கதையாசிரியர் தொகுப்பு: நீல பத்மநாபன்

13 கதைகள் கிடைத்துள்ளன.

விரல்கள்

 

 அடைத்துவிட்ட படுக்கை அறைக்கு வெளியில் சிரிப்பலைகள் கேட்டு அடங்கிவிட்டன. அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் மங்கிய நீல பல்பின் ஒளி. கட்டிலில் சாய்ந்தவாறு உட்கார்ந்திருக்கும் அவர். பக்கத்தில் நாணம் பூரணமாய் இன்னும் விட்டு மாறாத சித்ரா. மூலையில் மெல்ல சுழன்று கொண்டிருந்த பழைய மின் விசிறி ஒன்றின் முனகல் மட்டும் லேசாக கேட்டுக் கொண்டிருந்தது. கழட்டி வைத்திருந்த கைக்கடிகாரத்தை எடுத்துப் பார்த்துவிட்டு அவர் சொன்னார்: “நேரம் வெளுக்க ரெண்டு மணி நேரம்தான் இருக்குது… ஆமா.. இத்தனை நேரமாய் நான்தான் என்னவெல்லாமோ


மயான காண்டம்

 

 சந்தடிமிக்க சாலையிலிருந்து. அருணாசலத்தின் வீடிருந்த தெருவுக்கு வந்த உடனேயே தெருவின் மறுமுனைக்குத் தாவிய மாணிக் கத்தின் கண்கள்… வெறிச்சோடிப் போய்க்கிடந்தது. அப்படியென்றால், அதற்குள் எடுத்துச் சென்றுவிட்டார்களா? கைக்கடிகாரத்தைப் பார்த்த போது எண்கள் சரிவரத் தெரிய வில்லை. செய்தி அறிந்து வீட்டிலிருந்து இறங்கிய அவசரத்தில் கண்ணாடி எடுக்கவில்லை. கண்ணாடி இல்லாமல், இப்போதெல்லாம் ஒன்றுமே வாசிக்க முடிவதில்லையே… இருந்தும் இன்னும் மணி மூன்று கூட ஆகவில்லை என்பதை யூகிக்க முடிகிறது. ‘பையன் ரெண்டரை மணி ஃப்ளைட்டில் வருகிறான். எடுக்க எப்படியும்


கடிகாரம்

 

 இரவு முழுதும் தூங்கமுடியாமல் அவன் அவஸ்தைப் பட்டான். இடப்பக்கத்தில் உடம்பில் தோள் பட்டையி லிருந்து கழுத்து, நெஞ்சு, விலா, இடுப்புவரை அசாத்திய வலி. குறிப்பாக மார்புக்குள் பயங்கர வேதனை. சரியாகச் சுவாசம் விடக்கூட முடியவில்லை. உள்ளுக்குள்ளே என்னவோ ஒன்று சுண்டிச் சுண்டி இழுப்பது போல் ஒரு கொடும் நோவு… விழிகளைத் திறக்கும்போது தீயாக எரிந்தது. அப்படி ஜுரம்… அப்பா, ஐயோ என்று ஓலமிட்டுக்கொண்டிருந்தான். கைபட்டால் வேதனை இன்னும் கூடியது. எனிவே தடவ வந்த மனைவி மாலுவை விரட்டியடித்தான்.


சண்டையும் சமாதானமும்

 

 ‘அம்மா…’ மிகவும் அருகில் தெளிவாகவும் அடக்கமாகவும் கேட்ட அந்தக் குரல் யாருடையது என்று மாரியம்மைக்குப் புரிந்து போய்விட்டது. எனினும் நம்பமுடியவில்லை. செல்லையா வந்துட்டானா? மாரியம்மையின் விழிகள் கனத்தன. நாலு நாள் பட்டினியின் அசதியும், ஜுரத்தின் களைப்பும் வயோதி கத்தின் தளர்ச்சியும் கூடச் சேர்ந்திருந்ததால் அவள் பார்வைக்கு நல்ல தெளிவு இருக்கவில்லை. எனினும் மங்கலாகத் தெரிந்த பரந்த முகமும், இருபக்கங்களிலும் முறுக்கிவிடப்பட்டிருந்த பெரிய மீசையும் அவனை இனம் கண்டுகொள்ள வைத்துவிட்டன. காய்ச்சல் இருக்கிறதா என்று அவள் நெற்றியைத் தொட்டுப்


பொருத்தம்

 

 மூர்த்தி அந்த வீட்டுக்குள் நுழையும் போது, வீடு அமைதியில் ஆழ்ந்து கிடந்தது. வெளி முற்றத்தைக் கடந்து படியின் அருகில் நின்று கொண்டு செருப்பைக் கழற்றிப் போட்டவாறே, வராந்தாவின் இடப்பக்கம் ஜோஸியர் அருணகிரி வழக்கமாக உட்கார்ந்திருக்கும் அறையை எட்டிப் பார்த்தபோது அங்கே அவர் இல்லையென்பது தெரிந்தது. வீட்டினுள் பாத்திரப் பண்டங்கள் உராயும் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஓரிரு முறை கனைத்துப் பார்த்தும் யாரும் வெளியில் வரவில்லை. வழக்கத்திற்கு மாறாகக் காலையில் இரண்டு மைல் தூரம் வேகமாய் நடந்ததால் அவனுக்கு


