கதையாசிரியர் தொகுப்பு: பா.செயப்பிரகாசம்

10 கதைகள் கிடைத்துள்ளன.

புத்தர் ஏன் நிர்வாணமாய் ஓடினார்?

 

 “புத்தர் ஏன் நிர்வாணமாய் ஓடினார்?” எனும் சிறுகதை தமிழ்நாட்டின் விவசாயிகளது போர்க்குணத்தை மிகவும் வித்தியாசமாகக் காட்டுவது. இதனைக் கரிசல் எழுத்தின் முக்கியமான எழுத்தாளரான பா.செயப்பிரகாசம் எழுதி “காக்கைச் சிறகினிலே” எனும் இதழில் வெளிவந்து உள்ளது. *** 25 – வயதில் இளவட்ட மணிமுத்துவுக்கு கல்யாணம் நடந்தது. வீட்டு வேலை, சமையல் வேலையில் பதனம், பக்குவம், கருத்தாயிருப்பார்கள் சில பெண்கள். சிலருக்கு காட்டுவேலை, விவசாய வேலை எடுப்பாய் அமையும். இரண்டையும் மேலெடுத்துப் போட்டு, சளைக்காமல் செய்கிற கூடுதல் உழைப்பாளியாக


விஷக்கடி

 

 அது மேல் நோக்கி செலுத்திய குரலாகத்தான் வந்தது. கீழ்வீட்டில் யாரும் இல்லை. வெகு நேரமாகக் கூப்பிட்டுக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. “ஸாரி ஸார்” என்ற அழைப்புக் குரல் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து சுருண்டது. காலை முதல் சுறுசுறுப்பாய் இயங்கிய வீதி விறைப்பு அடங்குகிற மதியப் பொழுது, சத்தமில்லாமல் அடங்கி விட்ட வீடுகளும், மௌனத்தின் குகை போல் நீண்டு கிடக்கும் வீதியும், கொஞ்சம் தலைசாய்க்க அனுமதித்தன. இமைகள் வலுக்கட்டாயமாகப் பிரித்து, எதிரேயும், சுற்று முற்றும் பார்த்தாள். எவரும் இல்லை.


பொய் மலரும்

 

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வீட்டுக்கு முன்னாலுள்ள முக்கும் கல் லில் முகம் சோம்பி ஒரு பாலகன் உட்கார்ந்திருந்தான், தன் வினையை மிகவும் பத்திரமுடன் தூக்கிப் பிடிப்பது போல், பொக்குக் கட்டியிருந்த சிரங்குள்ள கையை அவன் உயர்த்திப் பிடித்திருந்தான். வெடித்து ஈரம் உலர்ந்து விறுவிறுவென்றிருக்கும் சிரங்கைச் சொறிகையில், திணறிப்போய் ‘ஆ’ ‘ஊ’ என்றான். வாயைக் கோணிக் கொண்டும் முகத்தைச் சுளித்துக் கொண்டும் இன்ப வேதனை சொறிகையில் அனுபவித்தான். முக்குக்


நரியின் கருணை – ஒரு பக்க கதை

 

 ஓநாய்களின் கூடாரத்திற்கு ஆடுகள் கூட்டம் கூட்டமாய்ப் போவதைக் கண்டு நரிகளின் தலைவன் கவலையடைந்தது. ஆடுகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. இத்தனை நாள் தன்னுடைய சகாக்கள் வெட்டுப்பட்டு, கொல்லப்பட்டு செத்தபோது ஏறெடுத்துப் பார்க்காத கிழட்டு நரி, இப்போது சமாதானத்திற்குக் கூப்பிட்டது ஆடுகளுக்கு ஆச்சரியமா இருந்தது. “இனிமேல் நரிகள் ஆடுகளைக் கடிக்கக் கூடாது, ஆடுகளைப் பாதுகாப்பதென நரிகள் சபதம் எடுத்துட்டோம். நரிகளுக்கும் ஆடுகளுக்கும் இடையே சமாதான சகவாழ்வு தொடரும்” நரி சொல்லியது. நரிகளின் தலைவன் கமண்டலமும் தண்டும் கொண்டு, சாதுவாய்


விஷக்கடி

 

 அது மேல்நோக்கி செலுத்திய குரலாகத்தான் வந்தது. கீழ்வீட்டில் யாரும் இல்லை. வெகு நேரமாகக் கூப்பிட்டுக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. “ஸாரி ஸார்” என்ற அழைப்புக்குரல் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து சுருண்டது. காலை முதல் சுறுசுறுப்பாய் இயங்கிய வீதிவிறைப்பு அடங்குகிற மதியப் பொழுது, சத்தமில்லாமல் அடங்கி விட்ட வீடுகளும், மௌனத்தின் குகைபோல் நீண்டு கிடக்கும் வீதியும், கொஞ்சம் தலைசாய்க்க அனுமதித்தன. இமைகள் வலுக்கட்டாயமாகப் பிரித்து, எதிரேயும், சுற்று முற்றும் பார்த்தாள். எவரும் இல்லை. கீழ்வீடு காலியாக இருந்தது. நல்ல


