கதையாசிரியர் தொகுப்பு: மயூரா ரத்தினசாமி

1 கதை கிடைத்துள்ளன.

ஜோசப் என்பது வினைச்சொல்

 

 ராமநாதனுக்குக் காலையில் எழுந்ததும் ஜோசப்பின் நினைவு வந்தது. வீட்டுக்குப் பின்னால் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் மணி ஒலிப்பது, காலை நிசப்தத்தில் தெளிவாகக் கேட்டது. ‘ஜோசப்பை இன்றாவது எனக்குக் காட்டு, கடவுளே!’ என அவரது மனம் வேண்டிக்கொண்டது அவருக்கே ஆச்சர்யமாக இருந்தது. இதுவரை கிறிஸ்துவிடம் அவர் எதுவும் வேண்டிக்கொண்டது இல்லை. ஆனால், அவர் மனைவி கமலமும் மகள் சாவித்திரியும் செவ்வாய்க்கிழமைகளில் புலியகுளம் அந்தோணியார் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக்கொண்டு இருந்தனர். அங்குதான் சாவித்திரி ஆண்டனியைச் சந்தித்தாள். சாவித்திரியின் நினைவு வந்ததும்,