கதையாசிரியர் தொகுப்பு: மா.அரங்கநாதன்

6 கதைகள் கிடைத்துள்ளன.

அட்டிகை

 

 அப்போது பொங்கல் கழிந்து இரண்டு மூன்று நாள்கள் ஆகியிருக்கும். அவன் பக்கத்தூருக்கு ஆற்றைக் கடந்துபோய்க் கொண்டிருந்தான். அதைக் கடப்பதில் சிரமம் கிடையாது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டால் போதும் பாதி ஆற்றில் காலில் ஏதோ தட்டுப் படுவது, போல் இருக்கவே, ஒற்றைக் காலில் நின்று கொண்டே மற்றொன்றால் வெளியே தூக்கிப் பார்த்தால் அது ஒர் அட்டிகை. தங்கமாகத் தான் தெரிந்தது. அதை அப்படியே கையாலெடுத்துக்கொண்டு வருவதைத் தவிர வேறு எதுவும் செய்திருக்க முடியாது. அப்பாவின் காலத்திலிருந்தே தெரிந்த


வேடம்

 

 சென்னை ராஜதானி என்ற பெயருடன் இந்த இடம் இயங்கிக் கொண்டிருந்த நாளில், அந்த அரசில் குமாஸ்தா உத்தியோகம் பார்த்து ஓய்வுபெற்றவரும், பூதப்பாண்டி மாசிலாமணியின் புதல்வனுமான, முத்துக்கருப்பன். வாக்குச் சாவடி ஒன்றின் வரிசையில் நின்றுகொண்டிருந்தார். ஆனால், வாக்களிக்க முடியவில்லை. நாட்டில் நடந்த முதல் வாக்கெடுப்பு அது. அதன்பிறகு, எப்போதுமே அவர் வாக்களிக்க முடியாது போய் விட்டது. முத்துக்கருப்பனால் ஏன் வாக்க ளிக்க முடியாமல் போய்விட்டது என்பதைச் சொல்லும் முன், இன்னும் சிலரை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். ராட்டு


சித்தி

 

 அங்கே மைதானங்கள் குறைவு. அவன் குடிக்கொண்டிருந்த அந்த இடம் காவல் துறைக்குசொந்தமானது. ரொம்ப நேரம் அவனைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த காவல்காரர்ஒருவர் இடையே அவனது ஓட்டத்தை தடை செய்தார். “தம்பி – இங்கே ஓட அனுமதி வாங்கவேண்டும்” என்று கூறி “ஆனாலும் நீ நன்றாக ஓடுகிறாய். முன்னுக்கு வருவாய்” என்றும் சொல்லி சிறிது நேரம் பேச்சுக் கொடுத்தார். அந்த நாட்டில் விளையாட்டிற்கு அத்தனை மதிப்பு இருந்ததாகத் தெரியவில்லை. இருந்த போதிலும் வீரர்களைப் பற்றி தொலைக்காட்சி செய்திகள் மூலமாக


முதல் அடி

 

 தற்செயலாக பழைய சாமான்கள் விற்கும் கடையின் வாசலில் பார்த்தேன் – மணியடிப்பதற்காக பள்ளிகளில் தொங்கவிடப்பட்டு இருக்கும் இரும்புத் தண்டவாளத்தை! எங்கள் பள்ளியில்கூட மணியடிக்க அது போன்றதொரு இரும்புத் தண்டவாளம் வராந்தாவில் தொங்கும். மணியடிப்பதற்கென வயதான வாட்ச்மேன் இருந்தார். அவர் வராத நாட்களில், மாணவர்கள் அந்த மணியை அடிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒரு சிற்பத்தைப் பார்ப்பது போல வியப்புடன் ஆழ்ந்து அந்தத் தண்டவாளத்தைக் கவனித்துக்கொண்டு இருந்தேன். எத்தனை முறை அதன் சத்தம் தொலைவில் கேட்டதும் ‘பள்ளிக்கு நேரமாகிவிட்டதே’ என்று ஓடி


காடன் மலை

 

 ‘‘ஐயா-மலையை வலப்புறமா சுத்தணுமா-இடப்புறமாவா.’’ ‘‘எப்படி வேண்டுமானாலும் சுத்து – மலையைப் பாக்கணும் – அதுதான் முக்கியம்.’’ அந்த இடத்திற்கு விசேட நாளன்று அவன் சென்றிருக்கக் கூடாது. விசேடங்கள் இட விசேடத்தை மங்கச் செய்யும். பெரிய அரண்மனை போன்ற கோவிலின் வெளிப் பிரகாரத்தில் ஒரு மூலையில் எங்கேயும் பார்க்காதவாறு உட்கார்ந்து கொண்டிருந்த தாடிக்காரிடம் ஏனோ பேச வேண்டும் போலத் தோன்றிற்று. கேட்ட கேள்விக்கு அவர்தான் இப்படிப் பதில் சொன்னார். காடன் மலையோடு அவனுக்குச் சொந்தம் உண்டென்று பல்லாண்டு காலமாக


மகத்தான ஜலதாரை

 

 மேலூர் – கீழுர் என இரண்டாகவிருந்த போதிலும் ஆற்று நாகரீகம் ஏற்பட்ட காலத்திலிருந்தே, அங்கே மக்கள் இயங்க ஆரம்பித்திருக்க வேண்டும். கோவில் நாகரீகமும் தழைத்திருக்கக்கூடும். அந்தக் கரைகளில் யானைகளின் களியாட்டங்களைப் பார்த்துவிட்டு ஒரு கிழவன் கடவுளை அறிந்து கொண்டதாகச் சொல்லித் திரும்பினான். பின்னர் அவன் பெயர் சொல்லிப் பாராட்டி சோறு மட்டும் சாப்பிட்டது அந்த ஊர். இடப் பெயரைக் கொண்டுதாம் அவ்விரண்டும் நின்றன. காலையிலே அந்த சூர்யவொளி மட்டும் கீழுரிலே முதலில் விழுந்து எழும்பிப் பின்னர் மேலூருக்கு