கதையாசிரியர் தொகுப்பு: நெய்வேலி பாரதிக்குமார்

13 கதைகள் கிடைத்துள்ளன.

செகண்ட்ஸ்

 

 மூச்சிரைக்க காற்றைத் துரத்தினான் முகுந்தன். நின்று விடுவோமோ என்ற பதற்றத்தோடு அதிவேகமாகத் துடித்தது அவனது இதயம். கணுக்கால்களின் நரம்புகளை யாரோ கயிற்றால் கட்டி இழுப்பது போல் வலி. பற்களைக் கடித்துக் கொண்டு கோட்டை நெருங்கி விழுந்தான். பிரபஞ்சத்தின் காற்று முழுக்க அவன் உடலுக்குள் புகுந்து ஒரே நேரத்தில் வெளியேறியது போல வெப்பமாய் மூச்சு விட்டான். உடல் இரும்புப் பட்டறையின் உலை போலக் கொதித்தது. தெப்பலாக நனைந்திருந்தான். சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டு பக்ரூவை உற்றுப் பார்த்தான். பக்ரூ


அறை

 

 அந்த அறையின் சுவர் வண்ணம் மிக நேர்த்தியாக பூசப்பட்டிருந்தது. யாரோ ஒரு நுணுக்கமான வேலைக்காரன் பார்த்துப் பார்த்து பூசியிருக்க வேண்டும். அல்லது ஏதோ ஒரு எந்திரத்தின் வேலையாகவும் இருக்கக் கூடும். இறுக மூடப்பட்டிருந்த ஜன்னல் கண்ணாடியின் வழியே வெளியே தெரிந்த மலர்கள் சுதந்திரமாக ஆடிக்கொண்டிருந்தன. பெயர் தெரியாத பூச்சி ஒன்று மலரக் காத்திருக்கும் மொட்டு ஒன்றை சுற்றிச் சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.குளிர் சாதனக்கருவி இன்னும் அறையைக் குளுமையேற்றிக் கொண்டிருந்தது. அறைக் கதவுகள் அத்துனையும் சாத்தப்பட்டு காற்று தவித்துக்கொண்டிருந்தது.


பனிரெண்டு மின்னல்கள்

 

 கி. பி. 2139, ஏப்ரல்-5 விண்வெளிப் பயண அனுமதிக்கூடம் எந்த பரபரப்பும் இல்லாமல் மிக அமைதியாக இருந்தது. நேரம் 11-03. செக்-இன் பகுதியில் M 192030 தன் அடையாள அட்டையை செலுத்தி நுழைவு அனுமதிச் சீட்டுக்காக காத்திருந்தான். சில நொடிகள் கழிந்து 11-08க்கு உள்செல்ல அனுமதி கிடைத்தது. பின் W 649122 தன் கார்டை செலுத்தினாள். 11-10க்கு நுழையலாம் என பதில் வந்தது. இருவரும் தங்கள் ஆவணங்களை சரிபார்த்தனர். CC கேமரா இருவரையும் zoom செய்து அறைகளின்


நில் … கவனி… செல்…

 

 மூன்று: காதலின் நண்பன் யார்? சந்தேகமென்ன … ‘செல்’தான். ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு அலைவரிசை இருக்கலாம். ஆனால், காதலும் செல்லும் ஒரே அலைவரிசை இரவுகள்தான் இரண்டுக்கும் பிடித்தமான பொழுது தனிமைதான் இரண்டுக்கும் பிடித்தமான சூழல் இரண்டில் சில இதயத்தில் இடம்பிடிக்கும் சில இடுப்பில் இடம் கேட்கும்… விரல்கள் தேய்ந்தாலும் தொட அலுப்பதேயில்லை “அடே… சூர்யா, மொட்டைமாடியில ஒத்தையா என்ன பண்ணிகிட்டு இருக்கே?” “ம்… வடாம் காய வைச்சிட்டு இருக்கேன்.” “ஓ… எஸ்.எம்.எஸ்-ஐ பிழிஞ்சி உலர்த்திகிட்டிருக்கியா? என் கோடவுன்ல


போட்டுத்தள்ளு

 

 எப்படியோ ஒரு கசகசப்பு மரணம் நிகழ்ந்த வீட்டில் புகுந்துவிடுகிறது. சம்பூரணத்தாச்சிக்கு எழுபத்தி மூன்று வயதாகிறது. படிக்கட்டிலிருந்து விழுந்த அதிர்ச்சியில் இறைவனடி சேர்ந்துவிட்டார். மல்லிகாதான் முதலில் அவரது மரணத்தை உணர்ந்தவள் பின்பு பிரகடனப்படுத்தியவளும் அவளே… மரணம் பற்றிய செய்தி மனிதர் விட்டு மனிதர் பரவுகையில் இயல்பான வருத்ததை மீறி மெல்லிய மகிழ்ச்சி இழையோடுவதை கவனித்திருக்கிறீர்களா? அதிர்ச்சி மிக்க ஒரு புதிய செய்தியை முதலில் அறிவித்த பரவசம் அது. சம்பூரணத்தாச்சி மரணத்தை எல்லோரும் கல்யாண சாவு என்றார்கள். ஒருத்தரையும் படுத்தாம


பிடிபட்டவன்

 