பராசக்தி

 

 ஊரில் கெத் கெத்தென்று தண்ணீர் தத்தளித்துக் கிடந்த கண்மாயைப் போனவருசம் வந்தவேளை கண்டிருக்கிறாள். கண்மாயின் ஒரு அத்தத்திலிருந்து இன்னொரு அத்தத்துக்கு முங்கு நீச்சல் போட்டு நீர்ப்பாம்பு சேர்ந்ததுபோல், மேகங்களினூடாக ஒரே நீச்சலில் விமானத்தில் தமிழ்நாட்டை எட்டிப்பிடித்துவிட்டாள் நிலா. வசிப்பது அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தின் குளிர் மூலை; வந்தடைந்தது வெப்பப் பிரதேசத்தின் தென்கோடி. சென்னைப் பன்னாட்டு விமான நிலையத்திற்கு இரண்டு வருடம் முன்பு வரை பகலும் இரவும் மாறி மாறி மொத்தமாய் 28 மணிநேரப் பயணம். இடைத்தங்கல், விமான


குஷ்டரோகிகள்

 

 சமூகத்திலிருந்து, மனித நேய உறவுகளிலிருந்து விலகிப்போன தொழுநோய் மனப் போக்காளர்களை வைத்து சோதனைமுறையில் எழுதப்பட்ட ஒரு கதை இது. உலகில் பாதியைச் சப்பித் தின்று தீர்த்துவிட்டுத்தான் ஓய்வேன் என ‘கரோனா தொற்று’ நட்டுக்க நிற்கும் காலத்தில், தொற்றுநோய் குறித்த (Epidemic) கதைகள் தொகுப்பினை வெளியிட வேண்டுமென பிரான்சிலிருந்து வெளியாகும் France-based Editions Jentayu இதழ் விரும்பியது. தமிழிலிருந்து எனது இக்கதையைத் தேர்வுசெய்து அண்மையில் பிரெஞ்சில் மொழியாக்கம் செய்துள்ளார்கள். இந்த சிறப்புத் தொகுப்பு மின்னிதழாக வெளியாகவிருக்கிறது. ‘டைபாய்டு காய்ச்சலால்’


தடயம்

 

 பல வருடங்களாக வங்கி அங்கே இருக்கிறது. அந்த வட்டாரத்தில் இருந்து வங்கிக்குப் பணம் எடுக்கவும் போடவும் அமுதா வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறாள். வங்கியின் வாசலில் ஏறியபோது என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு கால்களின் நடுக்கத்தை உணர்ந்தாள். உணவைவிட அச்ச உணர்வுக்குப் பயண வேகம் அதிகம். வாயால் கொள்ளப்படும் உணவு வயிற்றை அடைவதைவிட, விரைவாக நெஞ்சின் பதற்றம் கால்களுக்குப் பயணப்பட்டுவிடுகிறது. வங்கிக்குள் புதிதாக நுழைபவர்களைப் போல் துவண்ட கால்களை மேல் நகர்த்தி நடந்தாள். வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர்களின் எண்ணிக்கை


தாலியில் பூச்சூடியவர்கள்

 

 முதன் முதலாய் ஒரு பெண், அக்கினிச்சட்டி ஏந்தி ஆடுகிற சம்பவம் அந்த ஊரில் நடந்தது. பள்ளத் தெருவில் நடந்தது. அப்போதுதான் கல்யாணமாகி வந்த ஒரு பெண் அக்கினிச் சட்டி ஏந்துவது அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. மங்கலப் புடவையின் கசங்கல் கூட இன்னும் மறையவில்லை. காற்றுக்கு அசைகிற அலைகளின் நொறுங்கல்போல் இன்னும் கருங்கல்கள் இருந்தன. பள்ளரும் சக்கிலியரும் ஒட்டரும் இருக்கிற பள்ளக்குடியில் அல்லாமல், வேறெங்கும் இது நடக்காது. பொய்லான் வீட்டுக்குப் புதுமருமகள் வந்திருக்கிறாள் என்ற செவிச் சேதி மட்டும்


மகன்

 

 [இக்கதை 12-ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் பக்கம் 197 (2017 பதிப்பு) / 225 (2005 பதிப்பு) இடம் பெற்றுள்ளது] நான் போய் இறங்கியபோது, பண்ணைப்புரத்தில் வித்தியாசமான சூழல் நிலவியது. ஊரின் தெற்கை எல்லை கட்டியிருந்தது வாகான புளியமரம். புளியமரத் தூரைச் சுற்றி மழையை நேரே வேருக்குள் இறக்கிவிடுவது போல் பள்ளம் நோண்டி சுற்றி வட்ட மேடை கட்டியிருந்தார்கள். செழிக்க தண்ணீர் குடித்த புளிய மரம் குளு குளுவென்று நிழல் பரப்பி முன்வெயில், பின்வெயில் படாமல்