கதையாசிரியர் தொகுப்பு: தோப்பில் முஹம்மது மீரான்

9 கதைகள் கிடைத்துள்ளன.

இறக்கை இழந்த பறவைகள்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தோப்பில் முஹமது மீரான்: இவர் எழுதியவை பெரும்பாலும் இஸ்லாமிய சமூகத்தின் கதைகள். ஆனால் இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப்போவது இவருடைய எழுத்தின் சிறப்பு. இவருடைய கதைகள் சமுதாயத்திற்கு நேராக வெளிச்சம் காட்டும் கதைகள் அல்ல. வகுப்புவாத சிந்தனையால மனிதநேயம் தொலைந்துபோவதை, மேல்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் தனிமையுணர்வோடு தவிப்பதை, தாய் தந்த உறவுகளை இழுத்து அறுத்துக் கொண்டு


ஒரு குட்டித் தீவின் வரைபடம்

 

 (ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நோன்புப் பெருநாள் நெருங்கும்போதுதான், ஊருக்குள் தலைச்சுமை ஜவுளி வியாபாரி நாராயணன் வருவது வழக்கம். சட்டை வேஷ்டி நிக்கர் என்று விளித்துக் கூவாமல், நுகர்வோரைக் கவரும்படி வசப்படுத்திய விசித்திரமான ஒரு குரலை நீட்டி எழுப்பிக் கொண்டு சந்து பொந்து களில் திரிவான். துணி அளந்து கொடுக்க, கையில் ஒரு கெஜக்கோல் இருக்கும். நோன்பு பிறை பத்து ஆனதும் நாராயணன் ஜவுளி மூட்டையுடன் ஊருக்குள் நுழைந்துவிடுவான். அவனுக்குத் தெரியும், செல்வந்தர்


வானவர்கள் செல்லும் இடங்கள்

 

 இறந்துவிட்ட, வெளியூர்வாசியான ஷேக் அப்துல்லா மகன் அஹமது கபீர் என்பவருடைய மய்யம் அடக்கம் செய்வது தொடர்பான ஜமாஅத் (ஊர்) நிர்வாக சபை முதலில் இரண்டுமுறை கூடியது. முதல் இரு முறை நடந்த பேச்சு வார்த்தையிலும் எந்த முடியும் ஏற்படாமல் கூட்டம் கலைக்கப் பட்டதால் மூன்றாவது சுற்றுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. ஜமா அத் தலைவரும் செயலாளரும் முரண்பாடான கருத்துக்களுடையவர் களாகியிருந்ததின் நிமித்தம், உறுப்பினர்களில் பலர் இரு அணிகளாக நின்று காரசாரமாக விவாதித்தனர். காலையில் நடந்த முதல் கூட்டத்தில்


சூட்சும இடைவெளி

 

 (1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்க வேண்டுமென்ற தணியாத ஆசை எனக்கு. ஆனால் படுக்கையில், இருக்கையில், நடக்கையில், பயணிக்கையில்… எந்நேரமும் மரண பயம் என்னை மீசை முறுக்கி ஓங்கிய அரிவாளுடன் துரத்திக் கொண்டிருக்கிறது. பள்ளிவாசலில் போகும்போது பயானில் (சொற்பொழிவு) மவுலவியும், தெருவில் நடக்கையில் மதப் பிரச்சாரம் செய்வோரும் எதிர்வரும் மரணத்தைச் சொல்லியே பயமுறுத்துகிறார்கள். அவ்வளவுக்குப் பெரிய உருவமா மரணம் என்ற கேள்வி அடிக்கடி எனக்குள்


இரைகள்

 

 (ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இலவச ஆம்புலன்ஸ் உதவிக்குக் கூப்பிட வேண்டிய தொலைபேசி எண்கள் குறிக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் ஓரங்களில் நாட்டப்பட்ட நெடுஞ்சாலை. சாலை ஓரங்களில் தயார் நிலையில் நிற்கும் பளபளப்பான ஆம்புலன்ஸ்கள் பார்ப்பதற்குக் கவர்ச்சியாகத்தானிருக்கும். அனைத்து வசதிகளும் அமையப் பெற்ற விலை உயர்ந்த வெண்ணிற வாகனங்களை மக்கள் சேவைக்காகச் சாலை ஓரங்களில் நிப்பாட்டியிருக்கும் கருணை உள்ளங்களை, அது வழியாகப் பயணிக்கும் போதெல்லாம் முன்பு வாழ்த்தாமல் இருந்ததில்லை. இப்போது பார்த்தால் எரிச்சலாகவும் பயமாவும்