தேடல்

 

 வெளியில் கார் ஹாரன் ஒலி கேட்டது போலிருந்தது. அதோடு இரும்புக் கேட்டில் யாரோ ‘ணங் ‘ ‘ணங் ‘ என்று தட்டும் ஓசை. மணி திடுக்கிட்டுக் கண்விழித்தான். மனசுக்குள் ஒரு எரிச்சல்….இன்றும் நேற்று போல் தானா ? இதென்ன நியூசன்ஸ் ‘ இந்த அகால வேளையில் இப்படி வந்து கதவைத் தட்டி எழுப்பும் அளவுக்கு அவசரக் காரியம் என்னமோ….. ‘ மீண்டும் காரின் ஹாரன். ‘ணங் ‘ ‘ணங் ‘ நெஞ்சின் மீது பாம்பாய்ப் பற்றிக்கிடந்த நிர்மலாவின்


மெளனம்

 

 இன்று எனக்கு மெளன விரதம். இனியும் எனக்கு சித்திக்க, கைகூட ஏதாவது மீதி இருக்கிறதா ? பின் எதுக்கு இந்த நோன்பு ? நடுக்கூடத்தில் வழவழப்பான தரையில் சுவரில் சாய்ந்தவாறு உட்கார்ந்து கொண்டிருக்கிறேன், மனசின் உள் வெளியில் இன்னதென்று தெரியாது சொரு சொருவென்று நினைவுகள்… நரம்பில்லாத நாக்கின் சுழற்சியில் வெளிப்படும் சப்தங்களுக்குத்தான் என்னவெல்லாம் தொனி விசேஷம். அவை பேசும், கேட்கும் உள்ளங்களில் எழுப்பும் நமைச்சல்கள் உம்…இப்போகூட வாயைத்தான் மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்க முடிகிறது….உள்ளம் ? நேர் எதிர்ச்சுவரில் மேலே


[அ]லட்சியம்

 

 மேம்பாலத்தைக் கடந்து பத்தடிகூட நடந்திருக்கமாட்டான், இடது பக்க மிட்டாய்க் கடைக்குள்ளிருந்து கையில் ஒரு சிறு பொட்டலத்துடன் இறங்கும் நெல்லையப்பன் இவனைக் கண்டுவிட்டான். கடையோரத்தில் ஸ்டேன்ட் போட்டு நிறுத்திவைத்திருந்த சைக்கிளைப் பிடித்தவாறு இவனைப் பார்த்துச் சிரித்தான் நெல்லையப்பன். பதிலுக்குச் சிரித்துவிட்டு அவன் முன்னால் நின்றான் இவன். நடையுடை பாவனைகளில் எல்லாம் எப்போதும் இருக்கும் ஒருவித அசிரத்தையுடன்தான் இப்போதும் நெல்லையப்பன் காட்சி தந்தான். எண்ணெயில்லாத தலை மயிர், ஷவரம் செய்யாத முகம், அங்கங்கே கறைபடிந்த கசங்கிய அழுக்கு சட்டை வேட்டி,


ஊமைத் துயரம்

 

 ஆபீஸிலிருந்து நடக்க நடக்க வீட்டின் தொலைவு கூடிக் கொண்டே போவதுபோல் நாராயணனுக்குத் தோன்றியது. அன்று காலையில் நடந்த நிகழ்ச்சியின் கனம் ஒரு பெரும் சுமையாய் அவனை அழுத்திக் கொண்டிருந்தது. விடைபெற்றுக் கொண்டிருந்த நித்திரை தேவியை வலுக்கட்டாயமாய் பிடித்திழுத்து வைத்துக் கொண்டு அவன் சரசமாடிக் கொண்டிருந்த காலை நேரம்… அழைப்பு மணி வீறிட்டது. வெளிக்கதவு திறக்கும் சப்தம். ஒரு நிமிட நேர நிசப்தம். பிறகு தன் அருகில் வரும் காலடியோசை கோமதியின் குரல்… யாரோ உங்களைத் தேடி வந்திருக்காங்க…


கூறாமல்

 

 இனியும் தாமதிக்க முடியாது என்பதை அவர் திட்டவட்டமாக உணர்ந்தார். சென்ற சில மாதங்களாய், ஆண்டுகளாய் பல சந்தர்ப்பங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ளில் உறைந்த சங்கதிதான். இருந்தும், தவிர்த்து தவிர்த்து, உள்ளத்தையும் ஐம்புலன்களையும் சிறுகச் சிறுக பக்குவப்படுத்திக் கொண்டிருந்ததெல்லாம் இனி முழு மூச்சாய் செயலுக்குக் கொண்டு வந்து விடவேண்டியதுதான். சோவென்று தகர்த்துப் பெய்யும் அடைமழை… இந்த மத்தியானப் பொழுதை மூவந்திக் கருக்கலாய்க் காட்டும் மழை மேகங்கள். மாடியில் இங்கே தன்னுடைய இந்த சின்னஞ்சிறிய தனி அறையில் உட்கார்ந்து கொண்டு