கதையாசிரியர் தொகுப்பு: ந.தாமரைக் கண்ணன்

1 கதை கிடைத்துள்ளன.

ஒற்றைப் பனை

 

 பதினான்கு ஆண்டுகள் சொந்த ஊருக்கே வராமல் இருந்தது வரமா? சாபமா? என்று தெரியவில்லை. இதே காலக் கணக்கில் இராமன் போனது வனவாசம். நான் போனது பண வாசம். சொந்த ஊரில் பஞ்சாயத்துப் பள்ளியில்தான் படிப்பு என்றாலும் நகரத்தில் அமைந்த கல்லூரிப் படிப்பும் கிடைத்த வேலையும் வாழ்க்கையையே தடம் மாற்றிப் போட்டன. பொறியியல் படிக்க ஹாஸ்டலில் சேர்ந்தபோதே சொந்த ஊரோடு இருந்த உறவுச் சங்கிலி அறுந்து போக ஆரம்பித்திருக்க வேண்டும். அதன் பின் நகரத்தில் கிடைத்த வேலை, சென்னை