கதையாசிரியர் தொகுப்பு: தபூ சங்கர்

1 கதை கிடைத்துள்ளன.

கண் மையால் எழுதிய கவிதைகள்!

 

 பெண்ணே… நான் பிறப்பெடுத்தபோது உனக்காக என்னிடம் ஒரு பரிசுப் பொருள் கொடுத்து அனுப்பப்பட்டது. அது நீ பிறக்கும் முன்பே உனக்காக உருவாக்கப்பட்ட பரிசு. அதன் மீது முகவரியாக உன் முகம் மட்டுமே வரையப்பட்டு இருந்ததால், உன்னைத் தேடிக் கண்டுபிடிக்க இத்தனைக் காலம் ஆகிவிட்டது. ஏழு கடல், ஏழு மலை தாண்டி உன்னிடம் நான் வரவில்லை என்றாலும், எண்ணற்ற பிறைகள் தாண்டி, எண்ணற்ற பௌர்ணமிகள் தாண்டி உன்னிடம் பத்திரமாகச் சேர்க்க வந்திருக்கிறேன், அந்தப் பரிசுப் பொருளை. அதன் பெயர்…