 ‘அரணாக் கயிறு இல்லாம எழவெடுத்த ட்ரவுசரு நிக்கமாட்டேங்குது’ வயித்தை ஒரு எக்கு எக்கி பொத்தானில்லாத ட்ரவுசரை முடிச்சுப் போட்டுக் கொண்டான் மருதன். எரும மிதிச்ச கால் எரியறது மாதிரி வெய்ய மூஞ்சியில எரிச்சலைக் கெளப்பியது. குத்துக் காலிட்டுக் குந்தியபடி கீழக் கெடந்த ரவக் குச்சிய எடுத்து மணல் தரை மேவாட்டத்துல ஒரு நோக்கமுமில்லாம என்னத்தையோ கிறுக்கினான். அது என்னமோவாக வடிவெடுத்தது. குச்சியை தூரப் போட்டுவிட்டு ஆட்காட்டி விரலால் அளைந்தான். மணல் துகள்கள் விரல் சந்துல பூந்து கிச்சுகிச்சு


கசக்கும் சர்க்கரை

 

 சங்கீத சீசன் என்றால் கட்டாயம் நீங்கள் ஏதாவதொரு சபாவில் சிதம்பரநாதனை பார்த்திருக்கலாம். அவனொரு சுவாரஸ்யமான பேர்வழி. நல்ல ரசனைக்காரன். அப்படியென்றால் திருவையாறு பக்கம் வராமலா போய்விடுவான், அப்போது பார்த்துக் கொள்ளலாமென்று திட்டம் ஏதாவது தோன்றினால் அதை சுத்தமாக மனதிலிருந்து அழித்துவிடுங்கள். ஏனென்றால், சிதம்பரநாதனுக்கு சபாக்களில் கச்சேரி கேட்பதை விட, கேண்டீனில் என்னென்ன சுவையான ஐட்டம் கிடைக்கும் என்பதில்தான் நாட்டமதிகம். இப்பொழுது புரிந்திருக்கும் … எதற்கவன் ரசிகனென்று. நளபாகம் அம்பி என்றால் நெய் சொட்டச் சொட்ட முந்திரிப்பருப்பு மணத்துடன்


மயில்குட்டி

 

 துவண்டு போயிருந்த நம்பிக்கையை விக்கிரமாதித்தன் போல் தோளில் சுமந்து கொண்டு, வீட்டுக்குப்போய் என்ன சமாதானம் சொல்லலாமென்று சிந்தித்தவாறே நடந்தான். அவனுக்கு இப்படியொரு சோதனை வந்திருக்கக் கூடாதுதான். அவனை நோக்கித்தான் எத்தனையெத்தனை ஆயுதங்கள்! இரண்டு நாட்களுக்கு முன் அவன் வேலை பார்க்கும் கம்பெனி அவன் மீது எய்த சென்னைக்குச் செல்வதற்கான மாற்றல் ஆணை வந்தது. மாற்றல் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனாலும் அது இவ்வளவு சீக்கிரம் வருமென்று எதிர்பார்க்கவில்லை. வழக்கம் போலவே, ‘இதைத் தவிர்க்க முடியாதா, வேறு வழிகள் கிடையாதா?’


விசும்பல்

 

 “சொக்கன் வந்துட்டானா?” “கெழக்கால பக்கம் நிக்கிறேன் சாமி…..” “ அப்பிடியே பந்த கால் பக்கம் குந்துடா. அரை மணிக்கொரு தரம் நீயா பாத்து ஊதவேண்டியதுதான்… ஒனக்கு ஒரு ஆளு மேம்பார்வை பாத்துகிட்டு வெரட்டிகிட்டு இருக்கமுடியாது… சுத்தம்பற ஊதுனாத்தான் பேசுனபடி காசு..” தலையாரி உத்தரவு போட்டுக்கொண்டே நடந்தார். “ தெரு கிளிஞ்சிடாது… ஓன் சோலியப்பாரு… அய்ய…. என்னப் பத்தி கவலப்படாதே” சங்கை எடுத்து மணி அடித்தபடி ஊதத்துவங்கினான் சொக்கன். தெரு சனம் ஒவ்வொருவராய் வர துவங்கினர். சின்ன வயசு


மழ

 

 தனத்துக்கு காய்ச்சல் முழுவதுமாக விட்டுருந்தது. ஊர்பட்ட போக்கிரித்தனத்தை பண்ணிட்டு இந்த புள்ளைங்க தூங்கறப்பதான் எம்புட்டு அழகு!! கணேசன் அவனையும் அறியாமல் அவளது பிஞ்சு கால்களைப் பிடித்துவிட்டான். காய்ச்சல் கண்ட வேகத்துல உலர்ந்துபோன உதடுகள் காய்ந்து வெளுத்துப்போயிருந்தது. தேய்க்கும்போது தீய்ஞ்ச துணிமாதிரி வானம் கறுத்துக்கிடந்தது. இருட்டட்டும் ஒரு பாட்டம் ஆடித்தீத்துப்புடலாம்னு கறுவங்கட்டிகிட்டுத் திரியிற குடிகாரப்பய மாதிரி மேகம் அங்குமிங்குமாக அலைந்து திரிந்துகொண்டிருந்தது. கணேசனுக்கு அடுப்படி பக்கம் திரும்பிப் பாக்கவே பயமாக இருந்தது. மேல்கூரை பிஞ்சி அங்கங்கே நட்சத்திரம் போல