கதையாசிரியர் தொகுப்பு: தாட்சாயணி

16 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு மரணமும் சில மனிதர்களும்…

 

 அம்மம்மாவிற்கு நிலை கொள்ளாத மகிழ்ச்சியாக இருந்தது. கண்களூடு கரையப் பார்த்த கண்ணீர் வேறு. “இந்தாடியம்மா சாப்பிடு…. இதெல்லாம் அப்ப கொம்மா தேடித் தேடிக் கொண்டந்து நட்டது தெரியுமே… பார் இப்ப அது காய்க்கிற நேரம் அனுபவிக்கக் கொடுப்பினை இல்லை…” நன்கு முற்றிப் பருத்திருந்த கொய்யாக்காய்களை நடுங்கும் விரல்களால் நயனியிடம் கொடுத்தபடி அவள் கைகளைத் தடவி அங்கலாய்த்தாள். “ என்ரை குஞ்சு, எப்பிடி வளந்திட்டாய்…? பாத்து எவ்வளவு காலம்…?” ராசாத்தி ஆவலோடு அக்காவின் மகளைப் பார்த்தாள். நெடுநாளின் பின்


ஒரு பிள்ளையாரின் கதை

 

 பிள்ளையாருக்குச் சலிப்பாக இருந்தது. கலகலவென்று என்ன மாதிரி இருந்த இடம். ஒரு நாளைக்கு எத்தனை பேர் வந்து அவர் முன் மன்றாடிச் சென்றிருப்பார்கள். அவர்களில் ஒருவரைக் கூட இன்று அயலில் காண முடியவில்லை. ஓ…வென்று வானம் பார்த்த வெறுவெளி. மனிதர்கால் படாமற் போனதால் குத்துச்செடிகள் ஆங்காங்கு பூமியைப் பிளந்து வானத்தை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு சிறிய ஓலையால் வேய்ந்த கொட்டிலில் பிள்ளையார் வெயிலையும் மழையையும் தன்னிச்சையாய் அனுபவித்தபடி விழித்துக் கொண்டிருந்தார். முன்னால் போடப்பட்ட திரைச்சீலை காற்றில் அலைந்து


விடுபடல்

 

 சந்தியா காத்திருந்தாள். நேரம் ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கால்மணி நேரத்துக்கும் கூடுதலாகக் காத்திருந்தாள். இவளோடு நின்றிருந்தவர்கள் ஒவ்வொருவராய்க் கரைந்திருந்தனர். ஒவ்வொரு பஸ்ஸும் ஒவ்வொருவரை ஏற்றிப் போயிற்று. இவள் ஏறவில்லை. சனங்கள் அதிக மென்றில்லை. ஏறியிருக்கலாம். ஏறவில்லை. அடிக்கடி மணி பார்த்துக் கொண்டு காத்திருந்தாள். இப்போது இன்னும் கொஞ்சம் பேர் புதிதாகச் சேர்ந்திருந்தனர். சற்றுத் தூரத்தில் மெல்லிய பையனொருவன் நடந்து வந்துகொண்டிருந்தான். பதினேழு, பதினெட்டு வயது இருக்கக்கூடும். இடையிடையே கண்ட ஞாபகம். வெள்ளைச் சீருடையோடு புத்தகப்பை கனக்க கண்களில்


பெண்

 

 இவளுக்கு முடியவில்லை. கண்கள் கனத்தன. தலை பாரமாகிச் சரிந்தது. எழும்ப முடியவில்லை. இருந்தாலும் எமும்ப வேண்டியிருந்தது. பக்கத்தில் கிருஷ்ணன் படுத்திருந்தான். இவள் அயர்ச்சியை மறந்து அவனை ஒரு கணம் பார்த்தாள். இது வரைக்கும் இப்படி நடந்ததில்லை. மணமான பிறகு ஒரு நாளுமே இப்படி வருத்தம் என்று வந்ததில்லை. மணமான முதல் மூன்று மாதங்களும் மகிழ்வின் உச்சக் கட்டங்களையே அனுபவித்த காலங்கள் அவை. இப்படி உடல் வருத்தத்தால் கடமைகள் பின் தள்ளப்பட்டு முகம் சுழிக்கப்படக்கூடிய இது மாதிரித் தருணங்கள்


வெளியில் வாழ்தல்

 

 “நான் இண்டைக்கு பதினைஞ்சு குரும்பட்டி சேர்த்துப் போட்டான்…” வேணு கத்திக் கொண்டு வாறான். நானும் சேர்ப்பன் தானை, வழக்கமா நானும் நிறையச் சேர்க்கிறனான் தானை. இண்டைக்கு எனக்குக் குரும்பட்டி கிடைக்கேல்லை என்டவுடனே என்னைப் பழிக்கிறதே… “ம்… நான் தரமாட்டன்…” வேணு எனக்குப் பழிப்புக் காட்டுறான். எனக்கு வாய் கோணி ஒரு மாதிரிப் போச்சு. தலையைக் கவிட்டுக் கொண்டு நிக்கிறன். நெடுக உப்பிடித்தான். எப்பவும் நான்தான் தலையைக் கோணிக் கொண்டு நிக்க வேண்டி வாற… இஞ்சே உங்களுக்கு அலுப்பாக்


தூரப் போகும் நாரைகள்

 

 விழிப்படலத்தில் விழுந்தவை மங்கிய காட்சிகள் தான். ஆனாலும் அவற்றையெல்லாம் தாண்டிக் கொண்டு நெல் வயல்கள் பாரம் தாங்காமல் சாய்ந்து கொண்டிருப்பது பார்வதி ஆச்சியின் மனக் கண்ணில் தெரிகிறது. அறுகு வெளியின் நினைப்பு இந்த உயிர் போக முன்பு எப்படிப் போகும்? வேதனைத் திரைகள் படிந்து சுருங்கிப் போன முகத்தில் பேரக் குழந்தைகளைத் தேடும் ஆவல் போல ஒன்று, அந்த மெல்லிய இளம் பயிர்களையும் தேடும் சோகத்தை நெஞ்சில் இழையோட வைத்தது. “அம்மா……… கொஞ்சம் பால் குடியுங்கோ அம்மா…….”


