கதையாசிரியர் தொகுப்பு: பொன்.அருணாச்சலம்

2 கதைகள் கிடைத்துள்ளன.

அவள் அப்படிப்பட்டவளா!

 

 ”மங்கை இப்போ ஆறு மாசமாமே… தெரியுமா?” ”கேள்விப்பட்டேன். என்ன கருமமோ, புருஷன் செத்து ஒரு வருஷம்கூட ஆகலை… அதுக்குள்ளே இப்படியரு அசிங்கம்!” ”ஆமாமா! தான் விதவை, தனக்கு மறு கல்யாணம் ஆகலைங்கிற விஷயம் இங்கே எல்லோருக்குமே தெரியும்னு இவளுக்குத் தெரியும். அப்படியும் எத்தனை தைரியமா வவுத்துல புள்ளையைத் தாங்கி நிக்குறா பாரு!” ”மங்கைக்கும் அவளோட கொழுந்தனுக்கும், புருஷன் இருக்கிற காலத்துலயே தொடர்பு உண்டுன்னு கேள்வி. இப்ப இவ வவுத்துல வளர்ற குழந்தை நிச்சயம் அவன் கொடுத்த பரிசாதான்


கொலையும் செய்வான்…

 

 பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னர், சொந்த மண்ணில் கால் பதிக்கிறான் அவினாசி. அவனுக்குத் தன் குடும்பத்தைப் பார்க்க வேண்டும் என்று அதீத ஆசை. ஆனால், அவன் மேல் குடும்பத்திலுள்ள அனைவருக்குமே கோபம்! இது அவனுக்கும் தெரியும். பின்னே… அவசரப்பட்டு ஒரு கொலை பண்ணிவிட்டு, குற்றவாளி என்ற பெயரில் ஜெயிலில் அடைபட்டுக்கிடந்த அவனைச் சொந்தம் கொண்டாட யார்தான் விரும்புவார்கள்? அவன் ஜெயிலில் இருந்த காலத்தில், குடும்பத்திலுள்ள யாரும் சென்று பார்க்காததற்குக் காரணமும் அதுதான். கொஞ்சமாவது குடும்பம், மனைவி, மக்கள் என்ற