கதையாசிரியர் தொகுப்பு: மஞ்சு பாஸ்கர்

2 கதைகள் கிடைத்துள்ளன.

போச்சு போச்சு எல்லாம் போச்சு

 

 சௌம்யாவிற்கு கோபம் கோபமாய் வந்தது. இன்னிக்கு வசந்த் ஆஃபீஸிலிருந்து வரட்டும். நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்டிரணும். எத்தனை நாள்தான் பொறுத்துக்கறது. ஸௌமியாவிற்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. எல்லாம் மாலையில் மாமியாரிடம் பேசிய பிறகுதான். அவர்கள் பேசியது எல்லா நாளும் முன்னே பின்னே நடக்கிற அதே பேச்சுதான். வழக்கம்போல் இன்றும் மாமியாருக்கு ஃபோன் செய்தாள். வழக்கம் போல் விசாரணைகள். மாமியார் : குழந்தைகள் ஸ்கூல் சமர்த்தாய் போனார்களா? ஸௌமியா: ஆமாம்மா போனார்கள் (மனதிர்க்குள் : பத்தாவது, எட்டாவது


ஜெட்லேக்

 

 ஒரு வழியாக சென்னையிலிருந்து ந்யூயார்க் செல்லும் விமானதில் அமர்ந்தனர் 72 வயதான சங்கரனும் அவர் மனைவி 65 வயதான ராஜியும். அவர்களுக்கு இரு மகன்கள், ஸ்ரீராம், ஸ்ரீதர். இருவரும் நன்கு படித்து நல்ல வேலையில் சேர்ந்து, பின் அமெரிக்க கம்பெனிகளிலேயே வேலைகள் கிடைத்து திருமணமாகி இருவரும் 2 குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கின்றனர். ஸ்ரீராம் ந்யூயார்கிலும் ஸ்ரீதர் கலிஃபொர்னியாவிலும் அமெரிக்கக் குடிமக்களாக சொந்த வீடுகளில் வசிக்கின்றனர். இரு மருமகள்களான நித்யாவும் ப்ரீதியும் தேடிபிடித்த ஸாஃப்ட்வேர் பட்டதாரிகள். அவர்களும் வேலை