கதையாசிரியர் தொகுப்பு: ந.முத்துசாமி

4 கதைகள் கிடைத்துள்ளன.

யார் துணை

 

 இது நேற்று நடந்தது. ஒரே இருட்டு கும்மிருட்டு. அழுகத் தேங்காய்க்குள்ளே நுழைஞ்சு பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி. பிரஸ்ஸிலே மிஸின்மேன் சிலிண்டர் இங்கைத் தொடச்சுப் போட்ட பேப்பர் மாதிரி கீற்றுகீற்றா வானத்தில் கொஞ்சம் வெளிச்சம். நான் தூங்கிக் கொண்டிருக்கேன். நல்ல தூக்கம். நல்ல தூக்கமா? என்றைக்கய்யா நல்ல தூக்கம் தூங்கினேன்! ஏதோ துங்குகிறேன். விழித்துக் கொண்டிருப்பதைப் போல ஒரு தூக்கம் நடுநிசி. “சார் தந்தி.” “கதவு ஓட்டை வழியா போட்டுட்டுப் போய்யா!” என்றோ என்றைக்கோ -யார் கண்டா?


நீர்மை

 

 மூத்த உள்ளூர்க்காரர்களையும் எப்போது அறிமுகமானார்கள் என நினைவு கொள்ள முடிவதில்லை. ஒருவன் தன் தாயையும் முதல் அறிமுகம் எப்போதென்ற பிரக்ஞையின்றிப் போகிறான் ஆனால், அவள் எனக்குச் சாலைக்குளத்திலிருந்துதான் அறிமுகமாயிருக்க வேண்டுமென நிச்சயமாக இருந்தாள். எல்லாவற்றிலும் ஆச்சரியம் கொள்ளும் குழந்தைக்கு குளிக்கிறவள் என்று விநோதமற்றுப் போகாமல் அவள் நடுக்குளத்தில் தனித்துத் தென்பட்டிருப்பாள். நரைத்த பனங்காயைப் போல அவள் தலைமிதந்து அலைந்து அவளென்று தெரிய இருந்திருக்கும். அவள் தன் பத்தாவது வயதில் வீணானவள். இறக்கும்போது அவளுக்கு வயது தொண்ணூறுக்கு மேல்.


இழப்பு

 

 தன் நண்பர்களைக் கொல்ல வேண்டுமென்று அவனுக்குத் தோன்றிவிட்டது. ஏன் அப்படித் தோன்றிற்று என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஒருநாள் மாலை பைகிராஃப்ட்ஸ் ரோட்டில் தன் நண்பர்களோடு போய்க்கொண்டிருந்தபோது திடீரென்று இப்படித் தோன்றிற்று. 13-ஆம் நம்பர் பஸ் தன்னைக் கடந்து போனபோது நண்பர்களை ஒவ்வொருவராக சக்கரத்தில் தள்ளிக் கொன்றுவிட வேண்டுமென்று தோன்றிற்று. புருவத்தை உயர்த்தி ஏன் என கேட்டுக்கொண்டான். நினைப்பை மனதில் அழுத்தி அழித்துவிட வேண்டுமென்று கண்ணை இறுக மூடிக்கொண்டான். சின்னப்பையனாகக் கிராமத்தில் கும்பியில் கால் வைத்து அழுத்தும் தோற்றமும்,


கல்யாணி

 

 என் பேத்தி ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். காலை நேரம். புஞ்சையிலிருந்து தொலைபேசியில் செய்தி வந்தது. ‘கல்யாணி இறந்துவிட்டார். நேற்று இரவு இறந்துபோனார். இன்று பிற்பகல் எடுக்கிறார்கள்’ என்றார், தொலை பேசியில் பேசியவர். ‘நீங்கள் யார் பேசுவது?’ என்று நான் கேட்டேன். ‘நான் நரசிம்மனின் மகன்’ என்றார் அவர். எந்த நரசிம்மன்? எனக்கு நிறைய நரசிம்மன்கள் பழகியிருந்தார்கள், கூத்தில் உள்ள நரசிம்மனையும் சேர்த்து. கல்யாணிக்குக் கல்யாணம் பண்ணிவைப்பதில் என் பங்கு மிகப் பெரிதாக இருந்தது. அவருடைய தங்கையைக் கல்யாணம்