கதையாசிரியர் தொகுப்பு: தூரன் குணா

3 கதைகள் கிடைத்துள்ளன.

நனவில் நுழைந்த கனவு

 

 நினைவுத்திரள் உருப்பெறுவதற்கு முன்னான குழந்தைப்பருவத்தின் உறக்கங்களில் கனவுகள் கண்டேனா என்பதை சரியாகச் சொல்லமுடியவில்லை. ஆனால் நினைவு தெரிந்த பின்னால் உறக்கத்தில் கனவுகள் வராத இரவுகளே இல்லையென்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். பெரும்பாலும் துர்க்கனவுகள். சுப கனவுகளை எண்ணினால் ஒரு கை விரல்களே போதுமானது. ஒரு கனவை அது கனவென்று அறிந்துகொள்ள நனவு என்ற வேறுபாட்டையும் பிறகு அந்த நனவு திரண்டு திரண்டு உருப்பெறும் நினைவையும் அறியவேண்டியிருக்கிறது. நனவைப் பாதரசமென்றும் நினைவைப் பசையென்றும் சொல்வேன். ஆனால் கனவைப்பற்றி என்ன


இருளில் மறைபவர்கள்

 

 அவனுடைய தூரநிலத்துக் கிராமத்திலிருந்து ஏராளமானவர்கள் இந்த நகரத்திற்கு பிழைக்க வந்திருந்தார்கள். முழுக்காற்சட்டை அணியத்துவங்கும்,மீசை முளைக்கும் பருவத்தில் அவர்களின் தடத்தில் இவனும் வந்தான்.உழைப்பவனை இந்த ஊர் கைவிடுவதில்லை என்ற பேச்சு இவனுக்கும் உண்மையானது. எத்தனையோ பொறுப்புகளை சுமந்துகொண்டு ஏராளமான மனசஞ்சலங்களோடு இங்கே வந்த விடலைப் பையன் இப்போது பொறுப்புகளை நிறைவேற்றும் முதிர் இளைஞனாகி விட்டான். வெகுகாலம் நண்பர்களோடு வெவ்வேறு அறைகளில் வசித்திருந்தவன் சில வருடங்களாக தனியாகத்தான் தங்கியிருக்கிறான்.புறநகர்ப்பகுதியில் அமைந்த லைன் வீடுகளில் கடைசி வீடு. ஏதோ ஒரு கணத்தில்


திரிவேணி

 

 குயிலாத்தாள் (எ) மயிலாத்தாள் பொழுது உச்சிக்கு ஏறுவதற்கு முன்பே திண்ணைக்கு வந்துவிடுவாள். ஓட்டுச்சாய்ப்புக்குக் கீழே வெயில் திண்ணையின் மேல் ஏறியும் ஏறாமலும் அலைந்துகொண்டிருக்கும். முன்னாலிருந்த இரண்டு வீடுகளும் இடிந்து குட்டிச் சுவராகிவிட்ட பின்பு ஊரின் தலைவாசல் தெளிவாகத் தெரிகிறது. அங்கே நினைவு தெரியத் தொடங்கும்போது சிறு கொம்புகளாய் இருந்த வேம்பும் பூவரசும் காலத்தின் வடுதாங்கிப் பெரிதாய்க் கிளை பரப்பி நிற்கின்றன. விநாயகனுக்குக் கோவில் கட்டியபோது வேம்பை உள்வைத்து சுற்றுத் திண்ணையும் கோவில் வாசலில் நீண்ட கல் திண்ணைகளும்