தங்க வயல்

 

 (ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) புஸ்தகம் வாங்குவது குறைஞ்சிடுச்சி என்கிறதில எனக்கு உடன்பாடு இல்லே. வெளியீட்டாளர்கள் எழுத்தாளர்களை ஏமாத்தறதுக்கு டி.வி.யை முன்னிறுத்துறாங்க. டி.வி. யாரை பாதிக்குதுன்னா சாதாரண வாசகர்களைத்தான். நமக்கெல்லாம் பெண் ரசிகைகள் கம்மி. சுந்தர ராமசாமியின் நாவல்களை பாதிக்காது. நீல பத்மநாபனோட பள்ளிகொண்ட புரத்தையோ, தலைமுறைகளையோ பாதிக்காது. அசோகமித்ரனோட `தண்ணீர்’ஐ பாதிக்காது. ஜெயமோகனோட `ரப்பர்’ஐ பாதிக்காது. பாலகுமாரனோட நாவல்களை பாதிக்கும். சிவசங்கரியை பாதிக்கும். ஒரு நல்ல வாசகனுக்கு, படிப்பதில் கிடைக்கும் இன்பம்


45வது வார்டு வேட்பாளர்

 

 மார்கழிப் பனி பொழிந்து கொண்டிருந்தது. இருள் சூழ்ந்திருந்த மயானம், பராஅத் (புதுக்கணக்கு) அன்று ஒளி மயமாகக் காணப்பட்டது. புதைகுழிகளில் கிடக்கும் உற்றார் உறவினர்களைப் பார்த்து, நீங்கள் முந்தி விட்டீர்கள், நாளை நாங்களும் உங்களோடு வந்து சேருவோம்’ என்று கண் கசியாமல் ஆறுதல் வார்த்தைகள் சொல்லிவிட்டு மயானத்தி லிருந்து திரும்புவார்கள். இனி, அங்கு செல்வது அடுத்த ஆண்டில் இதே பராஅத் இரவில். உருண்டு போன ஓர் ஆண்டிற்குப் பின் மீண்டும் வந்த பராஅத் இரவில் மயானத்திற்குச் சென்று ஆறுதல்


நிற்காத கால்

 

 புகழ்பெற்ற அந்தக் கல்லூரியில் புதுசாகத் தொழில் கல்வி துவங்கப் போவதாகப் பத்திரிகையில் விளம்பரம் வந்தபோது பையன் அடம் பிடித்தான். நல்ல கோர்ஸ், வெளி நாட்டிலும் உள்நாட்டிலும் வேலை வாய்ப்பு. எனி டிகிரி என்று விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்தது பிகாம் படித்த அவனுக்குத் தெம்பூட்டியது. எங்கிருந்து பணம் திரட்டி அனுப்பினான் தெரியவில்லை. விண்ணப்பப் படிவம் தபால்காரர் என்னிடம் தரும் நேரம் அவன் வீட்டில் இல்லை, திறந்து படிவத்தில் கண்களை ஓடவிட்ட போதே நெஞ்சு படபடத்தது. நுழைவுத் தேர்வு எழுதவேண்டும்.


அனந்தசயனம் காலனி

 

 இரைந்து வரும் பாயும் பஸ்ஸில் ஓரமாக உட்கார்ந்திருந்த போது துரிதமாக ஓடுவது ரோட்டோரத்து மக்களா பேருந்தா என்ற சந்தேகம் மனசில் கடித்துத் தொங்கிக் கொண்டிருந்தது. என்னைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களையும் மரங்களையும் மிருகங்களையும் முழித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். நெல் கதிர்மணிகளைச் சூடி நிற்கும் வயல்களும் குலை தள்ளி நிற்கும் வாழைத் தோட்டங்களும் ஒரு சக்கரத்தில் சுழன்று கொண்டிருந்தன. ரோட்டோரத்து மரங்களின் தலையிறீருந்து உதிர்ந்த காற்றில் கரத்தில் ஒரு செய்தித்தாள் துண்டு தத்தியது. அப்போதுதான் நான் தேடிச்செல்லும் பேராசிரியர்