சிறகிழந்தவன்

 

 முற்றத்தில் ஜிவ்வென்ற சிறகடிப்போடு ஒரு செண்பகம் வந்தமர்ந்தது. இரை தேடும் வேகம். அங்கு மிங்கும் மிலாந்தல் பார்வை பார்த்து எதோ ஒரு இரையைக் கவ்விக் கொண்டது. விரட்டி விடுவார்களோ என்ற பயம் தெளிந்ததாலோ என்னவோ மீண்டும் திருப்தியுற்று இரை தேடலில் ஆர்வமாயிற்று. வெளி விறாந்தையில் அமர்ந்தபடி பத்திரிகை படித்துக் கொண்டிருந்தவனுக்கு அந்தக் காட்சி பட்டென்று மனதில் ஒட்டிக் கொண்டது. இப்படிப் பிறந்திருக்கலாம், ஒரு பறவையைப் போல… எவ்வளவு சுதந்திரமாய், சந்தோஷமாய் இருந்திருக்கும். இரை தேடுதல்… கூட்டுக்குத் திரும்புதல்


ஒன்பதாவது குரல்

 

 வீட்டிலிருந்து வெளிக்கிட்டபோது மழை வருவதற்கான அசுமாத்தம் கொஞ்சமும் இல்லை.ஒழுங்கைக்குள் இறங்கி அவள் நடக்கத் தொடங்கும்போதே மேகமும் கொஞ்சம்,கொஞ்சமாய்க் கறுக்கத் தொடங்கிவிட்டது. கறுப்பு கொஞ்ச நேரத்தில் ஊரையும் மூடுகிற அளவுக்கு வளர்ந்தது.எப்படி மேகம் கறுத்தாலும்,கோவிலுக்குப் போகிறவரைக்கும் துளி விழாமலிருக்க வேண்டுமே,என மனதுக்குள் பிரார்த்தித்தபடிதான் எட்டி நடந்தாள் பாக்கியலட்சுமி.மழை அவளுக்குக் காத்திராமல் ‘சில்’லென்று அவள்மேல் விழுந்து தெறித்தது. முதல் மழைத்துளிகள் கனமாகவிருந்தன. பெரிய தேக்கிலையைக் கூம்பாக்கி அதற்குள் செவ்வரத்தை,நித்யகல்யாணிப் பூக்களை இட்டிருந்தாள்.அந்தக் கூம்பை இடக் கைக்கு மாற்றிக்கொண்டு சேலைத்தலைப்பை சுற்றி


காணாமல் போனவனுக்கு ஒரு கடிதம்

 

 அன்பான உங்களுக்கு இதுவரை எழுதாமல் தவித்து உள்ளுக்குள் பூட்டிப் பூட்டி ஒழித்து வைத்து தாங்க முடியாமல் போன ஒரு கணத்தில் கொட்டிவிடுகின்றேன் எல்லாவற்றையும் எல்லாவற்றையுமே….. உங்கள் முகவரி குறிக்கப்படாமையால் பல பேரின் பார்வையில் சிக்கி இந்தக் கடிதம் படாத பாடுபடப் போகிறதெனத் தெரிந்தும்கூட… எப்படியிருக்கின்றீர்கள்….? உங்கள் நலன் அறியாமல் தவித்து தினந்தினமாய் விடிகாலையில் உங்கள் பெயர் உச்சரித்துக் கொண்டெழுந்து உங்களுக்கான வேண்டுதலோடு… இன்றாவது இன்றாவது என எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்குதலாய்… ஒவ்வொரு நாளும் என்னை விழுங்கிக் கொண்டிருக்கிறது


ரங்கநாதனும் ரஞ்சித் பெரேராவும்

 

 நான் மானிப்பாயிலிருந்து தட்டாதெருச் சந்தியில் காத்திருந்து என் மகன் வீட்டிற்குச் சென்றபோது காலை பத்துமணி ஆகிவிட்டது. எத்தனை தரம் காத்திருந்து அலுத்துச் சலித்துவிட்டது. முன்பெல்லாம் நாள் தவறாமல் மகன் வீட்டுக்குச் செல்கிறவன் இப்போது இந்த செக்கிங் தொல்லையால் சனிக்கிழமை மட்டும்தான் வருகிறேன். வீட்டுக்குப் போனபோது துளசி அதுதான் என் நாலு வயது சின்னப் பேத்தி தெருவில் ‘அவனோடு’ சிரித்துக் கதைத்துக் கொண்டு நின்றாள். திடுக்கிட்டேன். என்னைத் தெருமுனையில் கண்டவுடனேயே, “தாத்தா,தாத்தா…” என்று ஓடிவந்தாள். தட்டுத் தடுமாறி சைக்கிளை