கதையாசிரியர் தொகுப்பு: மீனா சுந்தர்

3 கதைகள் கிடைத்துள்ளன.

அந்த நாள் ஞாபகம்

 

 “”அப்பா… உங்க சினேகிதர், அதாவது உங்க கூட படிச்ச கிளாஸ்மெட் கிருஷ்ணமூர்த்தியை ஞாபகமிருக்கா,” என்று கேட்டான் என் மகன். பேப்பர் படித்துக் கொண்டிருந்த நான், “”ஞாபகமில்லாம என்ன… நல்லாருக்கு. அப்போ ரெண்டு கிருஷ்ணமூர்த்தி படிச்சாங்க. நீ யாரை சொல்ற?” “”என்.கிருஷ்ண மூர்த்திப்பா… திருக்கொட்டாரம்.” “”ஓ… அவனா… நல்லா ஞாபகமிருக்கே. சிவப்பா, ஒல்லியா, நெடு நெடுன்னு இருப்பான்.” “”ஆமாம்… இப்போ பெரிய ஆளா இருக்காராம்!” “”பெரிய ஆள்னா…” “”பெரிய பணக்காரராம்… கோடீஸ்வரராம். சென்னையிலேயே, விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்ல


முத்துநகர் எக்ஸ்பிரஸ்

 

 எழும்பூர் ரயில் நிலையம். பயணிக்க வருவோரும், பயணித்துப் போவோரும் சுறுசுறுப்பாய் இயங்கியதால், பரபரப்பாக இருந்தது. டிக்கெட் வாங்கி பையில் பத்திரப்படுத்தி, முத்துநகர் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்த நடைமேடைக்கு வந்தேன். டிக்கெட் ரிசர்வ் செய்யாததால், அன் ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட் நிற்கும் இடம் நோக்கி நடந்தேன். ஒரு வழியாய் கண்டுபிடித்து, ஏறி அமர்ந்தேன். கடைசி நேரத்தில் ஓடிவந்து, முண்டியடித்து ஏறி, இடம் கிடைக்காமல், இரவு முழுவதும், தூக்கத்தையும் கெடுத்து, நின்று கொண்டேயல்லவா போக வேண்டிவரும் என்பதை மனதில் கொண்டு தான்,


நிகழ்வுகள்

 

 “ஏ… அண்ணமாரே… தம்பிமாரே… அக்காமாரே… தங்கச்சிமாரே…. அய்யாமாரே…. ஆச்சிமாரே… குட்டி குட்டி பிள்ளைங்கமாரே…. நம்ம கொளத்தாங்கரை பிள்ளையார் கோயில் வாசல்ல உங்கள சந்தோசப்படுத்த நாங்க கூத்தாடப் போறோம். ஆட்டம், பாட்டம்ன்னு களைகட்டப்போற அந்த விழாவுக்கு வந்திருந்து உங்க ஆதரவையும், உதவியையும் செய்யணும்னு கேட்டுக்கறேங்கோ…” பொன்னாத்தா தெரு முனையிலிருந்து கடைசிவரை கூவிக் கொண்டே போனாள். பின்னாடியே உடுக்கையை அடித்தபடி கண்ணுச்சாமி சென்றான். கிராமத்தில் தெரு கூத்தை ரசித்துப் பார்ப்பார்கள். தகுந்த மாதிரி உதவியும் செய்வார்கள். நகரத்தில் வாழ்வோரைப் போலப்