கதையாசிரியர் தொகுப்பு: மகேந்திரன் நவமணி

2 கதைகள் கிடைத்துள்ளன.

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்

 

 தொலைதூரம் நடந்த களைப்பில் நெஞ்சுக்கூடு மேலும் கீழும் இறங்கியது. சற்று நிதானித்துச் சுவாசத்தைச் சீராக்கிக் கொண்டார். நுதல் மலர்ந்த வியர்வையைத் தட்டி விட்டு அந்த மூதாட்டி முதுமை தின்ற யாக்கையை இழுத்துக் கொண்டு அரண்மணை நோக்கி மெல்ல அடி எடுத்தாள். இன்னும் சில காத தூரம் சென்றால் அரண்மனை வந்து விடும். உயர்ந்து நெடிந்து வானளாவ இருக்கும் கோபுரங்களைக் கண்டதும் மெல்லிய பரவசம் அவளின் நரம்புகளில் பூக்கத் தொடங்கியது. கோலைத் தத்தி தத்தி நடந்தவள் அரண்மனை வாயிலை


அப்பாவுக்குப் பிடிக்காத மாடுகள்

 

 கிழக்கே இரயில் வரும் ஓசை கேட்டது. சாலையை மறித்துக் கொண்டு இரயில்வே கேட்டைக் கடக்க முடியாமல் இருபுறமும் வாகனங்கள் வரிசைக் கட்டி நின்றன. தலை நரைத்து விட்ட வயதிலும் இரயிலைப் பார்க்கும் நொடியெல்லாம் ஒரு வித நடுக்கம் உடலை உலுக்கி விடுகிறது. நேசனல் ஜியோகிராபிக் அலைவரிசையில் சிங்கம் மானின் மேல் உறுமிக் கொண்டு பாயுமே…அது போல இரயில் தண்டவாளத்தை விட்டு விலகி என் மேல் பாய்வது போல பிரமை தோன்றி மறையும். இந்த நேரத்தில் புறப்பட்டிருக்கக் கூடாது.