கதையாசிரியர் தொகுப்பு: பா.திருச்செந்தாழை

2 கதைகள் கிடைத்துள்ளன.

தேவைகள்

 

 சிவசு அய்யாவுக்கு அந்த வாசனை மட்டுப்பட்டது. மேலும் மூக்கைச் சுருக்கி அதை உறுதிப்படுத்திக்கொள்ள முயன்றார். அதே வாசனைதான்! ஏதோ யூகத்துடன் விறுவிறுவென கொல் லைப் பக்கம் சென்றார். கொல்லையின் புறத்திலிருந்து நீண்டிருந்த வயல்வெளி வரப்பில் முத்து சென்றுகொண்டு இருந்தான். புழக்கடைத் தொட்டித் தண்ணீரை அள்ளி முகத்தில் விசிறிக்கொண்டு இருந்தாள் செங்கு. அந்த வாசனை குறித்தான புதிர் ஒன்று இருந்தது சிவசு அய்யாவுக்கு. அந்தப் புதிர் அழைத்துச்செல்லும் விடை உண்மையாக இருக்கக்கூடாது என்ற உள்மன பதற்றமும் இருந்தது. அந்தப்


ஆண்கள் விடுதி: அறை எண் 12

 

 கழிப்பறை சிதிலமுற்ற குழாயிலிருந்து கொட்டிக் கொண்டிருந்த நீரில் பிளாஸ்டிக் வாளி நிறைந்து வழிந்துகொண்டிருந்தது. மிகுந்த அமைதி நிலவிய அவ்விடத்தில் சீரான அவ்வோசை மூலம் தன்னிருப்பை இயல்பாக்கும் விதமாய் அச் செயலை மாற்றியிருந்தான். மறுபடியும் அப்படங்களைப் பார்த்தான். புகைப்படப் பெண்ணின் நிர்வாணக் கோணங்கள் இவனுக்குள் எவ்வித ரத்தப் பாய்ச்சலையும் நிகழ்த்தவில்லை. மடக்கிவைக்கப்பட்டிருக்கும் அப்புத்தகத்தில் வழமையேறியிருக்க, புகைப்பட வர்ணங்கள் மினுமினுப்பற்று உணர்ச்சியிழந்திருந்தன. நீண்டகால ரசித்தலின் விளைவாய்ச் சிரித்துக்கொண்டிருக்கும் அப் பெண்களின் நிர்வாணம் அவர்களின் இயல்பான உடைகளாகி, மர்மங்களற்ற நீள் பாலை