னச் சிறகுகளில் மனத் துள்ளல். வெள்ளிக்கிழமை சாயங்காலம். சாயந்தர வெயில் கண்ணில் ஊசி பாய்ச்சுகிறது. கன்ன மிருதுகளில் தீச்சூடுவைத்த மாதிரி ஒரு காந்தல். இனி, ரெண்டு நாளைக்கு லீவு. ‘அய்ய்க்… அய்ய்ய்க்…’ ஆடலாம், பாடலாம், டி.வி. பாக்கலாம், தெருவில் கிரிக்கெட் விளையாடலாம். கிணற்றுக் காட்டில் விழுந்து, குதித்து முங்கு நீச்சல் போடலாம். சின்னச் சிட்டுகளின் சிறகு


ஜீவத்தோழமை

 

 விடிந்தும் விடியாத வைகûப்பொழுது. முதல் பஸ், மூச்சிரைக்க லொட லொடத்தது, கிராமத்தை நோக்கி. காற்ாடுகி பஸ், நாலைந்து டிக்கட்கள்தான். காலைப்பனி காற்úாடு வந்து சீறுகிது. தடதட, கடகடாவெனப் பேயிரைச்சல் போடுகி தகரக் கூச்சல். பஸ் வேகம் ஜாஸ்திதான். டிரைவர் சீசன் துண்டை காது மûக்க தலையில் கட்டியிருந்தார். கண்டக்டர் கூதல் இல்லாத இடம் தேடி உட்கார, பஸ் அவரைத் தூக்கித் தூக்கிப் போடுகிது. ஊசிகளாகக் குத்துகி கூதல்காற்று. வடிவுக்கு கூதல் தாங்கவில்லை. கிடுகிடுத்தாள். பாவாடைக்குள் கால்களையும் நெருக்கினாள்.


தள்ளி நில்லு

 

 அவக் தொவக்கென்று அவசர அவசரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மகன் முருகையாவையே கூர்ந்து பார்க்கிற சங்காண்டியின் கண்களிலேயே கண் வைத்திருக்கிற சின்னப் பாண்டியின் மனசெல்லாம் பெருமிதத் ததும்பல். முருகையா முழுத்த இளவட்டம். முறுக்கேறிய உடம்பு. கருவேலமரத் தூர்மாதிரி வைரம் பாய்ந்து இறுகிய திரேகம். சோறும் குழம்பும் பிசைந்த வாசம் கும்பாவிற்கும் வெளியே மணக்கிறது. சாப்பிட்டுக் கொண்டே அம்மாவைத் துரிதப்படுத்துகிற முருகையா. அம்மே… தூக்குச் சட்டியிலே சோறு வைச்சுட்டீயா? வைச்சுட்டேன்ப்பா. அஞ்சு லிட்டர் கேன்லே தண்ணி புடிச்சுட்டீயா? புடிச்சுட்டேன்டா, துரட்டியையும்