கதையாசிரியர் தொகுப்பு: பொன்.கண்ணகி

1 கதை கிடைத்துள்ளன.

எங்கே என் குழந்தைகள்?

 

 “டீச்சர் கவலையா இருகிங்களா?” “அதெல்லாம் ஒண்ணுமில்லேமா பணியில இருக்குறவுங்க ஐம்பத்தெட்டு வயசானா பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டியது தானே. இதில் கவலைப்பட என்ன இருக்கு?” “இருந்தாலும் உங்களோட பிரிவைத் தாங்கிக்கறது எங்களுக்கு ரொம்பக் கஷ்டம் தான் டீச்சர்.” உண்மை தான். கற்பகம் டீச்சர் ஒரு சராசரி ஆசிரியை இல்லை. பள்ளி துவங்க ஒரு மணி நேரம் முன்னதாகவே பள்ளிக்கு வந்து விடுவார். வகுப்பறைகள் தூய்மையாக இருக்கின்றனவா என்று பார்வையிடுவார். மாணவர்களை குழுக்களாக அமர வைத்துப் படிக்க சொல்வார்.