கதையாசிரியர் தொகுப்பு: ப.பிரபாகரன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

நாலாவது பொண்ணு

 

 நாந்தாங்க எங்க வூட்ல நாலாவது பொண்ணு.., மூத்தவளுக்கு மட்டுந்தான் மொறப்படி கல்யாணம் ஆச்சி.., அடுத்தவ ரெண்டாந்தாரமா கட்டிக்கிட்டா ‘சிம்பிளா’ கல்யாணம். இட்லி,கேசரி,சட்னி,சாம்பார் இதுக்கு வாங்குன கடனையே எங்கப்பனால அடைக்க முடியல..! இதுல மூத்தவ புருசனுக்கு எடுத்துவச்ச ‘டிவிஎஸ்’ வண்டிக்கு.., “ரெண்டுமாசந்தான் ‘டீவு’ பணம் கட்டிருக்கிங்க..,நாலுமாசமா தொடந்து கட்டல அதனால வண்டிய தூக்கிட்டு போறோம்”னு சொல்லி வண்டிய எடுக்கவந்த சாருகிட்ட கையில காலுல வுழுந்து நாளக்கி காலைல கட்டுறம்னு சொல்லி அசமடக்கிருச்சி எங்கப்பன். ‘எங்கப்பன்’ ,அந்தாள நெனச்சாதான் நெருப்பா


சார்

 

 “சார்…, உங்கள ஓவர்பெல் அடிச்சதும் ‘கரஸ்பாண்டண்ட்’ பாத்துட்டு போவ சொன்னாரு சார்..,” ‘ஓ ஏ’ சொல்லிவிட்டு சென்றதிலிருந்து அன்பரசனின் உடலும் மனமும் ஒருசேர உதறிக் கொண்டிருந்தது. “ஹாஃப் இயர்லி எக்ஸாம் ரிப்போர்ட்ல 100% டார்கெட் அச்சீவ் பண்ணல., அதுவும் இங்கிலீஷ்ல மட்டும் மொத்தம் நாலு பேரு ஃபெயிலு., நாலு பேரும் ஆவரேஜ் ஸ்டூடன்ட்ஸ்தான் எவ்ளோ கோச்சிங் குடுத்தாலும் கொஞ்ச நேரத்துலயே மறந்துடறாங்க. கேக்கும் போது கரெக்டா ஆன்சர் பண்றாங்க ஆனா எக்ஸாம் பேப்பர்ல ஒண்ணுமே இருக்கறதில்ல.., குவார்ட்டர்லிலயே